தமிழ்நாட்டில் புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளான புயல், வெள்ளம், வறட்சி, வெப்ப அலை, மின்னல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் வெளியிட்ட Climate India 2024: An Assessment of Extreme Weather Events எனும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் 29 நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவான நிலையில் நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 67 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் 93% நாட்களில் ஏதோவொரு தீவிர வானிலை நிகழ்வு பதிவாகியுள்ளது. இந்த காலத்தில் மட்டும் பேரிடர்களால் 3,238 பேர் உயிரிழந்துள்ளனர், 9,457 கால்நடைகள் இறந்துள்ளன, 32 லட்சம் எக்டர் பரப்பிலான வேளாண் பயிர்கள் அழிந்துள்ளன, 235,862 வீடுகள் சேதமடைந்துள்ளன என்கிறது இந்த அறிக்கை.
http___cdn.cseindia.org_attachments_0.31962100_1731049647_extreme-weather-events-2024-(2)