போர் சூழும் சிரியா

நாங்கள் இங்கு வந்திருப்பது எங்கள் திருவிழாக்களைக் கேட்டு

நாங்கள் ஏன் திருவிழாக்களைக் கொண்டாடுவதில்லை

எங்கள் குழந்தைப் பருவத்தை திரும்பி தாருங்கள்…

மக்களே எங்கள் நிலம் எரிந்து கொண்டிருக்கிறது எங்கள் நிலத்தின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது எங்களது வானம் கனவு கண்டு கொண்டிருக்கிறது அந்த நாட்களைக் கேட்டு..

எங்களுடைய புறாக்கள் வெடிகுண்டு சத்தத்தால் பறப்பதில்லை வெடிகுண்டுகளால் எங்கள் சூரியன் மங்கிவிட்டது எங்கள் குழந்தைப் பருவத்தைத் திரும்பி தாருங்கள்..

என் நிலம் என்னைப் போலவே மிகவும் சிறியது எங்கள் நிலத்திற்கு அமைதியைத் தாருங்கள் எங்களது குழந்தைப் பருவத்தைத் தாருங்கள்..

இந்தப் பாடலைத்தான் சிறுவர்கள் உலக நாடுகளை நோக்கி தினமும் தங்களது மரணங்களின் மூலம் உணர்த்தி கொண்டிருக் கிறார்கள். இதற்கு கடல் அலையின் தழுவலில் கரை ஒதுங்கிய அய்லானும், வெடிகுண்டுத் தாக்கு தலால் ரத்தம் படிந்த கறையுடன் மௌனமாக நம்மை நோக்கி கேள்வி எழுப்பிய ஓம்ரானுமே சான்றுகள். கடந்த ஐந்து வருடங்களாக சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்துடன் சிரியா கொடுத்திருக்கும் மற்று மொரு விலை அந்த நாட்டின் விவசாயம். கோதுமை, பருத்தி உற்பத்தியில் சிரியா சிறந்து விளங்கியது. தொடர் வெடிகுண்டு தாக்குதலால் சிரியாவின் பெரும்பாலான பகுதிகளில் மண் அதன் உயிர்த் தன்மையை இழந்து முற்றிலும் நஞ்சாகிவிட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக உள்நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அவல நிலைதான் சிரியாவில் நீடிக்கிறது. சிரிய மண்ணில் தினமும் நடைபெறும் வான் வழித்தாக்குதல்கள், குண்டுவெடிப்பு நிகழ்வுகள் தொடர்கதையாகிவிட்டதால் உயிர் பிழைத்து வாழ்வதே அங்குள்ள மக்களின் தினசரிப் போராட்டமாகிவிட்டது.

இதில் தங்களது நிலத்தைக் குறித்து அம்மக்கள் எப்படி சிந்திக்க முடியும்?

2011ம் ஆண்டுக்கு முன்பு வரை பச்சை வண்ணங்களால் தீட்டப்பட்டிருந்த சிறிய வரை படம் இன்று வெறும் புகைமூட்டமாகவே காணப்படுகிறது.

ஏன் சிரியா சூறையாடப்படுகிறது?

மத்திய தரைக் கடலின் ஓரமாக அமைந்துள்ள சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ். உலகின் பழமையான நகரங்களில் ஒன்று டமாஸ்கஸ். சிரியாவின் அடுத்த இரண்டாவது பெரிய நகரம் அலெப்போ. இன்று அலெப்போ நகரம்தான் சிரிய உள்நாட்டுப் போருக்கு முற்றிலுமாக தனது அடையாளத்தை இழந்து உள்ளது.

துனிசியா நாட்டில் எழுந்த கிளர்ச்சியின் தொடர்ச்சியாக கடந்த பத்து வருடங்களாக சிரியாவை ஆட்சி செய்யும் பஷார் ஆசாத்துக்கு எதிராக அந்நாட்டில் மிதவாத எதிர்கட்சிகள் (கிளர்ச்சிப் படைகள்) உருவாகின. இவை மட்டுமில்லாது குர்திஷ் இனத்தவர், ஐஎஸ் தீவிரவாதிகள் என பல இயக்கங்கள் சிரியாவைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தொடர்ந்து சண்டையிட ஆரம்பித்தனர். இதில் அலெப்போ நகரின் வடகிழக்கு, தென் பகுதிகள் சிரிய கிளர்ச்சியாளர்கள் (அதாவது மிதவாத எதிர்கட்சிகள்) பக்கம் வந்தது. அலெப் போவின் மேற்கு, டமாஸ்கஸ் நகரம் சிரிய அரசு படைகளின்கீழ் வந்தது மீதமுள்ள பகுதிகளைக் குர்திஷ் இனத்தவரும், ஐஎஸ் தீவிரவாதிகளும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவ்வாறு சிரியா தினமும் அதிகார ஆசையால் நான்கு பக்கங்களிலும் சூறையாடப்பட்டு வருகிறது. சிரியா சூறையாடப்பட்டு வருவதற்கு உலக நாடுகளின் பங்கு இல்லாமல் இல்லை. சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா உதவிசெய்ய, கிளர்ச்சிப் படைக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இவர்களுக்கு இடையேதான் அந்நாட்டின் குடிமக்கள் தங்களுக்கான வாழ்வைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் என மனிதாபிமானமற்ற முறையில் குண்டுகள் வீசப் படுகிறது. பல குழந்தைகள் துருக்கியின் ஆடைத் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர் களாக இருப்பதாக பிபிசி நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. வான்வழித் தாக்குதலால் முற்றிலும் சிதைக்கப்பட்ட தெருக்களில் தங்களது குடும்பத் தினரையும், நண்பர்களையும் நம்பிக்கையுடன் தேடி அலையும் ஏரளமான சிறுவர், சிறுமிகளை சிரியாவாவின் தெருக்களில் காணலாம். நாம் படித்த வரலாற்றில் அல்ல; நம் கண் முன்னே ஒரு நாடு கிழக்குத் திசையில் மடிந்து கொண்டிருப்பதை பல நாடுகள், கண்டும் காணாமல் உள்ளோம். காரணம், எதிர்காலத்தில் இந்த நாடுகள் இத்தகைய தாக்குதலை அதி காரத்தின் பெயரில் தனது சொந்தநாட்டின் மக்கள் மீது நடத்துமா? இல்லை; அதிகாரமிக்க நாடுகளின் கைப்பாவைகளாக செயல்பட விரும்புகின்றனர். இன்னும் பல கேள்விகளை சிரியாவின் உள்நாட்டுப் போர் நம்மிடையே உருவாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும் அந்தமண்ணில் இன்னும் நம்பிக்கை வாய்ந்த கைகள் செடிகளை நட்டுக் கொண்டிருக்கின்றன என்றாவது விடியும் என்று.

இந்து

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments