2026 – 2030 வரையிலான 5 ஆண்டுகளுக்குப் புவியின் ஆண்டு சராசரி வெப்பநிலை 1850–1900 காலகட்டத்தின் சராசரியை விட 1.3°C முதல் 1.9°C வரை அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2026 முதல் 2030 க்கு இடையில் ஏதேனும் ஒரு ஆண்டு 2024 ஐ விட வெப்பமான ஆண்டாக பதிவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக உலக வானிலையில் அமைப்பும் ஐக்கிய ராச்சியத்தின் வானிலை அலுவலகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Global Annual-to-Decadal Update எனும் ஆய்வறிக்கை 2026 முதல் 2030 க்கு இடையில் குறைந்தது ஒரு ஆண்டாவது உலகளாவிய சராசரி வெப்பநிலை 1850–1900 சராசரியை விட 1.5°C அளவுக்குக் கூடுதலாகப் பதிவாகும் வாய்ப்பு மிகவும் அதிகம் எனக் குறிப்பிடுகிறது. 2024 இலும் தற்காலிகமாக இந்த உயர்வு பதிவானது. 2024ஆம் ஆண்டின் சராசாரி வெப்பநிலை உயர்வு தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தின் சராசரியைவிட 1.55 °C செல்சியஸ் அதிகமாகப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
WMO-GADCU-2026-2035_en