கால்வாயைக் கண்டுக்கொள்வது யார் ?

சென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் வெள்ளத்தினை மட்டுப் படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. சென்ற ஆண்டின் வெள்ளம் மீண்டும் ஒருமுறை நிகழ்ந்திராமல் தடுக்க, வேகமாக சீரழிந்து வரும் இதன் மீது உடனடி கவனம் தேவை. 1950 மற்றும் 60 களில் மிகவும் பிரபலமான உப்பு மூட்டைகளை மற்றும் மரக்கட்டைகளை ஏற்றி செல்லும் மரத் தெப்பங்களே நீண்டநாள் கோட்டூர் வாசியான நாராயணனின் ஆரம்பகால நினைவுகள். 1800களின் துவக்கத்தில் வட சென்னையை எண்ணூரோடு இணைக்கும் உவர்நீர் பாதையாக அப்போதைய மெட்ராசின் ஆளுநரால் பக்கிங்காம் மற்றும் சண்டோஸ் பிரபுவின் பெயர்க்காரணம் கருதி இது கட்டமைக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டின் இறுதிவரை இக்கால்வாயோடு இணைப்புகள் இணைக்கப்பட்டு சென்னை நகரிலிருந்து விழுப்புரம் மாவட்டம் மரக்கணம்வரை ஏறத்தாழ 100 கிலோமீட்டர் அளவு நீட்டிக்கப்பட்டது. 60களின் முடிவில் பயன்படுத்தப் படாமல் போன இந்தக் கால்வாய், நகரில் வெற்றிகரமாக பாயும் நீர்வழிகளால் கழிவுநீரை ஏந்திச் செல்லக் கூடிய கோரமான மாற்றத்தைக் கண்டது. 2008ல் தேசிய நீர்வழிப் பாதையாக ((NW-4) அறிவிக்கப்பட்ட பின்னர், ஆந்திரப் பிரதேசத்தின் பெட்டகஞ்சம் முதல் தெற்கு என்ணுணூர் வரை இதை வளர்க்கும் திட்டத்தினை மத்திய அரசாங்கம் புதுப்பித்து. 30 முதல் 40 டன்கள் நாட்டு பெருள்களான உணவு தானியங்கள் தவிர நிலக்கரி, உரங்கள், பைஞ்சுதை மற்றும் மணல் ஆகியவற்றின் போக்குவரத்திற்கான திறன் பெற்றதென உறுதிசெய்ய இந்த 300 கிலோமீட்டர் விரிவாக்கம் தோண்டி தூர்வாரப்படுமென எதிர்பார்க்கப் படுகிறது. போக்குவரத்து அன்றி சென்னை நகரின் வெள்ள மட்டுப்படுத்தலுக்கான ஒட்டுமொத்த திட்டத்தில் பக்கிங்காம் கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னையின் குறுக்கே பாயும் மூன்று நதிகளான கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் அடையாறு ஆகியவற்றை இக்கால்வாய் இணைக்கிறது. அடிப்படையில் போக்குவரத்துத் தடமாகக் கட்டப்பட்டிருந்தாலும், வெள்ளநீர் மேலாண்மை மற்றும் அலைகளின் ஏற்ற இறக்க சமநிலை உறுதிபடுத்தல் ஆகிய இரண்டும் இதன் அதிமுக்கியப் பாத்திரங்கள். “சென்னை நகரின் மூன்று முக்கிய நதிகள் தவிரப் பல சிறிய மற்றும் நடுத்தர வடிகால் களின் வெள்ளநீர் வடிகாலாக பக்கிங்காம் கால்வாய் உதவுகிறது. இக்கால்வாய் இல்லை யெனில் பழைய மகாபலிபுரம் சாலை முதல் நகரின் தெற்கு வரையில் முழுவதுமாக வெள்ளப்பெருக்கெடுத்திருக்கும். வெள்ளநீர் நேரடியாக கடலில் கலக்காமல் கால்வாயின் வழியாகவே செல்லுமாதலால் சென்னை உயிர்ப்புடன் இருப்பதற்கு இதன் இருப்பு மிக முக்கியமாகிறது’’ என்கிறார் மெட்ராஸ் மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜானகிராமன். ஆனால் இந்தக் கால்வாயின் தற்போதைய அவல நிலை உண்மையில் இரக்கத்துக்குரியது. இதன் உண்மையான அகலமான 100 மீட்டரில் இருந்து பல பகுதிகளில் இக்கால்வாய் 30 அல்லது 40 மீட்டர் அகலத்திற்கும் குறைவாக சுருக்கப்பட்டுள்ளது. வடக்கே சென்னை கடற்கரை முதல் தெற்கே வேளச்சேரி வரை உயர்த்தப்பட்ட வெகுஜன துரித போக்குவரத்து அமைப்பு (Mass Rapid Transit System – MRTS) முற்றிலுமாக கால்வாயின் கரைகளிலே கட்டப் பட்டுள்ளது. உயர்த்தப் பட்ட ரயில் பாதையின் அடித்தளம் கால்வாய்க்கு மேல் அல்லது அபத்தமான அளவு கால்வாய்க்குப் பக்கத்தில் குவிக்கப் பட்டுள்ளதால் இதில் ஓடும் நீரின் அளவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மாசுபாடுத் துயரங்கள்

எண்ணூர் சிற்றோடையின் 3 அல்லது 4 மையங்களில் ஒன்றோடொன்று மேலெழுவதால் இக்கால்வாயை ஒரு தனி அமைப்பாகக் காணவியலாது. கால்வாயும் சிற்றோடையும் ஏறத்தாழ ஒரே சுற்றுச்சூழல் கொண்டவை. சிற்றோடையில் காணப்படும் மீன் கால்வாயிலும் இருக்கும். சிற்றோடையும் கால்வாயும் மிகக் கடுமையாக மாசுபடுத்தப் பட்டுள்ளது. ஆயினும் கூட இவை பல குடும்பங்களை ஆதரித்து அவர்களது வாழ்வாதாரம் நிலைக்க உதவுகிறது. என்னூர் சிற்றோடை கற்பனைக்கு அப்பால் மாசுபடுத்தப்பட்டிருப்பினும் இதன் தொடரில் உள்ள மீன்பிடி கிராமங்களான என்னூர்குப்பம், முகட்வரகுப்பம் மற்றும் காட்டுகுப்பம் முதலியவற்றை இன்னும் தக்கவைத்துள்ளது. பாரம்பரிய மீனவர்கள் அல்லாத இருளர்கள் கூட பக்கிங்காம் கால்வாயிலிருந்து மட்டி மீன் எடுத்துள்ளனர் என்கிறார் கடலோர வள மையத்தைச் (Coastal Resource Centre) சேர்ந்த பூஜா. நீரோட்டம் முழுமையாக நீர்த்துப் போன மையங்கள் யாவை எனில் வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு மிக அருகில் இருப்பவைகளே. கால்வாயை அடைத்திருக்கும் சாம்பல் மற்றும் வண்டல்களின் தடித்த படிமங்களைத் தாழ் அலை அம்பலப்படுத்துகிறது. மின் நிலையத்திலிருந்து வெளிவரும் சாம்பல் குழம்பு மறுமுனையில் உள்ள சாம்பல் குளத்தை அடைய பக்கிங்காம் கால்வாயைக் கடக்க வேண்டியுள்ளது. மூடப்பட்ட குழாய்களால் இக்குழம்பு கடத்தப்பட்டாலும் மிக மோசமான பராமரிப்பின் காரணமாக சாம்பல் நேரடியாக கால்வாயில் ஒழுகி நாளின் முடிவில் அதை அடைக்கிறது. மணாலி தொழிற்பேட்டையில் இருந்து வரும் சாக்கடை கழிவுகளின் வங்கியிலாகவும் சிற்றோடை மற்றும் கால்வாய் செயல் படுகிறது. மேலும் அருகில் உள்ள நகராட்சிகளின் கழிவு நீரும் நேரடியாக கால்வாயில் குவிக்கப் படுகிறது. பேசின் பாலம் முதல் மணாலி வரையுள்ள வடசென்னை அடர்ந்த குடியேற்றம் உடையது. முறையான சுத்திகரிப்பு வசதி இல்லாமையால் பக்கிங்காம் கால்வாய் பெரும் பகுதிகளில் கழிநீர் ஓடையாக இரட்டிக்கப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு எரவனூர் மற்றும் கத்திவாக்கம் நகராட்சிகள் வீட்டுக் கழிவுநீரை நேரடியாக கால்வாயில் கொட்டுகின்றன என சுட்டிக் காட்டுகிறார் பூஜா.

ஏராளமான ஆக்கிரமிப்புகள்

சுற்றுசூழல் பற்றிய கவலையினை மீறுவதற்கு அரசு தீர்மானமாய் உள்ள நிலையில், விளக்கத்திலும் நியாயத்திலும் இருந்து விடுவிக்கப் பட்ட முறைசாரா செயல்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த நீர்நிலை படிப்படியாக நிராகரிக்கப்பட்டு, மோசமாக பராமரிக்கப்பட்டு மெதுவாக இறப்பதற்கு அனுமதிக்கப்படும் சகிக்கவொன்னா நிலையைத் தடுத்து சிறப்பான பயன்பாட்டாக கொண்டு செல்ல ஒருவரும் எதிர்ப்பதில்லை. பகிங்கம் கால்வாயின் மேலாகவே கட்டப்பட்ட வெகுஜன துரித போக்குவரத்து அமைப்பு (MTRS) இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று. தூய்மையான நதியின் மேல் பாலமோ உயர்த்தப்பட்ட ரயில் பாதையோ கட்டப்படுவதுவான திட்டமாய் இருந்திருந்தால் மக்கள் போராட்டத்தில் எழுந்திருப்பார்கள். ஆனால் ரயில் பாதை கழிவுநீர் வாய்க்காலின் மேல் கட்டப்பட்டதால் யார் கண்டு கொள்வது? இவ்வாறே மக்களின் கருத்து வகுக்கப்பட்டது மற்றும் அவ்வாறே அக்கால்வாய்க்கும் நிகழ்ந்தது என வருந்துகிறார் பூஜா.

கரையில் தன் பிரம்மாண்ட வண்டி நிறுத்தும் முற்றத்தால் தன் பங்கிற்கு காமராஜர் துறைமுகம் கால்வாயை விழுங்கி விட்டது. முற்றம் ஒரு ஆக்கிரமிப்பு இல்லை யென துறைமுக அதிகாரிகள் « ப ணி ன £ லு ம் , ப ரு வ ம ¬ ழ காலத்தில் வரத்து அதிகரிக்கையில் நீரோட்டத்திற்கு நிச்சயமாக இது ஒரு தடையே. போக்குவரத்து சாத்தியமாவதற் குக் கருதப்படும் நீர்வழியின் ஒரு புள்ளி முதல் மற்றொரு புள்ளி வரை நீட்டிக்கப்பட்ட கால்வாய் தடையின்றி இருக்க வேண்டும். கால்வாயின் பகுதிகள் நிச்சயமாக மீட்டெடுக்கப் பட்டாலும், இது ஒரு முக்கியமான நீர்வழி போக்குவரத்துப் பாதையாகும் வாய்ப்பினைத் தொடர்ச்சியிண்மை பெரிதும் பாதிக்கிறது. இந்தச் சிதைவுகள் மகத்தானதுவாய் பகிங்கம் கால்வாயின் மறுசீரமைப்புத் திட்டதின் விரிவான அறிக்கை, நகர்ப்புற விரிவாக்கங்கள் சீரமைப்பிற்கு அப்பாலானது என அறிவிக்கிறது. சென்னை நகரில் இக்கால்வாயின் நாணயம் உண்மையில் மீட்கப்பட வேண்டுமென நீங்கள் விரும்பினால் வேளச்சேரி வரை நீண்டுள்ள MRTS-ஐ முழுவதுமாக தகர்க்கத் தயாராக இருக்க வேண்டும். தற்போது எந்த அரசியல்வாதி அல்லது அரசு அதிகாரி இதைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என கேள்வி எழுப்புகிறார் பூஜா.

பன்னிலை அதிர்ச்சி உரிஞ்சல்

இக்கால்வாயை ஆகச் சிறந்த போக்குவரத்து நீர்வழியாகப் பயன்படுத்துவதற்கு நீண்டநாள் ஆகுமெனினும் இதை மீட்டெடுப்பது வெள்ளத்தை மட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். துயரின் போது நகரின் வெள்ள நீரை வெளியேற்றும் பகிங்கம் கால்வாயை மனித சிறுநீரகத்தோடு ஒப்பிடுகிறார் ஜானகிராஜன். கூடுதலாக இக்கால்வாய் அதிர்ச்சி உருஞ்சியாகவும் செயல்பட்டு அதி தீவிர கடல் அலைகளை உள்வாங்கி கடற்கரை ஓரம் மண் அரிப்பைத் தடுக்கிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர் வாரப்பட்டு இக்கால்வாயின் நாணயம் பராமரிக்கப்பட்டிருந்தால் 2015 வெள்ளத்தின் கடுங்கோபம் பெரிதும் குறைந்திருக்கும். கால் வாயின் வழிநெடுகிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழு நீளமும் ஆழப்படுத்தப்பட வேண்டும். இக்கால்வாய் பயனுள்ள வெள்ளநீர் வடிகாலாக செயலாற்ற வடக்கில் உள்ள பழவேற்காடு உவர்நீர் எரிகளையும் தெற்கிலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையும் மேலும் தெற்கிலுள்ள முட்டுக்காடு உப்பங்கழியோடு சேர்க்கும் மூலமுதலான இணைப்பை மீட்டெடுக்க வேண்டும். அகலமும் மீட்கப்பட வேண்டும், 2015 டிசம்பர் மீண்டும் நடைபெறாமல் நமது நகரைக் காக்க இரண்டொரு வழிகள் இல்லையென குறிக்கிறார் ஜனாகிராஜன். வடசென்னையின் நீர்நிலைகளைப் பாதுகாக்க பல சுற்றுகள் மனுக்கள் அனுப்பியும் இணைய பிரச்சாரங்கள் மேற்கொண்டும், கடலோர வள மையத்தின் எண்ணூர் சிற்றோடையைப் பாதுகாப்போம் என்ற பிரச்சாரம் பயனை ஈன்றது. இவ்வாண்டின் வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக, சென்னையின் சமீபகால நினைவுகளில் இருக்கும் மோசமான டிசம்பரை மீண்டும் நிகழ்ந்திராமல் தடுக்க பக்கிங்காம் கால்வாயின் பகுதிகளை சிற்றோடையோடு சேர்த்துத் தோண்டித் தூர்வாருமாறு எண்ணூர் அனல்மின் நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் காமராஜர் துறைமுக அறக்கட்டளையை அரசாங்கம் இயக்கியுள்ளது.

சீதா கோபாலகிருஷ்ணன் தமிழில் மகேஷ் நாகேந்திரன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments