புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்திக்கு அதிகரிக்கும் கடனுதவிகள்

renewable-energy-technology-defined-solar-panels

நிலக்கரி அனல்மின் நிலையத்  திட்டங்களைவிட  புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு  வங்கிகள் கடனுதவி வழங்கும் போக்கு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நடந்துமுடிந்த COP26 மாநாட்டில், 2070ம் ஆண்டிற்குள் இந்தியா கார்பன் சம நிலையை எட்டும் என இந்திய பிரதமர் அறிவித்திருந்தார். கிளாஸ்கோ காலநிலை உடன்பாடில் அனைத்து நாடுகளும் நிலக்கரி அனல் மின்னுற்பத்தியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இவையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இன்னும் சில ஆண்டுகளுக்கு மின்னுற்பத்திக்காக நிலக்கரி அனல்மின் நிலையங்களைச் சார்ந்து இருக்கப்போவது  என்பது தெளிவாகிறது.  இந்தச் சூழலில் , 2020ம் ஆண்டில் மின்உற்பத்தி திட்டங்களுக்காக பெறப்பட்ட கடன்கள் தொடர்பாக Climate Trends மற்றும் Centre for Financial Accountability ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கை  “Coal vs renewables financial analysis India 2020” புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தித் திட்டங்களுக்காக வங்கிகள் கடனுதவி வழங்கும் போக்கு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் பின்வருமாறு:

* கடந்த 2018, 2019 வருடங்களைப் போலவே 2020ம் ஆண்டும் அனல் மின்சார திட்டங்களை விட, புதுப்பிக்கத்தக்க ஆற்றலினால் மின்சாரம் உற்பத்தியாகும் திட்டங்களுக்கே அதிகளவிலான கடனை வங்கிகள் வழங்கியுள்ளன.

* 2020ஆம் ஆண்டு வங்கிகள் மின் திட்டங்களுக்கு வழங்கியுள்ள கடன் தொகையில் 74% புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கும், 26% அனல்மின் நிலைய திட்டங்களுக்கும் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

* 2020ம் ஆண்டு மட்டும் 31 சூரிய மின்சார திட்டத்திற்கும், 6 காற்றாலை மின்சார திட்டத்திற்கும் சுமார் 24,442 கோடி கடன் வங்கிகளால் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அனல் மின்சாரத்தை பொறுத்தவரையில் ஒரே ஒரு திட்டத்திற்கு 8,520 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

* கவனிக்கப்பட வேண்டிய விஷயம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு கடன் வழங்குவதில் தனியார் வங்கிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டியுள்ளனர். அனல் மின் திட்டங்களைப் பொறுத்தவரையில் அரசு நிதி நிறுவனங்களே கடன் கொடுத்துள்ளன.

* இதில் அதிகப்படியாக ராஜஸ்தான் மாநிலம் 10,479 கோடியும், குஜராத் மாநிலம் 8,192 கோடி ரூபாயையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்காக கடனாகப் பெற்றுள்ளன. தமிழ்நாடு  14 கோடி மட்டுமே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்காக கடன் பெற்றுள்ளது.

*இந்தியாவில் அனல் மின் நிலையங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் செயல்படும் காரணத்தினால் தனியார் வங்கிகள் அனல் மின் நிலையத் திட்டங்கள் மீது ஆர்வம் காட்டுவதில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
இதன் காரணமாகவே பல அனல் மின் நிலைய திட்டங்கள் சமீப காலங்களில் ரத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு அறிக்கைக்கு: https://www.cenfa.org/wp-content/uploads/2021/12/Coal-vs-RE-REPORT.pdf

– பிரபாகரன் வீர அரசு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments