சுற்றுச்சூழல்சார் செயல்பாட்டு பட்டியலில் இந்தியாவிற்கு 141வது இடம்!

உலக நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த செயல்பாடுகளை ஆய்வுசெய்த யேல் பல்கலைகழகம் “சுற்றுச் சூழல்சார் செயல்பாட்டு பட்டியல்” (Environmental Performance Index)  ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 141வது இடத்தை பிடித்துள்ளது. ஜக்கிய நாடுகள் வகுத்துள்ள நீடித்த நிலைத்த வளர்ச்சியின் அம்சங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பட்டியல் கூறும் முக்கிய செய்திகள்: உலகெங்கும் மாசடைந்த குடிநீரால் இறப்பவர்கள் எண்ணிக்கையை விட மாசடைந்த காற்றினால் மடிபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உலகெங்கும் சுமார் 3.5 பில்லியன் மக்கள் மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர். இந்தியாவிலோ சுமார் 75 சதவீத மக்கள் மாசடைந்த காற்றை சுவாசிகின்றனர். காற்று மாசடைவதை தடுக்க இந்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது இந்த அறிக்கை. உலகில் 550 மில்லின் மக்களுக்கு குடிப்பதற்கான பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது அரிதாகவே உள்ளது. 2.4 பில்லியன் மக்கள் சுகாதார மான கழிப்பிட வசதி இல்லாமல் உள்ளனர். உலகின் மொத்த மீன் வளத்தில் சுமார் 4.34 சதவீதம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. 2.52 மில்லின் கீ.மி. அளவிலான காடு 2014ம் ஆண்டில் மட்டும் அழிக்கப் பட்டுள்ளது. அறிக்கையை முழுமையாக வாசிக்க: http://epi.yale.edu/ downloads

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments