மரபணு மாற்றத்துக்கெதிரான கையெழுத்து இயக்கம்…

மரபணு மாற்றப்பட்ட உணவு தானியங்களை அனுமதிப்பதில்லை என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தண்ணீர் அமைப்பு கையெழுத்து இயக்கத்தைத் தீவிரமாக நடத்தி முடித்திருக்கிறது. திருச்சியை மையமாகக் கொண்டு செயல் பட்டு வரும் இந்த அமைப்பு கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இந்தப் பணியைத் தொடங்கியது. சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ்மானூஷ் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில், 10, 18, 20, 23 மற்றும் 27 ஆகிய 5 நாட்கள் தொடர்ந்து திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அப்போதே, இயற்கை வேளாண் செயற் பாட்டாளர் அறச்சலூர் செல்வம் எழுதிய கட்டுரையின் பிரதிகள் துண்டுப் பிரசுரமாக அச்சிடப்பட்டு பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டன. பொதுமக்களிடம் பெறப்பட்ட 2000 கையெழுத்துகளுடன் நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், மத்திய வேளாண் அமைச்சர், தமிழ்நாடு மாநில முதல்வர், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர், மாநில வேளாண் துறை அமைச்சர் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப் பட்டன.

பொதுமக்களிடம் பெறப்பட்ட 2000 கையெழுத்துகளுடன் நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், மத்திய வேளாண் அமைச்சர், தமிழ்நாடு மாநில முதல்வர், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர், மாநில வேளாண் துறை அமைச்சர் ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப் பட்டன.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மரபணு மாற்றப்பட்ட கடுகின் செடியிலிருந்து பரவும் மகரந்தத் தூள்கள், அருகில் வழக்கமான பாரம்பரிய கடுகுச் செடி இருந்தாலும் அதனையும் மரபணு மாற்றப்பட்டதாக மாற்றும் தன்மை கொண்டது என்று சூழலியல் மற்றும் வேளாண் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைக்கு நீதிமன்ற உத்தரவின்படி தாற்காலிகத் தடை இருந்தாலும், கடுகு மட்டுமல்லாது, அனைத்து மரபணு மாற்ற உணவு தானியங்கள், விதைகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். இதற்கான முடிவை மத்திய, மாநில அரசுகள் கொள்கை முடிவாகவே அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்புக்காக நாடு முழுவதுமுள்ள வேளாண் வளர்ச்சி ஆர்வலர்களும், சூழலிய லாளர்களும் காத்திருக்கிறோம் என்று கோரப் பட்டுள்ளது. தொடர் கையெழுத்து இயக்கத்திற்கான ஏற்பாடுகளை, தண்ணீர் அமைப்பின் தலைவர் எம். சேகரன், துணைத் தலைவர்கள் விஸ்வநாதன், மு. பொன்னிளங்கோ, செயலர் கே.சி. நீலமேகம், இணைச் செயலர்கள் கி. சதீஷ்குமார், ஆர்.ஏ. தாமஸ், பொருளாளர் ஜி. சிவகுருநாதன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பழனிராஜ், விஸ்வநாத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

நிகழ்வுகள்

இதையும் படிங்க.!