வடசென்னை: சூழல் அநீதியின் கோரமுகம்

சென்னையின் எண்ணூர்-மணலி பகுதியில் மட்டும் இன்றைய நிலையில் நாற்பதற்கும் மேற்பட்ட ‘சிவப்பு’ பிரிவு தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு தொழிற்சாலையின் கழிவுகள் மற்றும் மாசின் ‘தன்மையை’ (அளவு அல்ல) பொருத்து அதை சிவப்பு, பச்சை, நீலம், வெள்ளை போன்ற பிரிவுகளாக பிரித்துள்ளது மாசு கட்டுப்பாடு வாரியம்). அதில் சிவப்பு பிரிவு அதிக நச்சும், சூழலுக்கு அதி தீவிர தீங்கு விளைவிக்கும் கழிவுகளை வெளியேற்றுவது. எண்ணூர்-மணலி என்ற குறுகிய பரப்பில் எதற்கு இத்தனை சிவப்பு பிரிவு தொழிற்சாலைகள்? இப்போதல்ல, காலனிய வரலாற்றில் இருந்தே வடசென்னை என்று கூறப்படும் இந்த பகுதி அரசின் பார்வையில் குப்பையாகவும் மாசாகவுமே பார்க்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் தாங்கள் தங்கும் பகுதியினை ‘வெள்ளை நகரம்’ எனவும், அங்கு வேலை செய்யும் மக்களின் குடியிருப்பாக கறுப்பர் நகரத்தையும் கட்டி, அதன் இடையே சுவர் எழுப்பி இவை இரண்டையும் பிரித்தனர். இன்று அந்த சுவர் இல்லையே தவிர ஆனால், பார்வை அப்படியே தான் உள்ளது. அதனால் தான் சுதந்திர இந்தியா 1960களில் தொழில்மயமாக்கலை துவங்கும் போது சென்னைக்கு வர வேண்டிய அத்தனை மாசு மிகுந்த தொழிற்சாலைகளும் வடசென்னையில் துவங்கப்பட்டது.

NORTH CHENNAI MAP

1960களில் இங்கு துவங்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், உரம் மற்றும் பெட்ரோலிய தொழிற்சாலை, எண்ணூர் அனல்மின் நிலையம் போன்ற பல தொழிற்சாலைகள் அங்கு எழுப்பப்பட்டன.. இதனை ‘Industrial Clustering’ என்பர். ஒரு மைய தொழிற்சாலையின் கிளை உற்பத்திகள் (By Products), இன்னொரு தொழிற்சாலையின் மைய மூலப்பொருளாக (Raw Material) இருக்கும். உதாரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் கிளை உற்பத்தி பொருட்களை மூலப்பொருட்களாக வைத்து தான் சாயம் தயாரிப்பு, நெகிழி தயாரிப்பு, உரம், பூச்சிகொல்லிகான வேதிமபொருட்கள் உற்பத்தி போன்றவை நடக்கும். அனல்மின் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நிலக்கரி, அதனை சூழ்ந்து இரும்பு மற்றும் எக்கு தொழிற்சாலைகளை உருவாக்கும். இந்த தொடர் தொழிற்சாலைகள் இன்னும் நச்சான மாசுகளை இங்கிருக்கும் காற்றிலும், நீரிலும், நிலத்திலும் வெளியேற்றும். அதனைச் சுற்றி ஒரு அமைப்பு சாரா தொழில்வர்க்கம் இயங்கத் துவங்கும். இப்படித்தான் வடசென்னையும் அதன் மக்களும் நஞ்சிலும் மாசிலும் வாழத் துவங்குகினர். இதனைத் தடுப்பதற்கு பதிலாக அரசு புதிய துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் போன்றவற்றை கட்டி இந்த ‘Clustering’ஐ ஊக்குவிக்கிறது.

இப்படி ‘Follow up Industries’ னால் மட்டுமின்றி அரசின் ‘நில பயன்பாட்டு கொள்கை’ இந்த ‘Clustering’ஐ இன்னும் தீவிரமாக நடைபெற செய்கிறது என்கிறது உலக வங்கியின் வளர்ச்சி ஆய்வுக் குழு (The World Bank, 2003). கொசஸ்தலை ஆறு கடலில் சேரும் இந்த கழிவெளி பகுதி ஒரு ‘Eco-sensitive region’. இதன் சூழலை நம்பி பல கிராமங்கள் இருக்கின்றன. சிறிது சமநிலை மாறினாலும் மீட்டுடெடுக்க முடியாத சூழல் ஆபத்துகளை இந்த மக்கள் சந்திக்க வேண்டி வரும். ஆனால் ‘அரசின் பார்வையில்’,  காலனிய அரசில் இருந்து இந்திய அரசு வரை, வடசென்னை என்பது தாழ்த்தப்பட்ட மக்களின், உபயோகமற்ற, வருவாய் அற்ற நிலம். அரசின் இந்த பார்வை, 40+ சிவப்பு பிரிவு தொழிற்சாலைகளை இங்கு குவிய வைத்துள்ளது, இன்னும் பிற பிரிவு தொழிற்சாலைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை. இது வளர்ச்சி என்ற பெயரில் வடசென்னைக்கும் அதன் மக்களுக்கும் நிகழ்ந்த, நிகழ்த்தப் பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு ‘சூழல் அநீதி’.

வடசென்னையில் உள்ள சிவப்புப் பிரிவு தொழிற்சாலைகளின் பட்டியல்

  • Balmer Lawrie & Co Ltd -Barrel Division
  • Balmer Lawrie & Co Ltd -Grease division
  • Balmer Lawrie & Co Ltd -Leather Chemical Dn
  • CETEX Petrochemicals Ltd
  • CETEX Fine Chem- Unit-1
  • Chennai Petroleum Corporation Limited (CPCL) – Resid Upgradation Plant
  • Chennai Petroleum Corporation Limited(CPCL) – DHDS Plant
  • Chennai Petroleum Corporation Limited(CPCL) – Propylene Butylene Lube Plant
  • Chennai Petroleum Corporation Limited (CPCL) Hexane Plant
  • Chennai Petroleum Corporation Limited – Crude oil Pipeline project.(CPCL)
  • Chennai Petroleum Corporation Limited (CPCL)- TWENTY MW GTG POWER PLANT
  • Chennai Petroleum Corporation Limited (CPCL) – Tertiary Treatment Plant
  • Chennai Petroleum Corporation Limited (CPCL)-Refinery I, II & CPP
  • Chennai Petroleum Corporation Limited,(CPCL) Refinery III
  • COROMANDEL INTERNATIONAL LIMITED
  • Indian Additives Ltd.(IAL)
  • Indian Oil Corporation Limited, Chennai -Madurai Pipeline Project
  • Indian Oil Corporation Limited, Chennai -Airport ATF Pipeline Project
  • Indian Oil Corporation Limited, ChennaiBangalore Pipeline Project
  • INOX Air Products Ltd
  • IOT Infrastructure & Energy Services Ltd(CPCL)
  • Kothari Petrochemicals Ltd.
  • M/s Madras Fluorine Products Ltd.,(MFPL)
  • M/S.NORTH CHENNAI THERMAL POWER STATION-STAGE-II
  • Madras Fertilizers Ltd (MFL)
  • Madras Fertilizers Ltd (MFL) -TTP
  • Manali Petro Chemical Ltd (MPL)-II
  • Manali Petro Chemical Ltd-II (MPL)(Captive Power Plant) Biomass
  • Manali Petro Chemical Ltd(MPL)-I
  • NATCO Pharma Ltd
  • NORTH CHENNAI THERMAL POWER STATION (STAGE I)
  • NORTH CHENNAI THERMAL POWER STATION STAGE III (1X800MW)
  • NTPC TAMILNADU ENERGY COMPANY LIMITED
  • PIRAMAL ENTERPRISES LIMITED, SRF Ltd.
  • Technical Textile Business
  • Tamilnadu Petro Products Ltd (TPL)-Linear Alkyl Benzene(LAB)
  • Tamilnadu Petro Products Ltd (TPL)-ECH
  • Tamilnadu Petro Products Ltd (TPL)-HCD,
  • The India Cements Ltd
  • Indian Oil Petronas Pvt Ltd
  • Zuari Cements
  • Hindustan Petroleum Corporation Limited
  • Bharath Petroleum Corporation Limited

– ஹரி பாரதி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments