வேதாந்தாவை ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பிற்காக அனுமதிக்கக் கூடாது. – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் தொடர் விதிமீறல் நடவடிக்கைகளின் காரணமாக 28.05.2018 அன்று தமிழ் நாடு அரசு வேதாந்த நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் 18.08.2020 அன்று உறுதி செய்தது. இந்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது வேதாந்தா நிறுவனம். மேலும், வழக்கு நிலுவையில் உள்ள காலகட்டத்தில் ஆலையின் பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிகோரி இடைக்கால மனுவும் தாக்கல் செய்துள்ளது.

ஆலை பராமரிப்புப் பணிகளின் தேவை குறித்து ஆராய தமிழ் நாடு அரசு அமைத்திருந்த உயர்மட்டக் குழு  ஜூலை 2022ல் அறிக்கை ஒன்றை அரசிடம் தாக்கல் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 6ம் தேதி, தமிழ் நாடு அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளருக்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம், சில ஆலை பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க உத்தவிட்டுள்ளார். இதன்படி ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவும், பசுமைப் பரப்பை சீர்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கூறிய ஆலை பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

தமிழ் நாடு அரசின் ஒப்புதலுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்ட பணிகள்:

  1. Evacuation of remaining Gypsum and the required

manpower as requested by the unit may be permitted. In

this regard, the unit shall submit a detailed proposal and

time schedule including the man power, machineries,

number of trucks required for removal of the remaining

gypsum. Once the evacuation of the Gypsum is over the

manpower and the machineries permitted for that

purpose should be withdrawn.

  1. To carry out SLF Leachate Collection Sump Pump

Operations on daily basis as long as the leachate

generation is there in order to avoid any possibility of

evnironmental degradation on account of the leachate

from the SLF. The activity shall be carried out with the

already permitted manpower for the said purpose by the

District Collector vide Proc. Dated: 09.10.2018. The

leachate collected from the SLF shall be pumped back to

the SLF and to be kept in a closed circuit.

  1. To carry out bund rectification of SLF-4 with required man

power in order to avoid any possibility of environmental

degradation on account of the breach of the SLF bund.

The activity shall be carried out with the already

permitted manpower for handling and treatment of

leachate generated from the SLF-4 vide District Collector’s

Proc. date: 09.10.2018.

  1. To undertake the green belt maintenance and for clearing

the wild bushes and dried trees and the same shall be

carried out under the supervision of BDO, Ottapidaram.

.

மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்படாத பணிகளான வளாகத்தில் உள்ள உதிரிபாகங்கள்/ உபகரணங்கள் போன்றவற்றை அகற்றுதல், ஆலையின் பாதுகாப்பு மதிப்பீடு செய்யும் பணிகள் போன்றவை குறித்து தமிழ் நாடு அரசு மீண்டும் பரிசீலித்து கூடுதல் உத்தரவுகள் பிறப்பிப்பது குறித்து முடிவு செய்யும் எனவும் தமிழ் நாடு அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு அரசின் இந்த  நிலைப்பாடு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதை அகற்றும் பணிக்காக வேதாந்தா நிர்வாகத்தை மீண்டும் ஆலைக்குள் செல்ல அனுமதி அளிப்பது ஆலைக்கெதிரன போராடிய மக்களுக்கும் உயிர்நீத்தவர்களுக்கும் செய்யும் அநீதியாகும். மாறாக  கழிவுகளை அகற்றும் பணியை வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று அரசே செய்துவிட்டு அதற்கான செலவுத் தொகையை ஸ்டெர்லைட்டிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இத்தகைய அனுமதியைப் பயன்படுத்தி வேதாந்தா மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயலும் என்பதை யாரும் அறிவர். ஆலையை இடித்து அகற்றிவிட்டு, அந்த இடத்தை பழைய நிலைக்கு மறுசீரமைப்பது மட்டும்தான் ஸ்டெர்லைட் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஒரே வேலை. அதை விடுத்து வேறு எந்த நிலைப்பாட்டையும் அரசு எடுக்கக்கூடாது. எனவே தமிழ் நாடு அரசு மேற்கூறிய அனுமதி ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு புதிய உத்தரவை பிறப்பிக்குமாறு கோருகிறோம்.

உச்ச நீதிமன்ற உத்தரவு:

sci_pdf_1681132873741
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments