ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை

ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை

 

தமிழ்நாடு முழுவதுமுள்ள ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகையின்போது வழிபாட்டிற்காக வைக்கப்படும் பிள்ளையார் சிலைகளை கரைப்பதற்கான அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளின் பட்டியலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட நீர்நிலைகளை அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், பிள்ளையார் சிலைகளைப் பாதுகாப்பாக கரைப்பது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவு ஒன்றில் பழவேற்காடு ஏரி, கழிமுகங்கள், ராம்சர் தளங்களில் சிலைகளைக் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின்படி, தமிழ்நாட்டிலுள்ள 18 ராம்சர் அங்கீகாரம் பெற்ற நீர்நிலைகள், காப்புக்காடுகள் மற்றும் பழவேற்காடு ஏரியில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்க தடைவிதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுடன் சம்பந்தப்பட்ட நீர்நிலைகள் அமைந்துள்ள மாவட்டங்களின் சுற்றுச்சூழல் பொறியாளர்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகள்

  1. வேதாரண்யம் காட்டுயிர் மற்றும் பறவைகள் சரணாலயம்

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர்

  1. மன்னார் வளைகுடா கடல் உயிர்மண்டலக் காப்பகம் – ராமநாதபுரம்
  2. வேம்பன்னூர் சதுப்பு நில வளாகம், கன்னியாகுமரி.
  3. வெள்ளோடு பறவைகள் சரணாலயம், ஈரோடு.
  4. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், திருவாரூர்,
  5. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், செங்கல்பட்டு.
  6. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், திருநெல்வேலி.
  7. கரிகிலி பறவைகள் சரணாலயம், செங்கல்பட்டு
  8. பள்ளிக்கரணை சதுப்புநிலம், சென்னை
  9. பிச்சாவரம் அலையாத்தி, கடலூர்.
  10. காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், ராமநாதபுரம்.
  11. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், ராமநாதபுரம்.
  12. சுசீந்திரம் தேரூர் சதுப்பு நிலப்பகுதி, கன்னியாகுமரி.
  13. வடுவூர் பறவைகள் சரணாலயம், திருவாரூர்.
  14. கரைவெட்டி பறவைகள் சரணாலயம், அரியலூர்.
  15. நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், திருப்பூர்.
  16. கழுவேலி பறவைகள் சரணாலயம், விழுப்புரம்
  17. லாங்வுட் சோலை காப்புக்காடுகள், நீலகிரி
  18. பழவேற்காடு ஏரி, திருவள்ளூர்

 

 

 

List

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments