இன்று திமிங்கலங்கள் நாளை நாம்!

இந்து சாரல்

இயற்கைக்கு மாறாக மனிதன் செய்யும் தவறுகளுக்கு எச்சரிக்கை மணிகள் ஒலிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அந்த எச்சரிக்கை மணிகள் எப்போது, எப்படி ஒலிக்கும் என்பதே ஆழ்கடல் ரகசியம். கடந்த பல வருடங்களாக நாம் தேவைகளுக்காக முடிந்த அளவுக்கு நாமும், நமது கடல்களை குப்பைகுளங்களாக மாற்றுவதை சற்றும் தவறவிடுவதில்லை. சமீபத்திய எண்ணூர் கச்சா எண்ணெய் கழிவு இதற்கு  சிறந்த உதாரணம். ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் அந்த எச்சரிக்கை மணிகளை கரையில் ஒதுங்கி  நமக்கு உணர்த்தின. தமிழகத்துக்கு மட்டுமல்ல உலகளவில் இம்மாதிரியான கடந்த சில வருடங்களாக அதிக எண்னிகையில் நடந்து வருகின்றன. இதற்கு பலியாவது கடல் வாழ் உயிரினங்கள்தான். இதற்கு நேரடியாகவோ மறைமுகவோ நாம் காரணமாவதை  உணர வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரையில் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் 45 திமிங்கலங்கள் உயிரிழந்தன. இந்தியாவின் ஒட்டு மொத்த சுற்றுப்புற ஆர்வலர்களை மீண்டு விழித்தெழ செய்தது. திமிங்கலங்களின் இவ்வுயிரிழப்பு இந்தியாவின், நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள்தான் காரணமா? என்ற நீண்ட நாள் எழுந்த கேள்வியை  மீண்டும் விவாத தலைப்பில் முன்னிலைப் படுத்தி மீண்டும் வழக்கம்போல் காணாமல் போனது. இம்முறை மீண்டும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. சற்று ஆறுதலான செய்தி இம்முறை இது இந்தியாவில் அல்ல நியூசிலாந்தில். கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் நியூசிலாந்து கரையில் இறந்துமடிந்துள்ளன. பல திமிங்கலங்கள் தன்னார்வலர்கள் முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளன. ஏன் இந்தச் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

நீடிக்கும் மர்மம்:

திமிங்கலங்கள் கரை ஒதுங்க அணு உலை கழிவுகள் காரணமா? இல்லை  உலக வெப்பமய மாக்கலின் விளைவா? இல்லை திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது இயற்கை நிகழ்வுதானா? என்ற  விடைதெரியா கேள்விகள் எழுந்துள்ளன.

திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது முதல்முறை அல்ல:

திமிங்கலங்கள் கரைஒதுங்கியது சமீபத்திய நிகழ்வுகள்தானா என காலத்தை சற்று திருப் பினால்.  திமிங்கலங்கள் பல்வேறு காலக்கட்டத்தில் கூட்டமாக கூட்டமாக இறந்த நிலையில் கரை ஒதுங்கி நம்மிடத்தில் சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1973 ஆம் ஆண்டு தமிழக கடற்கரையில் 147 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்குகின என கூறுகின்றனர் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள். உலக அளவில் ஆராய்ந்து பார்த்தால் கடல் சார்ந்த நாடுகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது. இதற்கு நியுசிலாந்து, ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உதாரணம். நியுசிலாந்து நாட்டில் மட்டும் 2014 ஆம் ஆண்டு மட்டும் 200 திமிங்கலங்கள் இறந்து கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கின ஸ்காட்லாந்து நாட்டில் 2013 ஆம் ஆண்டு திமிங்கலங்கள் இறந்து கரைஒதுங்கியதற்கு கடலில் மெர்க்குரி அளவு அதிகமாக கலந்திருந்ததால் அதிலிருந்த விஷத்தன்மைகள் திமிங்கலத்தின் மூளை மற்றும் உடலின் முக்கிய பாகங்கள் பாதித்ததால் அவை இறந்ததாக இறுதி கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்பொது மீண்டும் இறந்த நிலையில் நியூசிலாந்தில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

காரணம் என்ன:

திமிங்கலங்கள் கரை ஒதுங்கியத்தற்கு உலக வெப்பமயமாக்கல் காரணம் அல்ல என்று சில விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் அனைத்தும் தென் அமெரிக்காவில் இருந்து அண்டாட்டிக்கா, சோமாலியா வழியாக உணவு தேடிவந்தவை வரும் வழியில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் சுவாசத்தில் கோளாறு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். கடலில் கொட்டப்படும் தாது மணல் கழிவுகளில், அணு உலைக் கழிவுகளை உணவாக உண்டிருக்கலாம் இதன் காரணமாக திமிங்கலங்கள் இறந்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இரண்டாவதாக, ஆழ்கடலில் வெப்பத்தின் அளவு அதிகரித்து திமிங்கலங்கள் மேல் மட்டத்திற்கு வந்திருக்கலாம். மூன்றாவது கடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து சுவாசத்தில் கோளாறு ஏற்பட்ட காரணமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இன்னும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறப்பதற்கான உண்மையான காரணம் குறித்தும் உறுதியான விளக்கம் அளிக்கப்படவில்லை. இயற்கைக்கு மாறான மனிதனின் செயல் களை இயற்கை ஒருபோது ஏற்பதில்லை அதற்கு தகுந்த பதிலடியை அவ்வப்போது நமக்கு அளித்துக் கொண்டு வருகிறது. நாகரிகம், வளர்ச்சி என்று கூறி நம்மையும், நம் வீட்டையும் மட்டும் சுத்தமாக வைத்திருந்து கடல், ஆறு, என எல்லா நீர் நிலைகளிலும் குப்பைகளை கொட்டி நம்மக்கான ஆபத்தை நாமே ஆரம்பித்து வைத்து கொண்டிருக்கிறோம். ஆறறிவுடைய மனிதனின் இயற்கைக்கு மாறான செயல்களால் ஐந்தறிவு உயிர்களை பலியாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் சிந்தித்து பார்ப்பதில்லை. அந்த ஆபத்திற்கான விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் அபாயத்தை விளைவிக்கக் கூடியவை என்பதை நாம் சித்திக்கத் தவறியதன் விளைவுதான் திமிங்கலங்களின் இறப்பு. இன்று கரையில் ஒதுங்கியது திமிங்கலங்கள் நாளை நாமாகவும் இருக்கலாம் என்பதையே இந்த திமிங்கலங்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளன.

1986 ஆம் ஆண்டு பதினான்காயிரம் டன் எடையுள்ள சரக்குடன் பிலடெல்பியா மாகாணத்திலிருந்து பஹாமாவுக்கு தன் கடற்பயணத்தைத் தொடங்கியது ஒரு சரக்குகப்பல். இந்த சரக்கைக் கையாள்வதற்காக அரசிடமிருந்து அறுபது லட்சம் டாலர்களைப் பெற்றிருந்தது (முப்பது வருடங்களுக்கு முன்) அந்த சரக்கை கையாளும் நிறுவனம். இந்த சரக்கு இதற்கு முந்தைய காலங்களில் நியூ ஜெர்சிக்கு அனுப்பப்பட்டு வந்திருந்தாலும் இப்போது நியூ ஜெர்சி அதை வாங்குவதை நிறுத்திக்கொண்டிருந்தது. அதனால் புதிய இலக்கு நாடுகளைக் கண்டறியும் வேலையில் மும்முரமாக இறங்கியிருந்தது சரக்கைக் கையாளும் நிறுவனம். புதிய இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பஹாமா அரசும் இப்போது சரக்கை திருப்பி அனுப்பிவிட செய்வதறியாது திணறிய கப்பல் தொடர்ந்து தன் மூட்டைகளை இறக்கிவைக்க அட்லாண்டிக் பெருங்கடலின் ஒவ்வொரு நாடுகளாளையும் தேடிப் பயணமானது. தொடர்ந்த 16 மாத கடல் பயணத்தில் டொமினிக் குடியரசு, ஹாண்டுரஸ், பனாமா, பெர்முடா, கினி பிசாவு, நெதர்லாண்ட் போன்ற அத்தனை நாடுகளும்நாட அவை அனைத்தும் சரக்கைப் பெற்றுக்கொள்ள மறுத்து கைவிரிக்க செய்வதறியாது தவித்தனர் மாலுமிகள். எத்தனை ஆயிரம் மைல்கள் கடலில் பயணித்தாலும் யாரோ ஒருவர் அது பயணிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் அது சென்றடையும் முன்பே சரக்குபற்றிய தகவல்களைக் கசியவிட்டு இலக்கு நாடுகளை உஷாராக்கிவிடுகின்றனர். அந்தக் கப்பலுக்கு “கியான் சீ” எனப் பெயரிடப் பட்டிருந்தது. தன் நீண்ட பயணத்தின் இறுதியில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தேசமான ஹைட்டியின் கடற்கரையில் தன் சரக்கை இறக்கத் தொடங்கியது கியான் சீ. “மேல்மண்ணுக்கான உரம்” என்று சொல்லப்பட்ட(?) அந்த சரக்கின் உண்மைக் கதை ஹைட்டி நகர அரசுக்குத் தெரியவர ஆடிப்போன அரசு உடனடியாக இறக்கப்பட்ட சரக்கையும் எடுத்துக்கொண்டு உடனடியாக துறைமுகத்தைவிட்டு வெளியேற கப்பலுக்கு உத்தரவிட்டது. அதற்குள் நான்காயிரம் டன் சரக்கு கடற்கரையில் இறக்கப்பட்டிருக்க அதை அப்படியே விட்டபடி துறைமுகத்திலிருந்து நழுவியது “கியான் சீ”. இறக்கப்பட்ட சரக்கை என்ன செய்வதென்று தெரியாது திணறிய ஹைட்டியின் துறைமுக ஊழியர்கள் தங்களால் முடிந்தமட்டும் அருகே இருந்த பங்கரில் புதைக்க எஞ்சிய சரக்கு கடற்கரையிலேயே கைவிடப்பட்டது.

தன்னிடம் மிச்சமிருந்த பத்தாயிரம் டன் சரக்கை இறக்க தோதான தேசத்தை நோக்கி கியான் சீயின் பயணம் தொடர்ந்தது. செனகல், மொராக்கோ, யுகோஸ்லேவியா, இலங்கை, சிங்கப்பூர் என்று சுற்றிச்சுற்றி வந்த கியான் சீயால் எங்கும் சரக்கை இறக்கமுடியவில்லை. வழியிலேயே பட்டிபார்த்து பெயிண்டடித்து புதுப்பொலிவுடன் நிறத்தையும் மாற்றி “பெலிசியா” என்று ஒருமுறை பெயரை மாற்றிப்பார்த்தார்கள் அப்புறம் “பெலிகானோ” என்று பெயரிட்டார்கள். என்னதான் வேடமிட்டாலும் தன் கொண்டையை மறைக்க முடியாத சரக்குக் கப்பலை சரியாகத் தடமறிந்து அது பயணிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த மர்ம நபர் தகவலளித்துக் கொண்டிருந்தார். அன்னிய முதலீடுகளை(?) காந்தம்போல் ஈர்க்கும் பிரதமர் அப்போது நமக்கு வாய்த்திருக்காததால் அப்போதைக்கு இந்தியா தப்பித்திருந்தது.

ஒரு  குப்பை  வண்டியின்  கதை!

அண்டார்டிக்கா தவிர உலகின் அத்தனை கண்டங்களுக்கும் அங்குமிங்குமாய் அலைந்து திரிந்தது கியான் சீ. ஆனால் தொடர்ந்த 27 மாத கடற் பயணத் துக்குப் பின் சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான தனது பயணத்தில் கப்பலின் சரக்கு மாயமாகியிருந்தது. கப்பலின் பணியாளர்கள் அதுகுறித்து தெரிவிக்க மறுத்தபோதும் துடிப்பான ஒரு சூழல் வழக்கறிஞரின் அயராத முயற்சியால் அந்த சரக்குகள் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கொட்டப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்ததாக தன் “பொருட்களின் கதை” என்ற புத்தகத்தில் ஆனி லியோனார்டு தெரிவிக்கிறார். சூழல் ஆர்வலரும் கழிவுகளின் தடமறியும் நிபுணருமான அவரை அப்போது கிரீன்பீஸ் அமைப்பு கியான் சீ கப்பலின் தடமறிதலில் பணியமர்த்தியிருந்தது. கிரீன்பீஸ்? ஆம்! அதே கிரீன்பீஸ் தான். சூழலுக்கும் இயற்கைவளங்களுக்கும் எதிரான இந்திய அரசுகளின் போரில் பழங்குடி மக்களுக் காகவும், காடுகளுக்காகவும் காட்டுயிர் களுக்காகவும் தொடர்ந்து குரலெழுப்பி முரண்டு பிடிக்கும் அதே கிரீன்பீஸ்தான்.. காங்கிரஸ் அரசானாலும் சரி, காவி அரசானாலும் சரி தேசவிரோத முத்திரையோடு வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு தொடர்ந்து பந்தாடப்படும் அதே கிரீன்பீஸ்தான். ஆர்டிக் பனிக்கரடிகள் முதல் அண்டார்டிக்காவின் உருகும் பனிமைலைகள் வரை சூழலுக்காக தொடர்ந்து வல்லரசுகளிடமே மல்லுக்கட்டும் அதே கிரீன்பீஸ் தான் கியான் சீயின் நச்சுக்குப்பையிலிருந்து இத்தனை நாடுகளையும் காக்க அயராது உழைத்திருந்தது. அது என்ன நச்சுக் குப்பை? இத்தனை மாதங்கள் தூக்கிச்சுமக்கும் அளவுக்கு இந்தனை நாடுகள் திருப்பி அனுப்புமளவுக்கு கியான் சீயில் என்ன கொடிய நச்சு இருந்தது? ஏன் அது ஏழை நாடுகளை நோக்கிப் பயணமாகியது? அது அணுக் கழிவா? வேதிக்கழிவா? மருத்துவக் கழிவா? என்ன நச்சு அது? நீங்கள் ஒன்றும் பதட்டப்பட வேண்டாம்! நாம் பயப்படும் அளவிற்கு அது ஒன்றும் பெரிய நச்செல்லாம் இல்லை. உங்கள் வீட்டுத் தெருமுனையிலும் எங்கள் வீட்டுத் தெரு முனையிலும் அதை நாம் சாதாரணமாகக் காணமுடியும். வீட்டிலிருக்கும் எலெக்டிரானிக் பொருட்கள், பாலிதீன் பைகள், தெரிமாகோல், பிவிசி பைப்புகள், டயபர்கள், காய்கறி கழிவுகள் என அனைத்தையும் தெருவில் கொட்டி எரித்தபின் மிஞ்சுகிறதே அந்த சாம்பல்தான் அது. ஆனால் கியான் சீ சுமந்தது தெருக்களில் குப்பையை எரித்த சாம்பல் இல்லை. சாம்பலாக்குவதற்காகவே நிறுவப்பட்டிருந்த நகரின் மொத்த கழிவுகளையும் சாம்பலாக்கும் பிரம்மாண்டத் திறன் கொண்ட சாம்பலாக்கி களில் (incinerator)  இருந்து பெறப்பட்ட சாம்பல்தான் அது. வீட்டுக் குப்பைகளை எரிக்கும் சாம்பல் அவ்வளவு பெரிய நச்சா என நீங்கள் அப்பாவியாய் கேட்டால், (வல்லரசுகளின்) குப்பைகளை சுமக்கவென்றே கட்டமைக்கப்பட்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளே ஏற்றுக்கொள்ளாத அளவு ஒரு பொருள் என்றால் அதன் வீரியம் எப்படியானது என்பதைப் உங்கள் ஆய்வுக்கும் கற்பனைக்குமே விட்டுவிடுகிறேன். ஹைட்டி குப்பையின் கதை இதோடு முடிந்து விடவில்லை. ஹைட்டி அரசு கடற்கரையில் கைவிடப்பட்ட சாம்பலைத் திரும்பப்பெற பில டெல்பியாவிடம் விடுத்த தொடர் கோரிக்கைகள் பலன்தரவில்லை. அமெரிக்க வாழ் ஹைட்டி மக்கள் இதுதொடர்பாக பிலடெல்பியாவுக்கு அழுத்தம்தர கிரீன்பீஸ் அமைப்பை நாடினர். கிரீன் பீஸ் அமைப்பு அமெரிக்க சூழல் ஆர்வலர்கள் துணையோடு “அனுப்பியவர்களுக்கே சரக்கைத் திருப்பி அனுப்புதல்” என்ற செயல்திட்டத்தில் இறங்கியது. தொடர்ந்து அரசு அதிகாரிகள் மேயர்களுடனான பலகட்ட பலவருடங்கள் நீடித்த பேச்சுவார்த்தைகள் எதிலும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வி அடைந்தன. பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டும் கிரீன் பீஸ் மக்களுடன் கைகோர்த்து அயராது உழைத்தது. தங்கள் குப்பையை தங்கள் நாட்டுக்கே திருப்பிக் கொண்டுவர நேர்மையுள்ள பல அமெரிக்கர்கள் உறுதிபூண்டனர். போராட்டத்தின் ஒருபகுதியாக ஹைட்டி கடற்கரையிலிருந்த சரக்கு சிறு சிறு பொட்டலங்களில் அடைக்கப்பட்டு நூற்றுக் கணக்கான அமெரிக்க மாணவர்களால் பில டெல்பியா மேயருக்கு எச்சரிக்கை கடிதத்தோடு அனுப்பப்பட்டது. பிலடெல்பிய மக்கள் தங்கள் கழிவுக்கு தங்கள் நகரம்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று அரசை வற்புறுத்தியதோடு ஹைட்டிக்குச் சென்று அங்கே கொட்டப்பட்ட சாம்பலைப் பார்வையிடவும் ஹைட்டியிலிருந்த அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பு திரண்டு போராடவும் செய்தனர். மேயர் செல்லுமிடமெல்லாம் போராட்டக்காரர்கள் “மேயர் ரெண்டல், சரியான செயலை செய்யுங்கள், சாம்பலை மீண்டும் கொண்டுவாருங்கள்” என்று எழுதப் பட்ட பிரம்மாண்ட பதாகைகளோடு அவரை வரவேற்றனர்.

ஆர்டிக் பனிக்கரடிகள் முதல் அண்டார்டிக் காவின் உருகும் பனிமைலைகள் வரை சூழலுக்காக தொடர்ந்து வல்லரசுகளிடமே மல்லுக்கட்டும் அதே கிரீன்பீஸ் தான் கியான் சீயின் நச்சுக்குப்பையிலிருந்து இத்தனை நாடுகளையும் காக்க அயராது உழைத் திருந்தது.

திரைப்படப்பாணியிலான கவன ஈர்ப்பு போராட்டங்களில் திறமைபெற்றிருந்த கிரீன்பீஸ் அதிகாரவர்க்கத்தின் கவனத்தை ஈர்க்க பலவிதமான உத்திகளைக் கையாண்டது. ஒரு நாள், மேயர் பங்கேற்ற ஒரு நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்பதற்காக மேயரும் அவர் மனைவியும் வாசலில் இன்முகத்துடன் வீற்றிருந்தனர். ஊடகங்களின் மொத்த கவனமும் அவர்கள் பக்கம் குவிந்திருந்தபோது சரியான தருணத்துக்காக காத்திருந்த கிரீன்பீஸ் அமைப்பின் ஆனி லியோனார்ட் மேயரை நெருங்கி அவர் நழுவிவிடாது அவர் கைகளை வலுவாகப்பற்றியவாறு அவரிடம் ஹைட்டியின் கழிவைப்பற்றி பேசத் தொடங்கினார். இன்னொருவரோ அவர் ஆடையில் ஒரு ஒளிரும் சிவப்புநிற அட்டையை பொருத்தினார். அதில் “மேயர் ரெண்டல்!, சரியான செயலை மேற்கொள்ளுங்கள், சாம்பலை மீண்டும் கொண்டுவாருங்கள்” என எழுதியிருந்தது. அவர் ஆனி லியோனார்டை பக்கவாட்டில் தள்ளி நகர முற்பட அடுத்தடுத்து தயாராக வரிசையில் வந்துகொண்டிருந்த ஒவ்வொருவரும் மேயருக்கு கைகுலுக்கி அதே விஷயத்தை வலியுறுத்தினர். தொடர்ந்து நிகழ்வில் மேயர் பேசும்போது கூட்டத்திலிருந்து மேயரை நோக்கி “சாம்பலைக் கொண்டுவாருங்கள்” என முழக்கமெழுப்பினர். போராளிகள் கொடுத்த அசுர அழுத்தம் அரசை வேலை செய்யவைத்தது. இறுதியில் கழிவைக் திரும்பக் கொண்டுவர ஐம்பதாயிரம் டாலர்கள் தர ஒத்துக்கொண்டார் மேயர். இருபத்திரெண்டு வருடங்களுக்குப்பின் 2008 ஆம் ஆண்டு கழிவு மீண்டும் கப்பல்மூலம் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டது. “இனி எப்போதும் ஹைட்டியில் கழிவுகள் கொட்டப் படப் போவதில்லை” என்ற பிரம்மாண்ட பதாகை துறைமுகத்தில் வைக்கப் பட்டது. அதனாலென்ன? இன்றும் ஹைட்டியைப் போன்ற எண்ணெற்ற நாடுகள் வல்லரசுகளின் குப்பைகளை முதுகில் சுமந்து விமோசனம்பெற(!) தவம் கிடக்கின்றனவே. கியான் சீக்களுக்கு வேலையில்லாமலா போய்விடும்? ஆனால் அமைதியான இந்தியப் பெருங்கடலின் அடி ஆழத்தில் தூங்கவைக்கப்பட்ட பத்தாயிரம் டன் நச்சு சாம்பல் விழித்தெழுந்து கடல் நீரோட்டங்களோடு கலந்து பெருங்கடல்களின் எல்லைகளைத் தாண்டி வேகமாய் பயணித்துக் கொண்டிருக்கிறது. அது நம் சாப்பாட்டு மேசையிலோ இல்லை பிலடெல்பியா மேயரின் சாப்பாட்டு மேசையிலோ வறுவல்செய்து வைக்கப்பட்டிருக்கும் கடல் மீனிலோ இல்லை கடல்நண்டிலோ என்றென்றும் உயிர்த்திருக்கும். ஏனெனில் ஆற்றல் அழிவற்றது. குப்பைவண்டிகள்

அமைதியான இந்தியப் பெருங்கடலின் அடி ஆழத்தில் தூங்கவைக்கப்பட்ட பத்தாயிரம் டன் நச்சு சாம்பல் விழித்தெழுந்து கடல் நீரோட்டங்களோடு கலந்து பெருங்கடல்களின் எல்லைகளைத் தாண்டி வேகமாய் பயணித்துக் கொண்டிருக்கிறது. அது நம் சாப்பாட்டு மேசையிலோ இல்லை பிலடெல்பியா மேயரின் சாப்பாட்டு மேசையிலோ வறுவல்செய்து வைக்கப்பட்டிருக்கும் கடல் மீனிலோ இல்லை கடல்நண்டிலோ என்றென்றும் உயிர்த்திருக்கும். ஏனெனில் ஆற்றல் அழிவற்றது

வரலாற்றிலிருந்து மறைந்து போயிருக்கலாம். ஆனால் குப்பைகள் என்றென்றும் எங்கெங்கும் ஏதோ ஒரு வடிவத்தில் வீரியம் குன்றாது உயிர்ப் போடு பயணித்துக்கொண்டிருக்கும்.

அலமாரி
‘அலமாரி’ – நூல் அறிமுகப் பகுதிக்கு நூல்கள் அனுப்புவோர் தங்கள் பதிப்புகளில் இரண்டு பிரதிகளை ‘பூவுலகின் நண்பர்கள்’ முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments