டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலை உமிழ்வே அதிகக் காரணம்

RDS_DELHI_POLLUTION_16a0853cd68_medium
Image: PTI

தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் உமிழ்வே அதிகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் குளிர்காலத்தில் ஏற்பட்ட கடுமையான காற்று மாசுபாடு குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சோபே பதிலளித்திருந்தார்.

Air Pollution

2018ஆம் ஆண்டு ARAI மற்றும் TERI இணைந்து நடத்திய “Source Apportionment of PM2.5& PM10 of Delhi NCR for Identification of Major Sources” ஆய்வின் முடிவுகளை தனது பதிலில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆய்வின்படி டெல்லியில் குளிர்காலத்தின் போது ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு அப்போதைய வானிலை, போக்குவரத்து மற்றும் தொழிற்சாலை உமிழ்வுகள், கட்டுமான நடவடிக்கை, குப்பைகள் எரிப்பது உள்ளிட்டவை காரணம் எனவும் ஒட்டு மொத்த காற்று மாசுபாடில் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் PM 10 27% மற்றும் PM 2.5 30% பங்காற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

– செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments