சென்னையில் பறவைக் காய்ச்சல் தொற்றால் உயிரிழந்த காகங்கள்: ஒன்றிய அரசு ஆய்வில் உறுதி.

Image: Omjasvin

சென்னையில் அண்மையில் உயிரிழந்த காகங்கள் H151 இன்புளுயன்சா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவை என ஒன்றிய கால்நடைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் வழக்கத்திற்கு மாறாக காகங்கள் இறந்து விழுந்தன. தமிழ்நாடு கால்நடைத்துறை இறந்த காகங்களின் உடல்களைப் பரிசோதனைக்காக போபாலில் உள்ள தேசிய விலங்கு நோய்கள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பியிருந்தது. இதன் ஆய்வு முடிவுகளை ஜனவரி 22ஆம் தேதி ஒன்றிய கால்நடைத்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

AI Crow Tamil Nadu_0001

ஆய்வு முடிவுகளின்படி இறந்த காகங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிப்படைந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்காக 2012 ஆம் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை அரசு பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசைக் கோரியுள்ளது.

மேலும், காகங்கள் உயிரிழந்த பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, காகங்களின் உடல்களை ஆழமான குழிக்குள் புதைக்க வேண்டும், வழக்கத்திர்கு மாறாக காகங்கள் உயிரிழப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக ஒன்ரிய அரசின் கால்நடைத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும், கோழி மற்றும் வாத்துப் பண்ணைகள் மற்றும் பறவைச் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய கால்நடைத்துறை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.  வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் நோய் என்பது பொதுவாகக் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளைத் தாக்கும். இது மனிதரையும் தாக்கவல்லது. பறவைக்காய்ச்சல் நோய் வராமல் இருக்க கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பண்ணையாளர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.

பறவைக் காய்ச்சல் நோயின் அறிகுறிகள்:

பறவைகளின் தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நீல நிறம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகள் தசைகளில் இரத்தக்கசிவு, மூச்சுக் குழலில் அதிக சளி அனைத்து உள் உறுப்புகள் மற்றும் கால்களின் மீது இரத்தக் கசிவு.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1.⁠ ⁠வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2.⁠ ⁠வாத்து, வான்கோழி, கோழிகள் முதலிய பல்வேறு இனப்பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது.

3.வெளியாட்கள், வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழையக்கூடாது.

4.⁠ ⁠இதரபண்ணை உபகரணங்கள் பகிர்ந்து கொள்ளல் கூடாது.

5.⁠ ⁠பண்ணை உபகரணங்கள் மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

6.⁠ ⁠கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல் நடவடிக்கையாக ஒன்றிய அரசு கூறியிருப்பது பரவலான அளவில் இந்நோயின் அபாயம் மற்றும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். ஆனால், தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் ஒரு பொதுவான அறிவிப்புகூட இன்னும் வெளியிடப்படவில்லை. போதுமான விழிப்புணர்வு இல்லாத மக்கள் வெறும் கைகளால் காகங்களை அகற்றும் அபாயமிருப்பதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Crow- Precautionary measures to be taken to prevent the spread of Bird Flu to Poultry and Human Beings.pdf01 (1)
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments