பெருங்கடல்கள் யாவும் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விடவும் வேகமாக வெப்பமாகி வருகின்றன

VINCENNES BAY, ANTARTICA - JANUARY 11: Giant tabular icebergs are surrounded by ice floe drift in Vincennes Bay on January 11, 2008 in the Australian Antarctic Territory. Australia's CSIRO's atmospheric research unit has found the world is warming faster than predicted by the United Nations' top climate change body, with harmful emissions exceeding worst-case estimates. (Photo by Torsten Blackwood - Pool/Getty Images)

பெருங்கடல்கள் யாவும் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விடவும் வேகமாக வெப்பமாகி வருகின்றன- மொழிபெயர்ப்பு: அஹமத் கபீர்

பெருங்கடல்கள்தான் (Oceans) இந்த புவியின் வெப்பத்தை உள்வாங்கிக்கொள்வதாக அறிவியல் நமக்கு பலகாலமாக சொல்லிவருகிறது.. பூமியின் வழிமண்டத்தை சுற்றியிருக்கும் பசுமை இல்ல வாயுக்களால் ஏற்ப்பட்ட‌ 93 சவீத அதிகப்படியான வெப்பத்தை பெருங்கடல்களே உறிஞ்சிக் கொள்வதாக பருவநிலை மாற்றம் குறித்த ஐ.பி;சி.சியின் 2014 ஆம் ஆண்டறிக்கை தெரிவித்தது. ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, நாம் முன்பு நினைத்ததைப் போலல்லாமல், கடந்த 25 ஆண்டுகளில் உலகில் உள்ள பெருங்கடல்கள் யாவும் 60 சதவீத அதிக வெப்பத்தையே உறிஞ்சியிருக்கிறது.

இந்தஆய்வறிக்கையை எழுதிய முதன்மையான ஆய்வாளர் முனைவர் லாரே ரெஸ்பிலாண்டியின் கூற்றுப்படி பெருங்கடல்களின் ஆழம் 30 அடியாக ( 9 மீட்டர்) இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் நமது தரவுகளின் படி, கடந்த 1991 முதல் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் 6.5 டிகிரி சென்டிகிரேட்(11 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவு பெருங்கடலின் வெப்பம் உயர்ந்திருக்க வேண்டும்,. இறுதியாக வந்த ஐ.பி.சி.சி ஆய்வு அறிக்கையோடு ஒப்பிட்டால் ஒவ்வொரு பத்தாண்டிலும் 4 டிகிர் செல்சியஸ் (7.2 டிகிரி ஃபாரன்ஹீட்) மட்டுமே வெப்பம் உயர்ந்துள்ளதை அறிந்துகொள்ளமுடிகிறது..

சமீபத்திய தொழில் நுட்ப முன்னேற்றத்தின் விளைவால், பெருங்கடல் உறிஞ்சும் வெப்பத்தின் அளவை மிக துல்லியமாக கணக்கிட முடிகிறது என்று நம்புகிறார் முனைவர் லாரே ரெஸ்பிலாண்டி. முன்னதாக Argo Floats என்ற சாதனத்தின் உதவிகொண்டு பெருங்கடலின் வெவ்வேறு ஆழத்தில் வெவ்வேறு சுற்றுச்சூழல் அளவீடுகளைகளைக் கொண்டு , வெப்பத்தை உறிஞ்சும் அளவுகளை அறிந்து வந்தார்கள். ஆனால் இப்போதைய ஆய்வுக்கு மிகதுல்லியமான அணுகுமுறையோடு, கடந்த 1991 லிருந்து 2016 வரை பெருங்கடல்கள் உமிழ்ந்த ஆக்ஸிஜன் வாயுக்களையும், கரியமிலவாயுவையும் கணக்கிலெடுத்துக் கொண்டார்கள். புவிவெப்பயமயமாதலால் பெருங்கடல்கள் வெப்பமாகிவிட்டால் அவைகளின், வாயுக்களை தக்க வைத்துக் கொள்ளும் திறன் குறைந்து அதனால் ஆக்ஸிஜன், கரியமில வாயுக்கள் வெளியேறி பூமியின் வளிமண்டலத்தில் அதிகமாக சேர்ந்துள்ளது..

 

இது போல் ஆக்ஸிஜன் வெளியேறுவதால் பெருங்கடல்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் குறையும், அதன் தன்மையும் மாறிவிடும். பெருங்கடலின் வெப்பம் உயர்வதால் ஏற்படும் உயிர்வளி தட்டுப்பாடு கடலின் பல் உயிர்ச்சூழலையே மூச்சுத்திணற வைக்கும், மேலும் கடல்வாழ் உயிரினங்களின் வளர்ச்சி குன்றும் என்றும் அதனால் வளமான மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கும் மற்றும் மீன்பிடி தொழிலின் உற்பத்திதிறன் குறையும் என்றும் சொல்கிறார் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் யூ.சி. சாந்தா பார்பரா சுற்றுச் சூழல் கல்விச் மையத்தின் துணை பேராசியரான   முனைவர்.டக்ளஸ் மெக்காலே.

கடந்த மாதம் வந்த ஐ.பி.சி.சி அறிக்கையின் படி பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் இலக்கை நோக்கி முன்னேற இன்னும் ஒரு தசாப்தங்களுக்கும் சற்றே அதிகமான நாட்களே உள்ளன. இப்பொழுது முன்மொழியப்பட்டுள்ள பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் குறித்த அளவுகள், அதாவது 2030 ஆண்டிற்குள், 2010 ஆம் ஆண்டு இருந்த அளவிலிருந்து 45 சதவீதமாக குறைப்பது என்கிற இலக்கு ஐ.பி.சி.சி யின் முந்தைய மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்தது.

சமீபத்திய ஆய்வுகளின்படி, கடல், உயர்ந்து வரும் புவியின்வெப்பதை தாங்கும் முழுத்திறனையும் இழந்துவிடும் நிலையில் உள்ளது, எனவே மிக துரிதமாக கரிஅமில வாயு வெளிவருவதை குறைக்க விரைவான நடவடிக்கைகளை எடுக்கும் நிலையில் உள்ளோம். நச்சுவாயுக்கள் வெளியேறுவதை நாளையே நிறுத்தினாலும், நமது பெருங்கடல்களும் இந்த புவியும் வெப்பமடைவது என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும்.

பசுயில்ல வாயுகள் வெளியேற்றத்தை உடனடியாக நிறுத்தினாலும், நமது கடலின் வெப்பமானது இன்னும் இரு தசாப்தங்களுக்கு அதிகரிக்கவே செய்யும். அதனால் மற்றவற்றவையின் வெப்பமும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார் சான் டீகோ செய்தி நிறுவனத்தின் துணை ஆசிரியர் ரால்ப் கீலிங். புவியின் வெப்பம் அதிகமானால் காலநிலை மாற்றத்தை தடுப்பதும் எதிர்கொள்வதும் மிகவும் கடினமானதாககிவிடும்.

Source: https://www.forbes.com/sites/priyashukla/2018/11/05/the-oceans-are-warming-even-faster-than-we-previously-thought/amp/?__twitter_impression=true&fbclid=IwAR3S8hTl-ggzWnNKwlWIxL1d0eFtcGS7ynyG5RMkBlTfnPHvpKuXjhFf4_Y

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments