இந்திய அணுசக்தித் துறையின் அனைத்துத் தவறுகளுக்கும் உதாரணம் கூடங்குளம் அணுவுலையே!

நான் என் வாழ்வில் 57 வருடங்களை அணுசக்தி பொறியியலில் செல விட்டுள்ளேன். இந்த நீண்ட காலத்தில் ஒரு நாள்கூட அணுசக்தி பற்றிய சிந்தனை செயல்பாடின்றி நாள் கழிந்ததில்லை. ஆனால் பெரும்பாலும் நான் இக்காலத்தில் பலருக்கும் தலைலைவலியாகவே இருந்திருக்கிறேன். அணுசக்தியைப் பற்றி பேசும்போது எண்ணற்ற விஷயங்களைப் பேசவேண்டி யிருக்கிறது. ஆனால் அவை அனைத்தையும் என்னால் இப்போது விவரிக்க இயலாது. கடைசி ஒரு வருடமாக புதிய அரசு என்ன செய்யப்போகிறது என பார்த்துக் கொண்டிருந்தேன். கூடங்குளத்தின் விதியைப் பற்றி 3 கட்டுரைகளை எழுதிய பிறகு நான் எதுவும் எழுதவில்லை. அப்போது நாம் என்ன நடக்கும் என எண்ணினோமோ அது நம் கண்முன்னே இப்போது நடக்கிறது. பிரதமர் மோடி அணுசக்தித் திட்டங்களை ஆரோக்கியமான திசையில் நகர்த்துவார் என நம்பினேன். ஆனால் நான் முட்டாள். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதை எப்படி (தவறாக) நகர்த்தியதோ இப்போது அது இன்னும் வேகமாய் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

டாக்டர் கோபாலகிருஷ்ணன் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் அணுசக்தி பொறியியல் துறையில் ஆய்வு முனைவர் பட்டம் (PhD) பெற்றவர். இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல ஆண்டுகள் அணுசக்தித் துறையில் பல உயர் பதவிகளில் பணியாற்றியவர். இந்திய அணுசக்தி ஒழுங்காற்று ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அணுசக்தி தொடர்பான பன்னாட்டு அவையின் வரைவுக்குழு தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். பூவுலகின் நண்பர்கள் சார்பில் சென்னையில் நடைபெற்ற அணுசக்தி தொடர்பான கருத்தரங்கில் டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆற்றிய ஆங்கில உரை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஃபுகுஷிமா பேரழிவுக்குப்பின் இரண்டு நாடுகளைத்தவிர பல்வேறு உலக நாடுகளும் தங்களது அணுசக்தித் திட்டங்களை மறுபரிசீலனை செய்தன. அந்த இரண்டு நாடுகளில் ஒன்று சீனா. இன்னொன்று அதை பின்தொடரும் நாம். நான் ஃபுகுஷிமாவுக்குப் பிறகு சீனாவுக்கு 2-3 முறை அழைப்பின் பேரில் சென்றேன். அங்கே பெரிய அளவில் அணுசக்திக்கு எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் அதன் வித்தியாசமான ஒருங்கு (system) இச்செய்திகளை வெளியிடுவதில்லை. ஆனால் இந்தியா ஜனநாயக நாடு. நமக்கு பேசவோ அல்லது எதிர்க்கவோ உரிமையுள்ளது. எல்லாரையும் திருப்திப்படுத்த முடிகிறதோ இல்லையோ அரசு கட்டாயமாக மக்களுக்குச் செவிமடுக்கவும் பதிலளிக்கவும் வேண்டும்.

ஜெர்மனியில் செயல்பாட்டிலிருந்த 17 அணு வுலைகளில் 8 அணுவுலைகளின் செயல்பாட்டை ஃபுகுஷிமாவுக்குப்பின் அந்நாடு உடனடியாக நிறுத்தியது. மேலும் மற்ற அணுவுலைகள் அனைத்தையும் 2022ம் ஆண்டுக்குள் மூடுவதாக கால அவகாசத்துடன் ஒப்புக்கொண்டுள்ளது. சிலர் ஜெர்மனி தனது தேவைக்கு பிரான்சிடமிருந்து மின்சாரத்தைப் பெறுவதாகவும் அது பெரும் பாலும் அணுசக்தியைச் சார்ந்ததும் என சொல்லலாம். ஆனால் குறைந்தபட்சம் ஜெர்மனி இனியும் அணுசக்தியில் தனது பணத்தை செலவிடப் போவதில்லை எனச்சொல்வதை பாராட்டியே ஆகவேண்டும்.

பிரான்ஸ் தனது EPR (European Pressurised Reactor) ஐ இந்தியாவுக்கு விற்க துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மே 2015 இல் பிரஞ்சு நாடாளுமன்றம் தனது அணுசக்தியை சார்ந்திருக்கும் நிலையை 70 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக 2030 ஆம் ஆண்டுக்குள் குறைத்துக்கொள்வதற்கான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதே வரைவு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 40 சதவீதம் வரை 2030க்குள் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது சூரியஒளியில் எந்தேரமும் சூழப்பட்ட இந்தியா போன்ற நாடுகளுக்கு சூரிய மின்சக்தியாக இருந்தாலும் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு காற்றாலை மூலமான சக்தியாகும்.

பல நாடுகளும் தங்கள் அணுசக்தித் திட்டங்களை நிறுத்திவிட்டன. அணுசக்தி திட்டங்களுக்கான செலவுகள் அசுரவேகத்தில் பலமடங்காக அதிகரித்து வருகின்றன. ஆனால் நாம் நம்மிடம் என்னவோ மிகஅதிக பணம் இருப்பதுபோல செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஏன் இந்த
முனைப்பு என எனக்குப் புரியவில்லை. ஆனால் நாம் இந்நிலைக்கு எப்படி வந்தோம் என்பதை வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், தற்போது ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டுமே அணுசக்தித் திட்டங்களின் மூலமாக பணத்தைக் குவிக்க முனையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கம்பெனிகளுடன் உறவாடுபவை.
நாம் இந்திய- அமெரிக்க ஒப்பந்தத்தைப் பற்றி பேசாமல் ஜெய்த்தாப்பூரையோ அல்லது கூடங் குளத்தையோ பற்றி பேச முடியாது. ஏனென்றால் எல்லா பிரச்சினைகளும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தோடு தொடங்கின. நான் போராடும் மக்களின் மீது அதிக அக்கறை உள்ளவன். வெறும் அமெரிக்கா என்பதற்காக நான் எதிர்க்கவில்லை. நான் அமெரிக்காவிலேயே இருந்திருக்கிறேன்; படித்திருக்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவை உலக அரங்கில் இழிநிலையிலிருந்து மீட்க இந்த ஒப்பந்தம் தேவையாயிருக்கிறது என சொன்னார். ஆனால் அதற்கு, வேறு காரணமிருந்தது. சக்திமிக்க ஒரு விசை ஒப்பந்தத்தை உந்திக்கொண்டிருந்தது. இந்திய மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்களும் தொழிற்கூட்டமைப்புகளும் தங்கள் பணத்தைப் போட்டு அமெரிக்க காங்கிரசை லாபி செய்து வந்தனர். நமது சொந்த அரசே இதில் செல்வாக்கு செலுத்த பணம் செலவழித்தது. இது பலருடைய ஒத்துழைப்போடு திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டது; வெற்றிபெற்றது நம்முடைய நலன்களுக்காகவன்று.

இத்தனை பிரயத்தனப்பட்டும் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நபர்கள் மட்டுமே ஒப்பந் தத்தின் உண்மையான விபரங்களையும் அதன் நியாயங்களையும் அறிவார்கள். அணுசக்தி ஆணையத்திலோ அல்லது அமைச்சரவையிலோ உள்ள பெரும்பாலானவர்கள்கூட அந்த விபரங்களை அறியவில்லை. அதனை நுட்பமாக இது செயல்படுத்தப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு “அவர்கள் (அமெரிக்கா) ஏதோ இதிலிருந்து ஆதாயம் பெறுவார்கள் என்றும் நாமும் ஏதோ பெறுவோம்” என்றும் சொல்லப்பட்டது. நாம் என்ன கொடுக்கிறோம் என்று நமக்குச் சொல்லப் படவில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டோலீசா ரைஸ் அமெரிக்காவின் செனட் கேள்விக்குப் பதிலளிக்கும்போதுதான் அவர்களுக்கு என்ன (கிடைக்கும்) என்பது நமக்குத் தெரியவந்தது. இந்திய வெளியுறவுச் செயலர் குறைந்தபட்சம் 10,000 MW அமெரிக்க அணுவுலைகளை வாங்குவதாக உறுதி யளித்திருந்ததை அப்போது அவர் சுட்டிக் காட்டினார். மேலும் அவர் இது அமெரிக்க தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுமென்றும் எத்தனை அமெரிக்க வேலைவாய்ப்புகளை அது உருவாக்குமென்றும் பட்டியலிட்டார். மேலும் இது ஒரு தொடக்கம்தானென்றும் மேலும் பலவிதங்களில் நாம் ஆதாயங்கள் பெறமுடியுமென்றும் தெரிவித்தார். அதுவரை இதைப்பற்றி பாராளு மன்றத்தில் யாரும் அறிந்திராததால் இது ஒரு தற் காலிக பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசிடம் பலமுறை கேட்கப்பட்டிருந்தும் எதற்கும் பதிலளிக்கப்படவில்லை. நமக்குத் தெரிந்தது கொண்டோலீசா ரைஸ் பேசியது மட்டுமே.

இந்த ஒப்பந்தம் ஒப்புதல் பெற்றால் நாம் 1974க்கு பிறகு (இந்தியா முதல்

கூடங்குளம் அணுவுலை மிக ஆபத்தான அணுவுலைகளில் ஒன்று என்பது கால ஓட்டத்தில் நிரூபணமாகும். எந்த பாகங்கள் செயலற்றுவிட்டன என்பது நமக்குத் தெரியாது. ரஷ்யாவில் உலைக்கான உபகரணங்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

அணுகுண்டை சோதித்த ஆண்டு) இதுவரை அறிந்திராத அணுதொழில் நுட்பங்களை அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்வார்கள் என நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவுக்கு இந்த தொழில்நுட்பப் பகிர்வு, குறிப்பாக தான் பலவீனமாக இருந்த இரண்டு தொழில்நுட்ப விஷயங்களில் தேவையாயிருந்தது. அவை யுரேனியம் செறிவூட்டல் மற்றும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் மறுசுழற்சி. இது இந்தி யாவின் அணுஆயுத திட்டங்களுக்கும் அ ணு ச க் தி வி ரி வ £ க் க த் து க் கு ம் தேவைப்பட்டது. அணுஆயுதங்கள் பரவலாகும் கவலையினால் இந்த தொழில் நுட்பங்களை பகிர யாரும் முன்வரமாட்டார்கள். ஆனால் நாம் அவர்களின் அணுவுலைகளை வாங்க
வாக்களித்திருந்ததால் அவர்கள் 123 ஒப்பந்தத்தில் இந்த தொழில்நுட்பத்தை கொடுக்க ஒப்புக்கொண்டிருந்தனர்.

ஆனால் நாம் அமெரிக்கர்களால் ஏமாற்றப்பட்டோம். ஒப்பந்தம் கையெழுத் தாகி இரண்டு மாதங்களில் அமெரிக்கா அணுஆயுத பரவல் உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடுகளுக்கு அந்த தொழில் நுட்பத்தை பகிரக்கூடாது என்று அணுவுலை விற்பனையாளர்களுக்கு உத்தர விட்டது. இந்தியா உறுதியாக அணு ஆயுதப்பரவல் தடைக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்தது. இந்தியா ஏமாற்றப்பட்டுவிட்டது. நமது வெளி யுறவுத் துறை செயலர் சில கடிதங்களை (அமெரிக்காவுக்கு) எழுதினார். ஆனால் அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் மோசடிகளில் சிக்கி நெருக்கடியில் இருந்த காலம். அமெரிக்கா அந்த கடிதங்களை புறக் கணித்து விட்டது.

ஆளும் அரசுதான் இரு அரசுகளுக் கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் தனக்கு இருப்பதாகச் சொல்லமுடியும். ஆனால் நாட்டின் நலனை கருத்தில் கொள்ளும்போது இதில் மாற்று வழிகள் இருப்பதாக கருதுகிறேன். எங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப விஷயங்கள் பரிமாறப்படும்வரை நாங்கள் உலைகளை வாங்குவதை பரிசீலிக்கப் போவதில்லை என கூறலாம். அரசு அந்த வழியைதான் தேர்ந்தெடுக்கும் என நான் எண்ணினேன். ஆனால் தொழிற்துறையின் அழுத்தமே மேலோங்கி நிற்கிறது.

பிரான்ஸ் அணுவுலைகள்

பிரான்ஸிடமும் இதுவே நடந்தது. அவர்கள் எந்த கடிதங்களையும் வெளியிட வில்லை. ஆனால் பிரஞ்சு பிரதமர் சர்« காஸியும் நமது (முன்னாள்) பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கும் இரண்டு மூன்று முறைகள் சந்தித்துக்கொண்டனர். சில துணைக் கடிதங்கள் பிரஞ்சு உலைகளை வாங்கும் வாக்குறுதியுடன் இரு தலைவர்களாலும் கையெழுத்திடப் பட்டன. அதே நேரத்தில் அவர்கள் ERP அணுவுலையின் முதற்கட்ட வடி வமைப்பை முடித்திருந்தார்கள். இதுதான் நமக்காக செய்யப்பட்ட வடிவமைப்பு என்று தெரிவிக்கப்பட்டது. நாமும் ஏற்றுக் கொண்டோம். காகிதத்தில் மட்டுமே இருக்கும்  (Paper Design) எங்கும் இதுவரை கட்டப்படாத அணுவுலைக்கு AERB, AEC மற்றும் திறன்வாய்ந்தவர்களை அர்ப்பணித்துக் கொண்டு நாடு தனக்குத்தானே எப்படி பெருமைப்பட்டுக்கொள்ள முடியும்? உலகில் எங்கும் அந்த உலை இருந்ததாக நமக்கு உதாரணங்கள் இல்லை. அதற்காக எந்த பொரு ளாதார அல்லது தொழில் நுட்ப மதிப்பீடுகளோ இதுவரை செய்யப்படவில்லை. உலகில் தலைசிறந்தவற்றில் ஒன்றாகக் கருதப்படும் பிரஞ்சு அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் (ASN), ERP இன் வடிவமைப்புக்கான ஒப்புதலை நிராகரிப் பதாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ERP- சில மிகச்சிக்கலான மற்றும் கடினமான வடிப்பு  (Forging)  பணிகளைக் கொண்டது. உலகிலேயே வடிப்பு (Forging)  தொழில்நுட்பத்தில் சிறந்ததாக கூறப்படும் அமெரிக்காவாலேயே அதன் மிகச்சிக்கலான வடிவங்களை  (Complecated Geometry) உருவாக்க முடியவில்லை. அதன் அர்த்தம் இந்த வடிவமைப்பு தேறாது என்பதுதான். அதேநேரத்தில் அரீவா நிறுனத்தின்  (Areva)  பங்குகள் சரிந்து அது Électricité de France ஆல் வாங்கப்பட்டுள்ளது. அவை இரண்டும் உடைந்துபோகும்.

இப்படி ஒரு (அபாய) மேகம் இந்த அணு வுலைகளைச் சூழ்ந்திருக்க எவ்வாறு மோடி பிரான்ஸ§க்குச் சென்று மேலும் அதிக உலை களுக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்? பிரதமர் பிரான்சுக்கு செல்வதற்கு முன்பாக (2015), பிரஞ்சு ஒழுங்காற்று வாரியம்  (ASN), AERB க்கு ERPஇன் வடிவமைப்பு குறைபாடுகள் குறித்து கடிதம் எழுதி எச்சரிக்கை செய்தது. இதுகுறித்து அரிவா  NPCIL க்கு தகவலளித்தது. ‘‘நீங்கள் ஏன் எங்களை முன்பே எச்சரிக்கவில்லை’’ என பின்னாளில் கேள்விக்கு உள்ளாவதை அவர்கள் விரும்பவில்லை. இத் தகவல் பிரதமர் அலுவலகத்தை அடைந்ததா என்பது குறித்து எனக்குத்தெரியாது. ஆனால் ஆச்சரியப்படத் தக்கவகையில் பிரதமரின் பிரதிநிதிகள் குழு முன்சென்று இரண்டு அணுவுலைகளை ஆறு அணுவுலைகள் என உயர்த்தினார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதன் கட்டுமானம் 2017ஆம் ஆண்டு வரை  ASN ன் இறுதிப் பதிலுக்காக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாவற்றிற்குமிடையில் “இந்தியா விலேயே தயாரிப்போம்’’ என்ற தொடர்ந்த அறை கூவல் பயமுறுத்துகிறது. அணுசக்தி தொழில்நுட்பம் மிக அதிக செலவு பிடிக்கக்கூடியது. முதலில் அதை வெளியிலிருந்து வாங்கிவிட்டு அதன்பிறகு இந்தியா விலேயே தயாரித்து செலவுகளைக் குறைப்போம் என்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது. இந்திய தயாரிப்பின் எல்லா தவறுகளுக்கும் கூடங்குளம் ஒரு நல்ல உதாரணம். அது முழுவதும்  NPCIL மற்றும் அதன் பெரிய ஒப்பந்ததாரர்களால் நிர்மாணிக்கப்பட்டு, இயக்கப்பட்டது. இந்தியா மொத்தம்  22 PHWR (Pressurised Heavy Water Reactors)  உலைகளை கட்டியுள்ளது. நாம் அதில் தகுதிவாய்ந்தவர்கள். ஆனால்  PHWRம்  VVERம் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. அவற்றின் கட்டுமானமும் தொழில்நுட்பமும் வேறுவேறு. ஆனால் இங்கே இந்திய ஒப்பந்ததாரர்கள் PHWR -ல் தமது அனுபவத்தைக்கொண்டு ஏதோ ஒரு வேகத்தில் இதைக் கையாளுகின்றனர். உங்களால் ஒருவேளை  VVER-ஐ இயக்க முடியலாம். ஆனால் ஒருமுறை அது கதிரியக்க கசிவுக்கு உள்ளானால் அதை நீங்கள் பார்வையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ இயலாது. அவர்கள் அதை இயக்க மிகுந்த வேகத்துடன் உந்துகிறார்கள். ஆனால் இப்போது 80 விழுக்காடு நேரம் அது முடங்கிக் கிடக்கிறது.

கூடங்குளம் அணுவுலை மிக ஆபத்தான அணுவுலைகளில் ஒன்று என்பது கால ஓட்டத்தில் நிரூபணமாகும். எந்த பாகங்கள் செயலற்றுவிட்டன என்பது நமக்குத் தெரியாது. ரஷ்யாவில் உலைக்கான உபகரணங்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜெய்த் தாப்பூரில் முதல் உலையிலிருந்தே நாம்தான் தயாரிக்க இருக்கிறோம். அதன் வடிப்பு (forging) மிகவும் சிக்கலானதாக இருப்பதால் பிரான்ஸால் அதை செய்ய இயலவில்லை. ஆனால் இங்கு நாம் கூட்டு முயற்சியால் வடிப்புகளை உருவாக்குவது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம். இதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் யார் பொறுப்பு ஏற்பார்கள்? கூடங்குளத்தைப்பொறுத்தவரையில் நாம் அனைத்து பொறுப்புகளிலும் ரஷ்யாவை விடுவித்து(?) விட்டோம். ஜெய்த்தாப்பூரில் அது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.

அரசு சரியான திருத்தங்களைச் செய்ய நாம் அழுத்தம் கொடுக்கவேண்டும். அணு ஆயுதங்கள் உட்ப்பட அனைத்தையும் கைவிட நாம் வலியுறுத் துவது சரியாக இருக்காது. அணுஆயுதத் திட்டங் களை அணுசக்தியோடு முடிச்சுப் போட்டுக் கொள்ள வேண்டாம். அணுசக்தி என்பது தனக் குள்ளேயே தேவையற்ற பிரச்சினைகளை இந்திய குடிமக்களுக்கு தரவல்லது.

 

அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments