ஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.

நிலப்பரப்பிற்கு கீழே உள்ள அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களையும் “ஒற்றை உரிமையின்” கீழ் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு. 

மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கடந்த 2015ம் ஆண்டு Marginal Field Policy என்னும் கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கொள்கை பின்பு Small Division Field policy என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த கொள்கைப்படி அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களை ஒற்றை உரிமம் மூலம் எடுத்துக் கொள்ளும் உரிமையை மத்திய அரசு அளித்தது. அதாவது மரபு ஹட்ரோகார்பன்களான பெட்ரோல், இயற்கை எரிவாயு, எண்ணெய் தவிர்த்து மரபுசாரா ஹட்ரோகார்பன்களான மீத்தேன், Shale gas, tight gas, பிற hydrates எடுப்பதற்கான உரிமம் வழங்கப்படும். மேலும் எதிர் காலத்தில் கண்டறிய கூடிய புதிய ஹட்ரோகார்பன்களையும் எடுக்கும் உரிமம் வழங்கப்படும். இந்த கொள்கைப்படிய நெடுவாசல், காரைக்கால் பகுதியில் ஹட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமம் தனியார் நிறுவனங்களிடம் 2017ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த கொள்கையையும் அது சார்ந்து வழங்கப்பட்டுள்ள உரிமத்தையும் ரத்து செய்ய கோரி பூவுலகில் நண்பர்கள் இயக்கம் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளது.

மேற் கூறிய Marginal Field Policy என்பது Petroleum and Natural Gas Rules, என்னும் சட்டத்திற்கு எதிராக உள்ளது.

இந்த சட்டத்தில் பெட்ரோலியம் பற்றி கூறுயுள்ள அம்சங்களை விட அதிக அளவில் இயற்கைவளங்களை எடுக்க அரசின் கொள்கை வழிவகுகிறது.

பெட்ரோலியம் குறித்த சட்ட விளக்கம் 2018ம் ஆண்டு மாற்றி அமைப்பட்டுள்ளது. இது நிறுவனங்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்டது. இந்த மாற்று சட்டப்படியே shale, மீதேன் போன்றவற்றை எடுக்க முடியும். இருப்பினும் 2015ம் ஆண்டு சட்டப்படி அரசின் கொள்கை தவறு.

மேலும், drilling by mechanical process மூலம் மட்டுமே ஹட்ரோகார்பன் எடுக்கும் உரிமை சட்டம் வழங்குகிறது.

Hydraulic Fracturing மூலம் மட்டுமே மீன்தேன், Shale போன்ற ஹட்ரோகார்பன்களை எடுக்க முடியும். Hydraulic fracturing சட்டப்படி  அனுமதிக்கப்படாத ஒர் முறை. எனவே சட்ட அனுமதி இல்லாத முறையில் ஹட்ரோகார்பன் எடுக்க உரிமம் வழங்கும் அரசின் கொள்கை தவறு.

இந்த வாதங்கள் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்றைக்கு விசாரணைக்கு வந்த வழக்கில் பூவுலகின் நண்ப்ர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.ராதாகிருஷ்ணன் மற்றும் வழ.வெற்றிச்செல்வன் வழ.சுந்தர்ராஜன் ஆஜர் ஆனார்கள்.எங்கள் தரப்பின் வாதங்களை கேட்டுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு. சத்யநாராயணா மற்றும் சேஷசாயி கொண்ட அமர்வு, இதற்கு குறித்து பதில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசிற்கும், ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்திற்கும் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments