அது வெறும் ‘எண்ணெய்க் கசிவு’ மட்டுமல்ல…

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (காவிரி படுகை) ராஜேந்திரன், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “எண்ணெய்க் கசிவை 15 செண்ட் விவசாய நிலம் உள்வாங்கியுள்ளது. நாங்கள் அதற்கேற்றாற்போல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவோம்”, என கூறியிருந்தார். நிலத்தின் மேற்பரப்பில் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தின் அளவு 15 செண்ட் என்றால், எண்ணெய்க் கசிவின் ஆழம் மற்றும் அடர்த்தியைக் கருத்தில் கொண்டால், பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தின் அளவு அதைவிட பெரிதாக இருக்கும். இதனால், சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள சீர் கேடுகளை மறுசீரமைப்பு செய்வது குறித்து, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எதையும் குறிப்பிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அதே கட்டுரையில், ஓ.என்.ஜி.சி.யின் காரைக்கால் பிரிவு மேலாளர் குல்பீர் சிங், “எண்ணெய்க் குழாயின் அடிப்பகுதியில் சிறிய துளை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் 2 மாதத்தில் இதுகுறித்த அறிக்கை தயாராகும்”, என்று கூறி யிருக்கிறார். அந்த அறிக்கை தயாராக இருக்கும்போது, எண்ணெய்க் கசிவால் சுற்றுச்சூழல், மனிதர்கள், அவர்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம், நிலத்தடி நீராதாரம் இவை எல்லாவற்றிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சரிசெய்ய முடியாத நிலைமைக்கு சென்றிருக்கும். அதுமட்டுமல்லாமல், அந்த அறிக்கை பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாக காண்பிக்காமல், அதனை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ரகசியமாக்கிவிடும்.

‘எண்ணெய்’ கசிவு:

விகடன் வார இதழைச் சேர்ந்த இளம் பத்திரிக்கையாளரான நியாஸ் அகமது, கதிராமங்கலத்தை சேர்ந்த 3 பெண்களிடம் நேர்காணல் நடத்தி, அதனை யூடியூபில் பகிர்ந் திருந்தார். அதில், 3 பெண்களுடன் கலங்கலான, அசுத்தமான தண்ணீர் பாட்டில் இருந்தது. இதுகுறித்து பேசிய நியாஸ், அந்த தண்ணீர் தலித் சமுதாயத்தினர் வசிக்கும் குடி யிருப்பில் இருக்கும் குழாயிலிருந்து எடுக்கப் பட்டது எனத் தெரிவித்தார். அந்த பெண்கள் எண்ணெய்க் கசிவு குறித்தும், நச்சு கலந்த அருவருப்பான காற்று கதிராமங்கலத்தில் பரவி யுள்ளது குறித்தும் பேசினர்.

அதன்பிறகு, நியாஸ் அகமது அளித்த கல்லூரி மாணவரிடம் ‘எண்ணெய்’ கசிவு, அந்த எண்ணெய் எப்படி இருந்தது, அதன் வாசனை எப்படி இருந்தது என்பது குறித்தும் நான் பேசினேன். “அன்றைக்கு கசிந்தது வெறும் ‘எண்ணெய்’ மட்டுமல்ல. அது ‘எண்ணெய்’ கலந்த தண்ணீர். அந்தத் தண்ணீர் சந்தன நிறத்தில் இருந்தது. அதனுடைய வாசனை தாங்க முடியாத அருவருப்புக் கொண்டதாகவும், மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்தது. எண்ணெய், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு இவை மூன்றும் கலந்த கலவையின் வாசனையாக இருந்தது”, என அந்த மாணவர் கூறினார். அவருடைய விளக்கத்தின்படி, அந்த எண்ணெய்க் குழாயிலிருந்து கசிந்தது எண்ணெய் மட்டுமல்ல. பல கழிவுகள் பெட் ரோலுடன் கலந்து “உற்பத்தியான தண்ணீர்” என்பதுபோல் தோன்றுகிறது. அந்த மாணவர் கூறியதைவிட அதன் வாசனை அடர்த்தியாக இருக்குமேயானால், தடி ஏந்திய காவல் துறையினர், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் மற்றும் கிராமத்தினர் கொடிய விஷங்கள் கலந்த கலவையை சுவாசிப்பதில் அனைவரும் பங்கு வகித்துள்ளனர். பெட்ரோலியம் எப்போதும் நீர்த்தேக்கத்திற்குக் கீழே உள்ள பாறை மண்டலத்திலோ அல்லது அந்த மண்டலத்தின் துகள்களிலோ காணப்படுகிறது. அதிலிருந்து, எண்ணெய் அல்லது எரிவாயு பிரித்தெடுக்கப்படும்போது, நீர்த்தேக்கத்தில் உள்ள அழுத்தம் தண்ணீரை கிணற்றுக்குள் தள்ளிவிடும்.. இதனால், நீர் உப்புத்தன்மை மற்றும் அரிப்புத் தன்மை கொண்டதாக மாறுகிறது.அதில், நச்சுத்தன்மை உடைய பென்சீன், சைலீன், டொலீன், பாலிசைக்ளீக் அரோமேட்டிக்ஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பங்கள், ஹைட்ரஜன் சல்ஃபைடு உள்ளிட்ட சல்ஃப்ரஸ் எரிவாயுக்கள், லெட், குரோமியம், நிக்கல், செலீனியம், பேரியம், ஸ்ட்ரோண்டியம், ஆர்செனிக், மெர்க்குரி, ஆண்டிமோனி உள்ளிட்ட கன உலோகங்க்கள், கதிர்வீச்சு கொண்ட மூலக்கூறுகளான யுரேனியம், ரேடான், ரேடியம் உள்ளிட்டவை கலந்திருக்கும். இந்த பெட்ரோலியம், எரிவாயுக்களை சேகரிக்க அல்லது ஓரிடத்திலிருந்து கடத்தப் பயன்படும் குழாயில், அரிப்பு மற்றும் உப்புத் தன்மை கொண்டதாக மாறிவிடும். பென்சீன், சைலீன், டொலீன் மற்றும் ஹைட்ரஜன் சல்ஃபைடு காற்றில் பரவும். இதில், பென்சீன் புற்றுநோயை
ஏற்படுத்தக்கூடியது. குழந்தைகளுக்கு ரத்தப் புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு இவை கொடியவை. நச்சு மற்றும் நோய்கள் குறித்த அமெரிக்க நிறுவனம் பதிவு செய்தவை இது: “ஹைட்ரஜன் சல்ஃபைடு சுவாசத்தில் எரிச்சலூட்டக்கூடியது. நுரையீரல் நீர்க்கட்டு, குமட்டல், சித்தபிரம்மை, நடுக்கம், வலிப்பு, தோல் மற்றும் கண் எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியது.” இதைத்தான் கதிராமங்கலம் கிராம மக்கள், காவல்துறை கண்காணிப்பாளர், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆகியோர் சுவாசிக்கின்றனர். இலகுவான வாயுக்கள் குறைந்த அளவு காற்றழுத்தத்தைக் கொண்டிருப்பதால், அவை நிலத்தடி நீரில் இன்னும் அதிகமாக கலந்து விடும். இந்த நச்சு வாயுக்கள் உடலில் உள்ள அனைத்து உடற்கூறுகளையும் பாதிக்கும். பாதரசம் மூளை மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கும். செலீனியம் எலும்புகளையும், உடையக் கூடிய எலும்புகள், நகங்கள், மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆண்டிமனி, தசைக் கூட்டு பகுதியை பாதிப்பதால்,மூட்டு வலி, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். கதிர் வீச்சு கொண்ட மூலக்கூறுகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது. அதை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும். ‘எண்ணெய்க் கசிவு” ஏற்பட்ட அந்த நிலம் இறந்துவிட்டது. எந்த மகசூலும் இனி அந்த நிலம் தராது. அந்த விவசாயி, ‘எண்ணெய்க் கசிவால்’ பாதிக்கப்பட்ட நிலத்தில் விலங்குகள், குழந்தைகள் யாரும் வராமல் பாதுகாக்க வேண்டும், எண்ணெய்க் கசிவு அகற்றப்படும் வரையாவது அதனை செய்ய வேண்டும். இதை நான் எழுதும்போது, என்னுடைய நண்பர் பியூஷ் மனுஷ் என்னைத் தொடர்பு கொண்டார். கதிராமங்கலத்தில் நிலத்தடி நீர் அசுத்தமாகிவிட்டதாக பலரும் கூறியதாக அவர் தெரிவித்தார். மேலும், குழாயிலிருந்து தண்ணீரைப் பிடிக்கும்போது அது தெளிவாக இருப்பதாகவும், மெல்ல மெல்ல கலங்கலாக அசுத்தமான நீராக மாறுவதாகவும் கூறினார். “அந்தத் தண்ணீரில் சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு எண்ணெய்ப் படலம் தெளிவாக தெரிந்தது”, என்றார். இது உண்மையானதாக இருந்தால் நிலைமை நாம் நினைப்பதைவிட பயங்கரமானதாக உள்ளது என்பது தெளிவு. எண்ணெய்க் கிணறுகளின் பக்கச்சுவர் தண்ணீர் மற்றும் எண்ணெய் அதிலிருந்து வெளிவர முடியாத வகையில் உறையிடப்பட்டிருக்கும்.

அதன் மூலம், எண்ணெய் நீர்நிலைகளில் பரவுவதைத் தடுக்க முடியும். இந்த முறையை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான், அதில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால், பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பே சரிசெய்ய முடியும். இதுதான் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இதனை செய்யத் தவறினால், கச்சா எண்ணெய் நிலத்தடி நீரில் கலக்கும். நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதை சரிசெய்வதென்பது மிகவும் செலவுமிக்கது. அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் முறையாகும். முதலில், இம்மாதிரியான பிரச்சனைகளில், நிலத்தடி நீர்மட்டம் எந்தளவிற்கு பாதித்துள்ளது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நீராதாரத்திற்கு மாற்று வழியை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த எண்ணெய்க் கசிவில் ஓ.என்.ஜி.சி செய்யத் தவறியவை இவை:

•  பெட்ரோலியம் பிரித்தெடுப்பது மற்றும் அதனைக் கடத்துவது உள்ளிட்டவை குறித்த செயல்பாடுகளை மக்களிடம் ª த ரி ய ப் ப டு த் த வு ம் வி ள க் க வு ம் தவறியது.

•  கச்சா எண்ணெயில் உள்ள வேதிப் பொருட்கள் குறித்து மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தவில்லை. அதன் விளைவுகளிலிருந்து மக்கள் தங்களை எப்படிக் காத்துக்கொள்வது என்பதையும் விளக்க தவறியது.

•  நிலத்தடி நீர்மட்டம் மற்றும் அதன் தரத்தை தொடர்ந்து சோதிக்க வேண்டும். கச்சா எண்ணெய் நிலத்தடி நீருடன் கலந்திருக்கிறதா என்பதை உறுதிப் படுத்தியிருக்க வேண்டும்.

•  எண்ணெய்க் கசிவு குறித்த திட்டத்தை வகுக்க வேண்டும்.

• இப்படியான கசிவு ஏற்படும்போது மாவட்ட நிர்வாகம், காவல் துறை,
ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தியிருக்க வேண்டும்.

இந்தக் கசிவு குறித்து ஓ.என்.ஜி.சி. நிர்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் கூட தெரிவிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர். ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இல்லை. ஓ.என்.ஜி.சி. தேவையற்ற செயல்களைத்தான் செய்கிறது.

அரசாங்கம் என்னென்ன செய்திருக்க வேண்டும்?

•  அந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட இடத்தில் வேலி அமைத்திருக்க வேண்டும்.

• மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை நடைமுறைப் படுத்தி யிருக்க வேண்டும். ஆபத்தான கழிவுகளை கையாள்தல் மற்றும் அப்புறப் படுத்துதலில் ஏற்பட்ட சூற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டும்.

•  அந்த இடத்தை முழுமையாக சுத்தம் செய்திருக்க வேண்டும்.

• நிலத்தடி நீரின் தரத்தை ஆராய்தல்

• பாதிக்கப்பட்ட நீர்நிலைகளை ஓ.என்.ஜி.சி. தூய்மைப்படுத்தியிருக்க வேண்டும்.

• பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் அந்த நீர்நிலையைப் பயன்படுத்துபவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

• அருகாமைக் கிராம மக்களுக்கு தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை நீண்ட காலங்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.

• இதேபோன்று எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட மற்ற இடங்களைக் கண்டறிந்து மேற் கொண்ட எல்லா நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டும்.

நித்தியானந்த் ஜெயராமன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments