‘சில கல்வியாளர்களுக்கு ஒரு அழைப்பு’ ஹோசேமரியா அர்கேதாஸ்

அவர்கள் சொல்கிறார்கள்,

நமக்கு எதுவுமே தெரியாதென

அவர்கள் சொல்கிறார்கள்,

நாம் பின் தங்கியவர்களென

நமது தலைகள் அவற்றைவிடச்

சிறந்த தலைகளால்

மாற்றப்பட வேண்டியிருக்கிறதென

படித்தவர்கள் சிலர் நம்மைப்பற்றி

இப்படியெல்லாம் சொல்வதாக

அவர்கள் சொல்கிறார்கள்

நமது வாழ்வை வைத்து

தம்மைப் பெருக்கிக் கொள்ளும்

இந்தக் கல்வியாளர்கள்

இந்த ஆறுகளின் கரையில்

என்ன இருக்கிறது, முனைவரே?

உங்கள் தொலைநோக்கிகளை எடுங்கள்

உங்கள் கண்ணாடிகளையும் கூட

முடிந்தால் பாருங்கள்.

படுகுழிகளிகளுக்கு மேலே

சமதளங்களில் முளைக்கும்

ஐநூறுவிதமான

உருளைச்செடிகளில் இருந்து

ஐநூறு பூக்கள்

உங்கள் கண்கள் தொடாத அந்த

ஐநூறுபூக்களும்

எனது மூளை

எனது சதை

 

 

கேச்சுவாவிலிருந்து ஆங்கிலத்தில் வில்லியம்ரோவி

தமிழில் : வெற்றி

இதையும் படிங்க.!