புதிய மணல் குவாரிகளால் நமது ஆறுகள் அழிந்து, தமிழ்நாடு பாலைவனமாகும் அபாயம் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.

தமிழ்நாட்டில் புதிதாக  ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகிறது. ஆற்றில் மணல் எடுக்கும் முறையை இயந்திர முறைக்கு மாற்றவும் அனுமதிகள் வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும்  நமது ஆறுகளை பாலைவனமாக்கும் என்பதால் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

தமிழ்நாட்டில் கட்டுமானத் துறையின் மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ஜனவரி மாதமே புதிதாக ஆற்றுப் படுகைகள் மற்றும் ஆற்றின் வடிகால் பகுதிகளில் மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்தது. அதன்படி 2022 ஜனவரி முதல் தற்போது வரை கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவேரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக 9 மணல் குவாரிகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு நீர்வளத்துறையானது தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. மேலும் சில புதிய ஆற்று மணல் குவாரிகள் அமைப்பதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, ஏற்கனவே சுற்றுச்சூழல் மற்றும் சுரங்க அனுமதி பெற்று செயல்படாமல் இருந்த குவாரிகளையும் திறப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. அதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஏற்கனவே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட 30 குவாரிகளில் மணல் அள்ளும் முறையை மனித சக்தியைப் பயன்படுத்தி மற்றும் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி அள்ளும் முறைக்குப்( Manual Mining) பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தி அள்ளும் முறைக்கு மாற்றுமாறு சுற்றுச்சூழல் அனுமதியில் திருத்தம் கோரப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தின் செந்துறை தாலுகாவில் வெள்ளாற்றில் 8 இடங்களிலும்,  நாமக்கல் மாவட்டத்தின் மோகனூர் தாலுகாவில் காவேரி ஆற்றில் 3 இடங்களிலும், கரூர் மாவட்டத்தில் காவேரி ஆறு பாயும் மண்மங்கலம் தாலுகாவில் 5 மற்றும் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 2 இடங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆறு பாயும் கும்பகோணம் தாலுகாவில் 3 மற்றும் பாபநாசம் தாலுகாவில் 2 இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு பாயக் கூடிய அறந்தாங்கி தாலுகாவில் 2 இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு பாயக்கூடிய விளாத்திக்குளம் தாலுகாவில் 1 இடத்திலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பார் பாயக்கூடிய திருவாடானை தாலுகாவில் 2 இடங்களிலும், கோட்டக்கரை ஆறு பாயக்கூடிய ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 2 இடங்களில் உள்ள மணல் குவாரிகளுக்கு மணல் அள்ளும் முறையில் திருத்தம் கோரப்பட்டுள்ளது.

”கொரோனா காலத்தில் இக்குவாரிகளை இயக்க முடியவில்லை என்பதாலும் தற்போது மணல் தேவை அதிகரித்திருக்கிறது. புதிய குவாரிகளை அரசு திறக்க முடிவெடுத்திருந்தாலும் மணல் தேவையை உடனடியாகப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளுவதற்கும், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தி மணலை கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்க வேண்டும்” என நீர்வளத்துறை தனது விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ளது.

மணல் குவாரிகளை இயக்குவதற்கு Sustainable Sand Mining Manangement Guidelines–2016, Enforcement and Monitoring Guidelines for Sand Mining,2020 உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். 2016ம் ஆண்டு வழிகாட்டுதல்கள் வெளியான பின்னரும் கூட தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த குவாரிகளில் பல்வேறு விதிமீறல்களும், மணல் திருட்டும் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் நீதிமன்றங்களிலும், பசுமைத் தீர்ப்பாயங்களிலும் மணல் திருட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில் மணல் அள்ளுவதற்கான விதிகளை தவறாது பின்பற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுகள் பலவற்றிலும் மணல் அள்ளுவதில் Manual Mining முறையைக் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதையெல்லாமல் கருத்தில் கொள்ளாமல் இயந்திர முறையில் மணல் அள்ளுவதற்கான அனுமதிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கத் தொடங்கியிருப்பது ஆறுகளின் அழிவிற்கு வித்திடும்.

புதிய குவாரிகளுக்கு அனுமதி கொடுப்பதிலும் உரிய ஆய்வுகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படாதது ஏமாற்றமளிக்கிறது. கரூர் மாவட்டத்தில் நன்னியூர் மற்றும் நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்) பகுதிகளில் நீர்வளத்துறை புதிதாக அமைக்க திட்டமிட்டிருக்கும் புதிய மணல் குவாரிகளை 09.07.2022 அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சாமானிய மக்கள் நலக் கட்சி மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

புதிய மணல் குவாரி ஆய்வின்போது நேரில் கண்டறிந்த உண்மைகள் சில:

நன்னியூர் புதிய மணல் குவாரி:

  1. நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் தென் கிழக்கு எல்லைகளிலிருந்து, நேர் தெற்காக சுமார்200 மீட்டர் தூரத்தில் ஊர் நத்தம், வீடுகள், அரசு கட்டிடங்கள், கோயில்கள் உள்ளன.

(300 மீட்டர் தூரத்தில் வீடுகள் இருந்தால் குவாரி அனுமதி கிடையாது)

  1. நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும்வட மேற்கு எல்லையில் இருந்து, வடக்கு பகுதியில் சுமார் 700 மீட்டர் தூரத்தில்  குமாரபாளையம் படுகையில், வனத்துறையின் காப்புக் காடுகள் உள்ளது.

(வனத்துறையின் காப்புக் காடு பகுதியில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் குவாரிகள் அமைக்க கூடாது)

  1. நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் தென் கிழக்கு எல்லைகளிலிருந்து, சுமார்200 மீட்டர் தென்கிழக்கில் நெரூர் கால்வாயில் மதகு (சுளூயிஸ்) உள்ளது.

(குவாரி அமையும்  இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் ஆற்றிற்குள் நிரந்தர கட்டிட அமைப்பு இருக்கக் கூடாது)

  1. நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும்மேற்கு எல்லையில் இருந்து, மேற்கு பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் உயர் மின் கோபுரம் டவர் பேஸ்மெண்ட் கட்டிடம் அமைத்து கட்டப்பட்டுள்ளது ‌

(குவாரி அமையும்  இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் ஆற்றிற்குள் நிரந்தர கட்டிட அமைப்பு இருக்கக் கூடாது)

  1. அனைத்தையும் விட அதிர்ச்சிகரமாக, நன்னியூர் புதிய மணல் குவாரி அமையும் இடமாக காட்டப்படும் இடங்களில், ஏற்கனவே மணல் முழுக்க அள்ளப்பட்டு மணல் எதுவும் இல்லாத நிலையும், தரையை ஒட்டியே ஆறு ஓடிக் கொண்டுள்ளது.

(ஆனால் சுரங்க திட்டத்தில் மூன்று மீட்டர் உயரத்திற்கு மணல் உள்ளது எனவும் அதில் ஒரு மீட்டர் மணல் 4.90 ஹெக்டேர் பரப்பளவில் 48 ,000 கன மீட்டர் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.)

இப்படி பல்வேறு விதிமீறல்களை ஆய்வுக்குழு அப்பகுதியில் கண்டறிந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றிலும் கூட தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் கிணறுகள் அமைந்துள்ள இடங்களுக்கு மிக அருகாமையில் குவாரிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கிணறுகள் அமைந்திருக்கும் இடங்களுக்கு அருகில் மணல் குவாரிகள் அமைத்தால் கிணறுகளுக்குச் செல்லும் நீரின் அளவு குறையும். அதன்  காரணத்தால் அண்மைப் பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.

உரிய ஆய்வுகள், வழிகாட்டுதல்கள், கண்காணிப்புகள் இன்றி ஆற்று மணல் குவாரிகள் அமைப்பதால் ஆற்றுப்படுகை அழிந்து நிலத்தடியில் நீர் சேகரமாவது தடைபடும். ஆற்றின் கரைகள் உடைக்கப்படுவதோடு, தடுப்பணைகளின் மணல் அரிப்பு ஏற்பட்டு கட்டுமானம் நிலைகுலையும். ஆறுகளின் இயல்பான நீரோட்டம் தடைபடுவதோடு ஆற்றங்கரை உயிர்ப்பன்மையத்தின் சமநிலை கெடும் நிலை ஏற்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் ஏப்ரல் 26ம் தேதி ”Sand and Sustainability: 10 strategic recommendations to avert a crisis” என்கிற ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு அரசும் மணலை கட்டுமானத்திற்கு பயன்படும் ஒரு பொருளாக மட்டும் பார்க்காமல் அதன் சூழல் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் சேர்த்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வளமாக பார்க்க வேண்டும் என்றும் மணலுக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

மேற்கண்ட விஷயங்களைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் புதிய ஆற்று மணல் குவாரிகளைத் திறப்பதையும், மணல் அள்ளும் முறையை இயந்திரமாக்கும் முயற்சிகளையும் கைவிட வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் அவர்கள் தனது அதிகாரத்திற்குட்பட்ட மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் கோருகிறோம். ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் இயற்கை வளப் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் உயிர் ஆதாரங்களான ஆறுகளைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களில் புதிய குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டதற்கான மற்றும் இயந்திர முறையில் மணல் அள்ளும் வகையில் திருத்தம் கோரப்பட்டதற்கான விண்ணப்பங்களையும் கீழே வழங்கியுள்ளோம். மணல் குவாரிகள் அமைந்திருக்கும்  மற்றும் அமையவுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல், வேளாண் மற்றும் அரசியல் அமைப்புகள் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி கள ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

 

 

திருத்தம் கோரப்பட்டுள்ள மணல் குவாரிகள்
  1. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOwI3ckuDe0MIkzQvoAJ3j2zo0SpFbFMgwbVG3XYZmaDi&idd=fOZPAJVDqYGOzTg3Rgnpyg==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=QWCoSykTgpRTL3yqcVU6WxOeu1zzpMDF2wNIuCZPF3w%3d
  2. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO44uLRcZ418yHd1CxklxD0ScnT7vdp6Z4Ab1AafeVSdE&idd=gZslatgdSkTOP8Ek0J1sWw==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=a%2fTOPD7V6QO3CcYAYQ2%2fWt4prrZXZKpTT5SKUZDWCR4%3d
  3. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOzuXbpZSkDU0LgphzX1PUlhD7oUmRdHUYOuH9YEEM0Tr&idd=v1HLfZTE6rm6n1zm4cJp1Q==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=tXKgnmecYD2kyHVEFw1tLpeWnwrdkhoCPeNwSurT6Dw%3d
  4. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO4VHpsmvGeutni3Ym5PIklMsSFe0S8EQrFHLsxl0tbNF&idd=u+AUeXycTH2ysfAgRXuZpw==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=Cd04gyFQuOLbCqv1D6Y0f8WRffPkxIOFqclRUqMfY6A%3d
  5. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOw7/idPplpByWH5dj1DE8rsL92iLmuQ3/G65UD9FYX+w&idd=sOUgjrWGZArbeQKzYqTFXw==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=N02vbTQNfux14qh%2bpSs3FEXe5wYRqTwY3P8NhPop4%2bc%3d
  6. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO1i2okjk3p3D5yMFov6UIbZxiaIMHVtoZ/aDA2PBsBLp&idd=3u+gpp7FHsO4EuL3u8BODA==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=drJQ78dQf%2f7%2b%2bYUcCn6B6gKaDWtaDmCFIvxi5erpcas%3d
  7. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOxPTFtgnx7Qze5YX41RIkcTBjv6/3pLnoPl2v18WXRfD&idd=co9Ys4TXN3bDdGr9uJhFJw==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=QLC2eIEtDoLzkFow4p3mZ113rXBlK6RE30bKmxF7lyo%3d
  8. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOy1oVxJc1YP3Vt/OuENKdIW+MAE6QOmAZ2jlLgahpMN9&idd=aCbRql7btdZJhpyDmVUYuQ==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=ssTKwIKDJqUda81vdVp1JFwSkYuqxQSuoMGYO8vg554%3d
  9. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOz738Q+p6nSHguLLZHaYjeBXiaMsqe7rTImvqQgu0pcx&idd=+enr3sHY9dVL3PFptIAQAQ==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=zoElE6ElFa7iCEKTU%2fKtNb%2fhCBeH1doauoNHYr1hlsQ%3d
  10. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO0ZICD8PpzpQVUN6xZO8kywiCen/HWjicAm+2Yut5oqv&idd=fkNDL7zRgHlsdZ8TGx0j7A==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=JdyoCWHNtRL%2bC5QIdlFAzu1pVDW5OTgob2Sv7zeXlHg%3d
  11. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO2UwdGzMcXn0WUnBby/vsMAu5Sx5DJDg8tevwxlpk6zJ&idd=yNsAtju2Dm1K8LJFj5fVAw==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=LllcXztcss0InYzQp%2fXm%2fwrGfSU86pY7yZ0lQibvyw8%3d
  12. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOy2bTg5kHSuYPZ5solL1FxIe1mNeOiEBDgXBl9BxmjkH&idd=hmm0pm8wlvIfl8uVYkzPtQ==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=uj%2fHDjFAGsj8aeLtwj1%2bg2sLZveBDYFMV6%2bw4DIWQk8%3d
  13. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO040eDvgXuYM6v2zxeayfd0oDGelz7lJkRKGSGMlUS4K&idd=xa9U/kiH45/me9yfoYU0bQ==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=qud9vZF87o6zefHRBJwQ0qHY3xys6PegxaEF5znnnu0%3d
  14. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO9gIYEAzbK6mrV+F5F6ZV6DJye0HzrsmExNvL4H3sRmg&idd=pwoE1u0cIDbexMDqYYfBOQ==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=1B3DBrcBUjI0kLtmtCICVaC55hj9aYmE76JF%2bxFxjMw%3d
  15. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO49Ez2g5o3Ha2EwiFrXqaGdvvha2TSWOcW759LFwlLez&idd=lN6+DpGE4n4cmO8VWNg0FA==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=1B3DBrcBUjI0kLtmtCICVY18qkCSPPiOBojCX%2f%2fJNUo%3d
  16. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO49Ez2g5o3Ha2EwiFrXqaGe92/kzsDM8p6yiArDgETRl&idd=smG/4kMEK39HzgEnBtIBcA==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=SXH28CiTem%2bV83qXABvr2%2bm%2bqSKKkp1AsHMwFkl0ihQ%3d
  17. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOxTYxq1Ot365U3wmuDjeVaayHGW0hmc/bzoEVG8sKZsY&idd=CqzeD+Rww0r+sl/mVMcZNw==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=X2sGcP%2fx77ahW5Iw%2f3EdiZPDFN0ttWNnEmdtNcDHlOc%3d
  18. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO56fPDOhLfawvgwiLTnxxsDVj6PWJc5ubzTunBdKw+UE&idd=+MjHgWDViL28liPnYb+YTg==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=rNZsarwqkoG2p1gUl71oOj9hCDv4HFU36c9alx%2fePjg%3d
  19. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO8y0msH9iizSZMlEWAEMgVh3NriXTz+F4wWIkQuId7Bv&idd=SJkCyON+/r66/Ws6qhd2qQ==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=gK%2fnP7LKYNiV6SaVigb%2fIlhpo%2bBNaOaUqEYuT4VqpzY%3d
  20. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOz5Dcq6kVwhpwYM/tLzNI68QO/M2IT+px+YCU+FKZ94z&idd=QcAXlythWJsILrb5wxUIgw==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=dagHnnJ6%2fRoRrRVMdkvm%2fS%2f4gvsLxaiN84s0tylDwr0%3d
  21. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO1i2okjk3p3D5yMFov6UIbZbxbDkOx18+kv5toPtGe6M&idd=rKkjAeRF+WvqTzweLX6mWQ==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=drJQ78dQf%2f7%2b%2bYUcCn6B6g3YlaiXGWoLjRVH3EKaSlg%3d
  22. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOwI3ckuDe0MIkzQvoAJ3j2zo0SpFbFMgwbVG3XYZmaDi&idd=fOZPAJVDqYGOzTg3Rgnpyg==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=QWCoSykTgpRTL3yqcVU6WxOeu1zzpMDF2wNIuCZPF3w%3d
  23. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOz5Dcq6kVwhpwYM/tLzNI68QO/M2IT+px+YCU+FKZ94z&idd=QcAXlythWJsILrb5wxUIgw==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=dagHnnJ6%2fRoRrRVMdkvm%2fS%2f4gvsLxaiN84s0tylDwr0%3d
  24. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO2EuKs+PNPFENkohncoDVeUUCFelMHECfstwAuJW5fvL&idd=N7amJrcFUZWyuR8DRZ/hnA==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=Gga%2bSfxGVJoBrYygvyAdr5kLlMQpEd%2bd8sb62Fbxatk%3d
  25. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVOwo+CumQ6FxwgT1PBzR8Z0a1S10WMtao0/oaBYnxjHmf&idd=GWP7D+BiYejieAR19UW+qg==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=HrR0ooJf0SXhAc4qry0OahZRRJE3%2b3%2bXSN%2feNtrGmMo%3d
  26. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO+f8Vue6nvi3da6wr5Ehtd8DoS7/W+rXP0zGnFAs/uzv&idd=4fcOEY5dnzJcCk0aWAKw3w==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=QnTwRJjILR5zTUz6%2bi9Gw1sFTuxYTj%2fK%2bsxuFyAmiyk%3d
  27. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO9gIYEAzbK6mrV+F5F6ZV6BBI2IQ2MeSoWjHof0EnSUR&idd=yk7HnrNN43vWk8wBecADFw==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=1B3DBrcBUjI0kLtmtCICVc0fJjmS1ny4IP%2b4DyN%2fnkw%3d
  28. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO3Be1/GAhr39nb2JegucoHe/BBja3yWEMPBt9bcp83D5&idd=cAe4/MiYnFb82FyNIwftfg==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=DbF6y5ko6sbQlybAl36pLK2znc0ir%2bw7MIA5zNBB%2b0s%3d
  29. http://environmentclearance.nic.in/state/Reports_State.aspx?pid=JPVIy5CAJeviwpWL+wRVO26FfAvoY2HG2QIE16KsvP8iuQdECLIlujluLFoe5ZIi&idd=QJmwSP4mhVleC3gBj5kx0g==&forms=Tg3R3dzL5d8qh2W0SyphdQ==&sw_pid=dguvwap1xuIfPHCAnWCO4RON1dPWu0T0F3T2lqUk80I%3d

Reasons for Amendment : As per conditions in the EC,The method of mining operation is restricted to manual mining and transport by bullock carts.Due to covid-19 pandemic situation lease has not executed.Now the TN Govt has decided to resume the sand quarry operation to fulfill state sand demand. The rate of supply needs to be increased. This can only be done through machiery loading and general transportation.Hence may please be amended as Machinery & Transportation mechanism sa general (All available mode of transport)

புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ள மணல் குவாரிகள்
  1. http://environmentclearance.nic.in/state/FORM_B_PDF.aspx?cat_id=SIA/TN/MIN/76972/2022&pid=New
  2. http://environmentclearance.nic.in/state/FORM_B_PDF.aspx?cat_id=SIA/TN/MIN/77000/2022&pid=New
  3. http://environmentclearance.nic.in/state/FORM_B_PDF.aspx?cat_id=SIA/TN/MIN/76712/2022&pid=New
  4. http://environmentclearance.nic.in/state/FORM_B_PDF.aspx?cat_id=SIA/TN/MIN/78415/2022&pid=New
  5. http://environmentclearance.nic.in/state/FORM_B_PDF.aspx?cat_id=SIA/TN/MIN/78189/2022&pid=New
  6. http://environmentclearance.nic.in/state/FORM_B_PDF.aspx?cat_id=SIA/TN/MIN/78182/2022&pid=New
  7. http://environmentclearance.nic.in/state/FORM_B_PDF.aspx?cat_id=SIA/TN/MIN/77645/2022&pid=New
  8. http://environmentclearance.nic.in/state/FORM_B_PDF.aspx?cat_id=SIA/TN/MIN/77336/2022&pid=New
  9. http://environmentclearance.nic.in/state/FORM_B_PDF.aspx?cat_id=SIA/TN/MIN/77360/2022&pid=New
  10. http://environmentclearance.nic.in/state/FORM_B_PDF.aspx?cat_id=SIA/TN/MIN/76465/2022&pid=New

 

 

 

 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Desinghu S
Desinghu S
2 years ago

No,! No,! It’s Very Very Bade.

Suppose our before long bake generation had done this badly business. Now we are begging to others for food and everything.

No not allow Sande Guwari Please. !