கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேசம் முதல் தமிழ்நாடு வரை அதிகம் பேசப்பட்ட வேதிப்பொருள் அம்மோனியும் நைட்ரேட்..காரணம் லெபனான் விபத்து..
ஆகஸ்ட்4ம் தேதி லெபனான் தலைநகர் பீருட்டில் உள்ள துறைமுகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த2750 டன்அமோனியம் நைட்ரேட்பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 220 பேர் உயிரிழந்தும், 5000 பேர் காயமடைந்தும், சுமார்3லட்சம் பேர் வீடிழந்தும் நிர்கதியாக்கபட்டனர்.
உலகில்அம்மோனியம்நைட்ரேட் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையல்ல. 1947 ம் ஆண்டு டெக்சாஸ் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த2300டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் அருகே இருந்த ரசாயின உரம்ஏற்றிவந்த கப்பலும்தீபற்றிசுமார்567 பேர் உயிரிழந்தனர்.
இதே போல் 2015ம் ஆண்டு சீனாவில் உள்ள டியாஞ்சின் துறைமுகத்தில் அடுத்தடுத்து சிலவினாடிகளில் நடந்த தொடர் அம்மோனியும் நைட்ரேட் (சுமார்800டன்)வெடிப்பில்173 பேர் பலியானதோடு 800 பேர் படுகாயமடைந்தனர்.
எனினும்2000ம் ஆண்டுக்கு பிற்பாடு நடந்த அம்மோனியம் நைட்ரேட் விபத்துகளில் தற்போதைய லெபனான் விபத்தேமோசமானதாக கருதப்படுகிறது.
ஆண்டு ஒன்றுக்கு உலகம் முழுவதும் சுமார்20 மில்லியன் டன் அமோனியம் நைட்ரேட் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வளவு அதி பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அமோனியம் நைட்ரேட்டைஉற்பத்திசெய்வதற்கானகாரணம் அதுவிவசாயஉரமாகவும், சுரங்கப்பணிகளுக்கான வெடி பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதனால் தான்.
சரி லெபனான்நில் நடந்த விபத்து எப்படி சென்னையில் அதிர்வலையை உண்டாக்கியது என்பதனைபார்க்கும் முன்னர் அம்மோனியும் நைட்ரேட்டின் தன்மையை பார்ப்போம்.
பொதுவாகஅம்மோனியும் நைட்ரேட் மற்ற எரிபொருள்களுடன் சேரும் பொழுது எளிதில் தீ பிடிக்கும் வாய்ப்புள்ளது. மற்றப்படி அதிக வெப்பநிலை 210 டிகிரி செல்சியஸ் தாண்டும் பொழுது தான் தானாகவே வெடிக்கும். இவை இரண்டிற்குமான சாத்தியகூறுகள் குறைவு என்றாலும் வரலாற்றில் 34 பெரிய விபத்துகள் நடந்துள்ளது என்பது கவனிக்க வேண்டியது.
இவ்வாறான விபத்துக்களை நடக்காமல் தடுப்பதற்காக தான் Ammonium Nitrate Rule 2012, என்னும்சட்ட விதியை நடைமுறை படுத்தியது.
அம்மோனியம்நைட்ரேட்டை பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்வதற்கும், கையாளுவதற்கும், சேகரித்துவைப்பத்ற்கும், அதன் போக்குவரத்திற்கும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கும்என தனி தனியாக பிரத்தியேகமான வழிகாட்டுதல்கள் இந்த சட்ட விதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவுவிதிகளும் வழிகாட்டுதலும் கொடுக்கபட்டிருந்தாலும் தமிழக மக்கள், சென்னை துறைமுகத்தில் சேமித்து வைத்திருக்க பட்டிருக்கும் அமோனியம் நைட்ரேட்டை கண்டு பீதி அடைகிறார்கள் என்றால் , அதற்கு காரணம் லெபனான் வெடிப்பு மட்டுமல்ல , ஆறு வருடங்களாக போதிய பாதுகாப்பு இல்லாமலும் , Ammonium Nitrate Rules 2012ல் வரையறை செய்யப்பட்டுள்ள பல விதிகள் மீறப்பட்டுள்ளதும் மக்களின் நியாயமானஅச்ச உணர்வுக்கு முக்கிய காரணம் .
சென்னை மணலியில் அம்மொனியம் நைட்ரேட் சேகரிப்பதில் மீறப்பட்டுள்ள விதிகள்:
- அம்மொனியம்நைடரெட்சேகரித்து வைக்கபட்டிருக்கும் மையம்மக்கள் வசிப்பிடம் அருகே இருக்க கூடாது என்பது முக்கியமான விதி.
ஆனால் சென்னை மணலியில் அம்மொனியும் நைட்ரேட் சேகரித்துவைக்கபட்டிருக்கும் இடத்திற்கு 1.5 கிமீ சுற்றளவில் 12,000 மக்கள் வசிக்கிறார்கள். (700மீ தொலைவில் உள்ள manali new town இல்7000 மக்களும்,1.5கிமீ தொலைவில் உள்ளசடையான் குப்பத்தில் 5000 மக்கள் வசிக்கிறார்கள்).
- Ammonium nitrate ஐசேகரித்து வைக்க கூடிய மையம் பிரத்தியேகமாக அம்மோனியும் நைட்ரேட்டை மட்டுமே தான் சேகரித்து வைக்க வேண்டும், வேறு எந்த பொருள்களையும் சேகரித்து வைக்க கூடாது என்று அரசுவிதிசொல்கிறது. ஆனால் மணலியில் அனைத்து விதமான சரக்கு போக்குவரத்து நடக்கும் ஒரு இடத்தில அம்மொனியும் நைட்ரேட் அலட்சியமாக வைக்கபட்டிருந்தது.
- 2012 விதிகளில் சொல்லப்பட்டுள்ள மற்றுமொரு விடையம், தேவையில்லாமல்அம்மொனியும் நைட்ரேட் ஒரு இடத்தில் சேகரித்து வைக்கபட கூடாது என்பது. ஆனால்மணலியிலோ கடந்த ஆறு வருடங்களாக அம்மொனியும் நைட்ரேட் எந்த பயன்பாடுமின்றி வைக்கப்பட்டுள்ளது.
- அம்மொனியும் நைட்ரேட் சேகரித்து வைக்கப்படும் கட்டிடம், இடி மின்னல் தாக்காத வகையில் வடிவமைக்க பட்டிருக்க வேண்டும் என்கிறது 2012 அம்மோனியம்நைட்ரேட் விதி. சென்னை மணலியில் சேகரித்து வைவமைக்கபட்டிருந்த இடம் அப்படியெல்லாம்வடிவமைக்கப்பட்டதாக தெரியவில்லை.
இப்படி12,000 மக்களின் உயிரை அலட்சியமாக நினைத்து 6 வருடங்களாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியும் நைடரெட்டை மக்கள் எதிர்ப்பிற்கு பின் அங்கு இருந்து உடனடியாக அகற்றியதோடு, நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் இப்படி அம்மொனியும் நைட்ரேட் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனைபோடவும்மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வெறும் அம்மொனியும் நைட்ரேட் சேகரித்து வைக்கபட்டிருக்கும் தொழிற்சாலைகளோடு மட்டும் நில்லாமல், தமிழ்நாட்டில் உள்ள138 MAH-Maximum Accident Hazzard தொழிற்சாலைகளும் ஊரடங்கிற்கு பிற்பாடு முறையாக சோதிக்கப்பட்டுசேமித்து வைக்கபட்டுள்ள அபாயகரமான ரசாயினங்கள் மற்றும் வேதி பொருட்கள் பாதுகாப்பாக தான் உள்ளதாஎன்பதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியம் உறுதிபடுத்த வேண்டும் என்பதனை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கையாக வைக்கிறது.