“அணுத்தீமையற்ற தமிழ் நாடு” அனைத்துக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை

PRESS MEET

கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிராகவும், அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிராகவும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லெனின், SDPI கட்சியின் மாநில பொதுசெயலாளர் அச. உமர்பாரூக், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

அனைத்துக் கட்சித் தலைவர்களி சார்பாக பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது

[1] கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ்நாட்டின் பெரும் தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2021 ஜூன் மாதம் 22 அன்று வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட முதலாவது அணுஉலை, 70 நாட்கள் மூடப்பட்டு, செப்டம்பர் 2 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. வெறும் 35 நாட்கள் கழிந்ததும் முதலாவது அணுஉலை பழுதுபட்டு அக்டோபர் 8, 2021 அன்று மீண்டும் மூடப்பட்டது. இந்த கூடங்குளம் கோளாறு வேடிக்கையான விடயமென்பதைத் தாண்டி, விபரீதமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுவரை முதல் இரண்டு உலைகள் நூறு முறைக்கு மேல் பழுடைந்து நின்றுள்ளது.

கூடங்குளத்தில் திறம்பட இயங்காதிருக்கும் முதல் இரண்டு அணுஉலைகளில் நடைபெற்றிருக்கும் மாபெரும் முறைகேடுகள், ஆபத்துக்கள், பற்றியெல்லாம் ஒரு சார்பற்ற விசாரணை நடத்தி ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். முழு உண்மைகளை மக்களுக்குச் சொல்லும்வரை, விரிவாக்கப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்.

[2] ரஷ்யாவுடனான 1997 அக்டோபர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூடங்குளம் அணுஉலைகளில் எரிக்கப்படும் எரிகோல்களை ரஷ்யாவுக்கேத் திருப்பி அனுப்பவேண்டும்.

[3] இந்தியாவில் அணுக்கழிவுகளின் ‘ஆழ்நிலக் கருவூலம்’ (Deep Geological Repository) எங்கே கட்டப் போகிறோம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகே, கூடங்குளத்தில் ‘அணுஉலைக்கு அகலே’ (Away From Reactor) அமைப்பைக் கட்டுவது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும்.

[4] மேற்படி இடைநிலை அணுக்கழிவு மையங்களை நிர்மாணிக்கும் வரை, கூடங்குளத்தில் 3 & 4 அணுஉலைகள் கட்டுவதை நிறுத்திவைக்க வேண்டும். 5 & 6 அணுஉலைகள் கட்டுவதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

[5] தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைக்கப்படும் கூடங்குளம் அணுஉலைப் பூங்கா, வடக்குப் பகுதியில் நிறுவப்படும் கல்பாக்கம் அணுஉலைப் பூங்கா, போன்றவற்றைக் கைவிட்டு, நம் மாநிலத்தை “அணுத்தீமையற்றத் தமிழ்நாடு” (Nuclear-free Zone Tamil Nadu) என்று அறிவிக்க வேண்டும்.

[6] ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் போன்ற வெளிநாடுகளின் தரமற்ற அணுஉலைகளை, தளவாடங்களை வாங்கி, அந்நாடுகளின் பொருளாதாரங்களைத் தூக்கிநிறுத்த உதவாமல், இந்திய மக்களும், தமிழர்களும், எங்களின் வழித்தோன்றல்களும் நலமாய், பாதுகாப்பாய் வாழ வழிவகை செய்யவேண்டும்.

ஒருங்கிணைப்பு: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள்

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்குபெற்ற தலைவர்கள்:

1.தொல். திருமாவளவன்
வி.சி.க

2. ஜவாஹிருல்லா
மனித நேய மக்கள் கட்சி

3. ஆர். பத்ரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

4. த. லெனின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

5. அந்தரிதாஸ்
ம.தி.மு.க

6.உமர்பாருக்
SDPI

7.
வேணுகோபால்
த.வா.க

8. நித்தியானந் ஜெயராமன்
Chennai Solidarity Group

9. கோ. சுந்தர்ராஜன்
பூவுலகின் நண்பர்கள்

PRESSMEET

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments