சூழலியல் கல்வியின் அவல நிலை

வீ.பிரபாகரன் சுற்றுச்சூழல் பொறியியல் மாணவர்

இந்த நவீன கல்விமுறையில் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் சூழலியல் கல்வி என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இல்லை, சூழலை சீர்குலைக்கும் நிறுவனங்களைத் தட்டிக்கொடுக்கவும் அதற்குத் துணைபோகும் அரசாங்கக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கே பயன் படுகிறது. ஏதோ நான் மிகைப்படுத்திக் கூறுவதாக நீங்கள் எண்ணலாம், உண்மையில் இதுதான் இங்கு நடக்கிறது. நான் ஒரு அரசு கல்லூரியில் முதுநிலை சூழலியல் பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். சூழலியல் மாணவர்களாகிய எங்களுக்கு மீத்தேன் திட்டம் நல்லது எனவும்; வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுக்கும்பொழுது சில குறைகள் வரத்தான் செய்யும் என சொல்லிக் கொடுக்கிறார்கள்.

சராசரியாக ஒரு 500 0 (MW) மெகா வாட் அனல் மின் நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 105 டன் கந்தக டை ஆக்சைடும்
(Sulphur di oxide) 24 டன் நைட்ரசன் டை ஆக்சைடும் (Nitrogen di oxide), 2.5 டன் மாசுபடுத்தும் துகள்களும், 3500 டன் சாம்பலும் உற்பத்தியாகுகிறது. இதனால் சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறித்து எங்களுக்கு விரிவுரைக்கப்படும் அதே வேலையில் அணுவுலையின்ஆபத்துக்களைப் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. மாறாக அனல் மின்நிலையங்களுக்கு மாற்றாக கிளீன் எனெர்ஜி என்ற பெயரில் அணுமின் நிலையங்களே முன்வைக்கப்படுகிறதே அன்றி இயற்கைக்குக்கேடில்லாத மாற்று எரிசக்தி பற்றி சொல்லித் தரப்படுவதில்லை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, எந்தச் சிக்கலும் இல்லாமல் அவர்கள் ஆசிரியர் பணிசெய்ய, இதையெல்லாம் பற்றி அவர்கள் பேசாமல் இருக்க வேண்டும். எதிர்கால சூழலியல் நிபுணர்களுக்கு (விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும்) இந்த அரசாங்கம் திட்டமிட்டு sமீறீமீநீtவீஸ்மீ ஆகா சிலவற்றை சொல்லி தருவதினாலும் சிலவற்றை மறைப்பதினாலும் அரசாங்கத்தின் பிரச்சார ஸ்தாபனமாக செயல்படக் கூடிய நபர்களையே அது வளர்த்து எடுக்கிறது. உதாரணத்திற்கு: குடிநீர் மாசடைவதைப் பற்றியும், தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்படும் கழிவு நீரின் தரக் கட்டுப்பாட்டை பற்றியும் விரிவாகப் படிக்கின்றோம். இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும் தொழிற்சாலைகளின் கழிவால் இன்றளவும் நதிநீர் மாசடைந்து கொண்டுதானே இருக்கிறது என்ற கேள்விக்கு என்ன பதில் கிடைக்கிறது தெரியுமா. குடிசைத் தொழிலாக சாயப்பட்டறை வைத்திருப்பவர்களாலும், நதி ஓரம் வசிக்கும் மக்கள் தங்கள் அன்றாட கழிவுநீரை நதியில் திறந்துவிடுவதாலும் தான் நதி நீர் மாசடைவதை அரசாங்கத்தால் தடுக்க முடியவில்லை என்கிற அபத்தப் பதில்தான். உண்மையில் பெரும்பாலான நதிநீர் மாசுக்கு காரணமான பெரிய பெரிய தோல் தொழிற்சாலைகளைப் பற்றியும், நச்சு ரசாயன தொழிற்சாலைகளைப் பற்றியும் தனது  ‘Double standard practices’மூலம் எழுத்தளவில் மட்டும் சூழலைப் பாதுகாத்து நடைமுறையில் விதிகளை மீறி சூழலை சீர்குலைக்கும் நிறுவனங்களை பற்றியும் நீணீsமீ stuபீஹ்யாக எந்தப் புரிதலையும் ஏற்படுத்தாத பட்சத்தில், இந்த சூழலியல் கல்வியை சற்று சந்தேகக் கண்ணுடனே பார்க்க வேண்டி இருக்கிறது. வருங்கால மாசு கட்டுப்பட்டு வாரிய அதிகாரி களாகவும், நிறுவனங்களுக்கு சென்று தர சோதனை செய்யும் அரசுப் பொறியாளர்களாக போகும் எங்களுக்கு, நிறுவனங்கள் செய்யும் விதி மீறல்களைப் பற்றியும் அதைக் கண்டறியவும் கண் காணிக்கவும் உள்ள வழிமுறைகளைப் பற்றியும், கள உதாரணங்களையும் பாடத் திட்டத்தில் சேர்ப்பது எவ்வளவு அவசியமானது. அதை செய்யாமல் நதிநீர் மாசடைவதற்கு மக்கள் தான் முக்கியக்  காரணம் என சொல்லிக் கொடுப்பது யாருடைய வர்க்க நலனுக்காக என்ற கேள்வி எழுகிறது!

Environmental Engineering, Environmental management, Environmental Science  போன்ற சூழலியல்
பாடப் பிரிவுகள் இயற்கையை அழிவில் இருந்து மீட்டெடுப்பதற்கு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது (sustainable development) சூழலைப் பாதிக்காத வளர்ச்சியை சாராம்சமாக கொண்டு வடி வமைக்கப்பட்ட ஒரு பாடத் திட்டம். ஆனால் நடைமுறையில் சூழலுக்கு முக்கியத்துவம் குறைந்து, வளர்ச்சிக்கான முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படும் ஒரு அணுகுமுறையைக் கொண்டதாக இயங்குகிறது இந்த சூழலியல் கல்வி. பொருளாதாரத்தையும் வளர்ச்சியையும் முதன்மைப்படுத்தி, இயற்கையும் மக்கள் பாது காப்பையும் குறைந்த முக்கியத்துவத்துடன் அணுகும் ஒரு கல்வி முறையில் தன் சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட ஒரு மாணவன் தான் ஒரு அதிகாரியான பின்பு ஒரு சூழலியல் சிக்கல் வரும்பொழுது எப்படி ஒரு சாதாரண மக்களின் பார்வையில் இருந்து அவரால் அதை அணுக முடியும் ? இதன் விளைவுகளைத் தான் நாம் தற்பொழுது பல கருத்து கேட்புக் கூட்டங்களில் பார்த்து வருகிறோம். சூழலியல் பாதுகாப்பில் மக்களையும் அரசாங்கத்தையும் இணைக்கும் ஒரு இணைப்பாக இருக்க வேண்டிய சூழலியல் அதிகாரிகளே ஒரு தரப்பு அரசு எந்திரமாக மாறிப்போனதே இங்கு தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பல சூழலியல் சிக்கல்களுக்கு முக்கிய காரணம். இவை அனைத்திற்கும் அடிப்படை காரணம் எங்களை ஒரு அரசாங்க பிரச்சாரக் கருவியாக வளர்த்து எடுக்கும் இந்த கார்ப்பரேட் சூழலியல் கல்விமுறைதான். BOD’யும் COD’ யும் நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது தான்; குடிநீர் சுத்திகரிப்பும் கழிவுநீர் சுத்திகரிப்பும் எங்களுக்கு அவசியம் தான் ஆனால் சூழலியல் என்பது அதையும் தாண்டி பெரியது என்பதை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்காத கல்வி தான் இந்த நவீன சூழியல் கல்வி. ஆக சூழலியலையும், பரந்துபட்ட சூழலியலையும் , நடைமுறை சூழலியலையும், அடிப்படை சூழலியலையும், இயற்கையின் முக்கியத்துவத்தையும் உணர்த்தாத ஒரு மேம்போக்கான சூழலியல் கல்வி என்பது கல்வியின் பெயரால் நாட்டின் வளர்ச்சியினை மட்டும் மனதில் கொண்டு இயற்கைக்கு நாம் செய்யும் ஒரு விதமான நம்பிக்கைத் துரோகமாகவே நான் கருதுகிறேன். உலகமய மாக்கலுக்கு பிற்பாடான கல்வி முறையில் பொதுவாக பல பாடத் துறைகள் அறிவை போதிப்பதைவிட நிறுவனங்களுக்கான வேலை ஆட்களைத் தயார் படுத்தவே பயன்படுவதாக இருக்கிறது. அதைப் போலவே சூழலியல் கல்வியும் மாறிவிட்டது என்பதுதான் வருத்தமான உண்மை. தொழிற்சாலைகளில் சூழலியல் பொறியாளராக பணிபுரிய எங்களுக்கு எந்த எந்த பாடங்கள் தேவையோ அவையே பாடத் திட்டத்தில் அதிகமாக சொல்லித் தரப் படுகிறது. சூழல் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றியும் இயற்கையைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இல்லாத-போதிக்கப்படாத நிலையில் மாணவர் களும் தாங்கள் படித்து முடித்தவுடன் ஒரு தொழிற்கூடத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற குறுகிய ஒற்றை எண்ணத்துடன்  waste water treatment, computer techniques in environment, Design of biological Treatments, Industrial waste water management போன்ற பாடங்களை படித்து தங்களின்  Project களிலும், இது தொடர்பாகவே படித்துபட்டம் பெற்று, பெரிய தொழிற்சாலைகளில் சூழலியல் பொறியாளர்களாக/ மேலாளர்களாக பணியில் சேர்கிறார்கள். சூழலியல் பற்றிய அக்கறையும் பொறுப்பும் உணர்த்தப்படாத ஒரு கல்வி முறையில் பயின்று வந்த ஒரு மாணவன் தொழிற்சாலையில் வேலையில் அமர்ந்தவுடன் சூழலியல் பாதுகாப் பிற்காக பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுத்து விடப் போவதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும். தொழிற்சாலை உரிமையாளரிடம் இருந்து ஊதியம் பெற்று தொழிற்சாலைக்கு

சூழலியலையும், பரந்துபட்ட சூழலியலையும் , நடைமுறை சூழலியலையும், அடிப்படை சூழலிய லையும், இயற்கையின் முக்கியத்துவத்தையும் உணர்த்தாத ஒரு மேம்போக்கான சூழலியல் கல்வி என்பது கல்வியின் பெயரால் நாட்டின் வளர்ச்சியினை மட்டும் மனதில் கொண்டு இயற்கைக்கு நாம் செய்யும் ஒரு விதமான நம்பிக்கை துரோகமாகவே நான் கருதுகிறேன்.

விசுவாசமாக பணிபுரியும் ஒரு சூழலியல் பொறியாளரிடம் நாம் என்ன பெரிதாகச் சூழல் பாதுகாப்பினை எதிர்பார்த்து விட முடியும்? இதில் வருத்தத்துக்கு உரிய விடையம் என்ன என்றால் சமீப காலமாக சூழலியல் படித்தவர்கள் நிறைய பேர் தாங்கள் படித்த EIA (Environment Impact Assessment)  பாடத்தை வைத்துக்கொண்டு நிறுவனங்களுக்கு EC (Environmental Clearance) எனப்படும் சூழலியல் அனுமதி வாங்கி கொடுக்கும்  (Environmental Consultant) தரகர்களாகவே மாறி விடுகிறார்கள். கிட்டத்தட்ட மனசாட்சியை கழட்டிவைத்த ஒரு வக்கீலின் கதைதான் இது. தாங்கள் கை நீட்டிப் பணம் வாங்கிய நிறுவனத் திற்கு சூழலியல் அனுமதி பெற்றுத் தருவதே இவர்களின் முதல் நோக்கம். அதற்காக தாங்கள் தயாரிக்கும் சூழலியல் அறிக்கையில் எந்த பொய்யும் சொல்லும் அளவிற்கு சிலர் தரம் தாழ்ந்து போயிருப்பதும் இந்த நவீன சூழலியல் கல்வி முறையின் ஒரு சாதனைதான். இந்த ஒன்றரை வருடத்தில் என் வகுப்பறையில் எந்த நிகழ்கால சூழலியல் பிரச்சனைகளைக் குறித்தும் விவாதிக்கப்படவில்லை, பாடத்தில் இடையிடையே வரும் உதாரணங்களுக்கு கூட நிகழ்கால அல்லது பகுதி சார்ந்த சூழலியல் பிரச்சனைகளை குறித்து பேசி விடாமல் கவனத் துடன் கடக்கும் ஆசிரியர்களிடம் நாங்கள் எப்படி அதை எதிர் பார்ப்பது? இயற்கைதான் பிரதான ஆசான், ஆனால் எங்கள் சூழலியல் ஆசான்களோ, சிலீமீனீவீநீணீறீ களையும், புதிய தொழில்நுட்பங்களையும் சொல்லிக்கொடுத்த அளவிற்கு எங்களுக்கு இயற்கையைக் கற்றுத் தரவில்லை.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments