கடந்த 20 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் காட்டுத் தீ ஏற்படும் எண்ணிக்கையும் அதன் தீவிரமும் அதிகரித்துள்ளதாக ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீருக்கான மன்றம் தனது ஆய்வறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குரங்கணி தீ விபத்தின் கோரம் முற்றிலும் இன்னமும் நமது நினைவுகளிலிருந்து நீங்கவில்லை. குறிப்பாக காலநிலை மாற்றம் பற்றி, அதன் மேலதிக தாக்கங்கள் பற்றி கவலை கொள்ளும் என் போன்றோருக்கு அச்சம்பவம் இப்போதும் அச்சமூட்டக் கூடியதே. தற்போது வெளியாகியுள்ள CEEW ஆய்வு தெரிவிப்பது என்னவென்றால் முன்பை விட இனி காட்டுத் தீ இந்தியாவில் அதிகம் ஏற்படும் என்பதே.
ceew-research-on-states-prone-to-forest-wildfires-india-and-mitigation-methodsஇந்தியாவில் காட்டுதீ எண்ணிக்கையும் தீவிரமும் கடந்த இருபதாண்டுகளில் 10 மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்களில் 62% அதிகமான மாநிலங்கள் மிகத் தீவிரமான காட்டுத் தீ ஏற்படும் மாநிலங்களாக இருப்பதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது. காலநிலையில் ஏற்பட்டு வரும் அதிவேக மாற்றத்தால் கூடுதல் மற்றும் தீவிரமான காட்டு தீ அதிகம் உருவாகக் கூடிய மாநிலங்களாக ஆந்திரா, அஸ்ஸாம், சட்டிஸ்கர், ஒடிஷா, மகராஷ்டிரா போன்ற மா நிலங்கள் இருக்கின்றன.
அண்மையில் ராஜஸ்தானிலுள்ள சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் நடந்த காட்டுத் தீ விபத்து அப்பகுதியில் அந்த வாரத்தில் நடந்த நான்காவது விபத்து. முன்பெல்லாம் மே, ஜூன் போன்ற கோடை மாதங்களில் மட்டும் ஏற்படும் இந்த விபத்து இப்போது அதற்கு முன்பே ஏற்படத் தொடங்கிவிட்டது. 2019ல் எடுக்கப்ட்ட ஒரு வனத்துறை கணக்கின் படி, இந்தியாவிலுள்ள காடுகளில் 36% காடுகளில் மிகத் தீவிரமான காட்டுத் தீ ஏற்படக் கூடிய அபாய நிலை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உணவு, வாழ்வாதாரம், வளம் என்று எல்லாவற்றையும் வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது காலநிலை மாற்றம். தேவை போர்க்கால நடவடிக்கை மட்டுமே.
- கோ.சுந்தர்ராஜன்
Forest fires are inevitable. Nowadays anthropogenic activities and also fuelled by climate changes are making Indian forests more vulnerable to climate change. Same confirmed by ISFR 2021.