2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த சென்னை பெருவெள்ளம் குறித்தான நாடாளுமன்ற குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் :
நீர்நிலைகள் பல்வேறு வகையில் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதே சென்னை பெரும் வெள்ளத் திற்கான முக்கிய காரணம் என்று நாடாளுமன்ற குழு கூறியுள்ளது. எனவே இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந் துரைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர கழிவு நீர் வடிகால் அமைப்பு மிகவும் மோசமாக உள்ளதாக குழு தெரிவித்துள்ளது. திட்டமிடப்படாத நகர கட்டுமான் இது போன்ற நிகழ்வுக்கு மற்றொரு முக்கிய காரணம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இதுபோன்ற இயற்கை பேரிடர்களைக் கையாளும் வகையில் நகர கட்டுமானம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை மிகவும் சீர்கெட்டு கிடப்பதையும் குழு சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய பேரிடர் ஆணையம், மற்றும் மாநில பேரிடர் ஆணையம் செயல்படமால் இருப்பதை இக்குழு எடுத்துரைத்துள்ளது. மாநில பேரிடர் ஆணையம் செயலற்று உள்ளதையும் கூறியுள்ளது நாடாளுமன்றக் குழு. அதேபோல தமிழக அரசின் கூற்றான, இது எதிர்பாராத இயற்கை பேரிடர் என்னும் கருத்தை குழு மறுத்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக நிகழும் தொடர் இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மை பாதுகாக்க போதிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது நாடாளுமன்ற குழு. பேரிடர் மேலாண்மை, முன்தயாரிப்பு, மக்களுக்கான பயிற்சி, கட்டுமானம் போன்ற வற்றில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. சென்னை வெள்ளம் பல கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும், இந்த இழப்புகளை சந்திக்க தேவையான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு இன்னும் தமிழக அரசுக்கு அளிக்கவில்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறது நாடாளுமன்ற குழு அறிக்கை.