ஆளுநர் ரவியின் பொய்யுரைக்குத் துணைபோகும் இந்து தமிழ் திசை நாளிதழ்

“வெளிநாட்டு நிதி தொடர்பாக தீவிர விசாரணை – ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட பின்னணியில் என்ஜிஓ – மாநிலங்களவையில் தகவல்” என்னும் தலைப்பில் இந்து தமிழ் திசை நாளிதழ் 7.4.2023 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:
“தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘தி அதர் மீடீயா’, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் வந்துள்ளன.
அந்தப் புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2019-2021 காலகட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு ரூ.3.54 கோடி வெளிநாட்டு நிதி வந்துள்ளது.
இதில் ரூ.2.79 கோடியை அந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதிப் பயன்பாடு குறித்து விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும்.”

உண்மையில் மாநிலங்களவையில் whether the Ministry has received complaints against “The Other Media” an NGO for misusing of funds for organizing protests and demonstrations around Vedanta’s Sterlite Copper Plant in Thoothikudi in Tamil Nadu என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சரின் பதில்:

Some representations/complaints alleging violation of the provision(s) of the Foreign Contribution (Regulation) Act, 2010 (FCRA, 2010) by the association “The Other Media, New Delhi” have been received in this Ministry. Inputs of field agency have also been received. In such cases, a Standard Questionnaire is issued to the association seeking detailed information and the same is examined in terms of provisions of the FCRA, 2010 and rules made thereunder. Accordingly, Standard Questionnaire was issued to the association and reply has been received. In case violations of provisions of the FCRA, 2010 are found, the certificate of FCRA registration of the association may be cancelled under section 14 of the Act.
மேற்கூறிய தகவலில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வந்ததாகவோ, தி அதர் மீடீயாவிற்கு தொடர்பு இருப்பதாகவோ ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் பதிலில் எங்கும் கூறப்படவில்லை. இந்த நிலையில், ஆளுஞரின் பொய்க் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்து தமிழ் திசை முன்பக்க செய்தி வெளியிட்டுள்ளது என்பது ஊடக நெறிமுறைகளுக்கு எதிரானது. ஜனநாயகத் தன்மையற்றது.
எனவே இந்து தமிழ் திசை மேற்கூறிய செய்தியை திரும்பப் பெறுவதோடு, மக்களிடம் மன்னிப்பும் கோர வேண்டும்.

இப்படிக்கு
பூவுலகின் நண்பர்கள்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments