சாயிநாத்
சந்திப்பு : கவிதா முரளிதரன்
விவசாயிகள் பிரச்சனையை இருவிதமாகப் பார்க்கலாம். Farm crisis மற்றும் Agrarian crisis.
நீக்ஷீவீsவீs. இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. விவசாயிகளை மட்டுமே பாதிக்கும் பிரச்னை என்பது ஒன்று. விவசாயத்தோடு தொடர்புடைய ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் பிரச்னை என்பது மற்றொன்று. இரண்டாவது பிரச்சனை, விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல. உதாரணத்துக்கு தச்சு வேலை செய்பவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒரே சாதியினராக இருப்பார்கள். ஒரு கிராமத்தில் தச்சு வேலை செய்யும் இரண்டு குடும்பங்கள் இருக்கும். அவர்கள் முழுமையாக விவசாயிகளையே நம்பியிருப்பார்கள். நீங்கள் தச்சு வேலை செய்பவர், நான் விவசாயி என்று வைத்துக்கொள்வோம். எனக்கு ஒரு மாட்டு வண்டியோ அல்லது வேறு ஏதாவது
விவசாய உபகரணமோ செய்து தரச் சொல்லி கேட்டால் நான் அதற்கான கூலியை பணமாக தர மாட்டேன். மொத்தக் கூலியில் 25 சதவிகிதமோ, 30 சதவிகிதமோ பணமாகக் கொடுத்துவிட்டு மீதத்திற்கு நெல், தானியங்கள், காய்கறிகளாக தருவேன். தமிழ்நாட்டில் ஒருவேளை பணம் அதிகமாக தரப்படலாம். ஆனால் தேசிய அளவில் பொதுவாக இதுதான் நிலை. இந்த நிலையில், திடீரென்று விவசாயிகளுக்கு வேலை இல்லை. அது தச்சு வேலை செய் பவர்களையும் பாதிக்கும். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும்போது தச்சு வேலை செய்பவர்கள் பட்டினிச் சாவு அடைந் திருக்கிறார்கள். தெலங்கானா முழுவதிலும் இது நடந்திருக்கிறது. நெசவாளர்களும் தச்சு வேலை செய்பவர்களும் பட்டினி கிடப்பதை நான் பார்த்திருக்கிறேன். காரணம், விவசாயம்தான் அவர்களுக்கான சந்தை. அது வீழும்போது சார்ந்திருப்பவர்களையும் அது கடுமையாகப் பாதிக்கிறது. விவசாயத்தில் ஏற்படும் ஒரு நெருக்கடி சமூகத்தின் பல்வேறு அம்சங்களைப் பாதிக்கும்போது அது வெறும் விவசாயிகளின் பிரச்னை அல்ல, அதைதான் agrarian crisis என்று சொல்கிறோம். இது விவசாயத்தை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது. இரண்டாவது, இப்போது காவிரி டெல்டா பகுதிகளில் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பிரச்னை. இது வெறும் வறட்சி சம்பந்தப்பட்ட பிரச்னை இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது காவிரி நீர் சம்பந்தப்பட்ட பிரச்னையும் அல்ல. ஒருவேளை நாளை காவிரிப் பிரச்சனைக்கு முழுமையான தீ ர் வு க ண் ட ¬ ட ய ப் ப டு கி ற து எ ன் று வைத்துக்கொள்வோம். தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய தீர்வு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். உங்களது தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்துவிடும் என்றா நினைக்கிறீர்கள்? வாய்ப்பே இல்லை. தொடர்ந்து ஐந்து வருடங்களாக பருவ மழை பொய்க்காமல் நன்றாகப் பெய்கிறது என்று த்துக்கொள்வோம். உங்களது தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்து விடுமா? நிச்சயம் தீராது. தொடர்ந்து ஊடகங்களில் வறட்சி என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறோம். வறட்சி என்றவுடன் நமக்குத் தோன்றுவது என்ன? அது ஒரு வானிலைப் பிரச்னை, மழை பொய்த்துப் போனது என்று நினைக்கிறோம். ஆனால் வறட்சியில் பல வகைகள் இருக்கின்றன. கடந்த 10, 15 வருடங்களாக இந்தியாவில் நீர்வளம் சார்ந்த (hydrological) வறட்சி நிலவிவருகிறது. ஆறுகள், ஓடைகள், ஏரி போன்ற பூமியின் மேல் பரப்பில் உள்ள நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போயிருக்கின்றன. பல பகுதிகளில் நிலத்தடி நீர் வறண்டு போயிருக்கிறது. நிலைமை மேலும் மேலும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்துதான் விவசாயத்தைப் பாதிக்கும் வறட்சியாக மாறுகிறது. இவையெல்லாம் சேர்ந்து ஒன்றாக வரும்போது ஒரு சமூக, பொருளாதார வறட்சி ஏற்படுகிறது. பயிர் நாசமாகுதல், குறைவான விளைச்சல், அல்லது திடீரென்று மிக அதிகமான விளைச்சல் போன்ற பிரச்னைகள் உருவாகிறது. அதனால் ஒரு நல்ல பருவ மழைக்குர் பின்னர் நமது தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்துவிடாது. இரண்டாவதாக, நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தங்களைப் பொறுத்தவரையில் பிரம்மபுத்திரா நதி தவிர இந்தியாவிலுள்ள பெரும்பாலான பெரும் நதிகளில் குறைவான நீர்மட்டமே இருக்கிறது. எனது தாத்தா, பாட்டி தலைமுறை அல்லது அதற்கு முந்தைய தலைமுறைக்கு நீர் எங்கிருந்து வந்தது என்பது தெரிந்திருந்தது. மழை பெய்யும்போது அவர்கள் பாத்திரங்களில் அந்தத் தண்ணீரைப் பிடித்தார்கள். அல்லது ஓடைகளுக்கு நடந்துசென்று தண்ணீர் பிடித்து வருவார்கள். நீர் மழையிலிருந்தும் ஓடைகளிலிருந்தும் வந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். எனது தலைமுறையைக் சேர்ந்தவர்கள் தண்ணீர் குழாயிலிருந்து வருகிறது என்று நினைத்து வளர்ந்தார்கள். தண்ணீர்ப் பிரச்னையைப் பற்றிய இந்திய அரசின் புரிதல், குழாய் இல்லை என்பதால் தண்ணீர் இல்லை என்பதுதான். இப்போதுள்ள தலைமுறையினர் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் வருகிறது என்று நம்புகிறார்கள். தண்ணீரைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், எப்படி யோசிக்கிறோம் என்பதே இங்கு பிரச்னை. இப்போது மிகப்பெரிய அளவில் தண்ணீர் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது – கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும், விவசாயத்திலிருந்து தொழிலுக்கும், வாழ்வாதா ரங்களிலிருந்து வாழ்க்கை முறைகளுக்கும், உணவுப் பயிர்களிலிருந்து பணப் பயிர்களுக்கும் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.
மகராஷ்டிராவில் ஒரு ஏக்கர் கரும்புக்கு 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தமிழ்நாடு, கொஞ்சம் பரவாயில்லை, ஆனாலும் குறைந்தது 15 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றே நினைக்கிறேன். 18 மில்லியன் லிட்டர் என்றால் எவ்வளவு தெரியுமா? ஒன்றல்ல இரண்டல்ல, ஏழரை ஒலிம்பிக் நீச்சல் குளங்கள். அல்லது பத்து போயிங் டிரீம் லைனர்களுக்குள் நிரப்பக்கூடிய அளவு தண்ணீர். கட்டுமானத் தொழிற்சாலை மிகப்பெரிய அளவிலான நீரைப் பயன்படுத்துகிறது. பெரும்பாலும் மிகப் பெரும்பாலும் இது எளிய மக்களின் பயன்பாட்டுக்கு இருக்கும் நீரையே எடுத்துக் கொள்கிறது. இதுபற்றி எந்தச் சட்டமும் இல்லை. மரத்வாடாவை எடுத்துக்கொள்ளுங்கள். அங்குதான் மிகப் பெரிய வறட்சி நிலவிக்கொண்டிருக்கிறது. தண்ணீர் பிரச்னையை பொறுத்தவரையில், எல்லோருக்கும் ஒரே மாதிரி தண்ணீர் கிடைப்பதில்லை. மற்றொரு பிரச்சனை பருவநிலை மாற்றம். அது உண்மையிலேயே ஒரு பிரச்னை. ஆனால் நிறைய பேர் அதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக கடலோர இந்தியாவுக்கு அது மிகப்பெரிய பிரச்னை. நீர் மட்டம் உயரத் தொடங்கினால், கடல் மேலேறத் தொடங்கினால், கடலோர இந்தியா அவ்வளவுதான். கதை முடிந்துவிடும். கேரளா காணாமல் போய்விடும். இது அவ்வளவு தீவிரமான பிரச்னை. ஒவ்வொரு வருடமும் நாம் தண்ணீர் லாரிகளுக்கு முன் வரிசையில் நிற்கும் பெண்களின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மரத்வாடாவில் ஒரு ஏழைப் பெண் அப்படி நின்றுகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் மணிக்கணக்கில் நின்றுகொண்டிருப்பார். லிட்டர் ஒன்றுக்கு 45 பைசா முதல் ஒரு ரூபாய் வரை கொடுப்பார். அது அந்த நாளன்று நீர் இருப்பைப் பொருத்தது. குறைந்தபட்சம் அவர் ஒரு லிட்டருக்கு 45 பைசா தர வேண்டும். வறட்சி தீவிரமானால் ஒரு ரூபாய் வரை கொடுப்பார். அது மட்டுமல்ல, லாரிகளுக்கு முன்பாகவும் குழாய்களுக்கு முன்பாகவும் பம்புசெட்டுகளுக்கு முன்பாகவும் ஒரு நாளுக்கு ஆறு மணி நேரத்தை அவர் கழிப்பார். அந்த நேரம் வேலை பார்த்திருந்தால் அவருக்கு ஏதாவது கூலி கிடைத்திருக்கும். அதனால் அந்தத் தண்ணீரின் விலை 45 பைசாவோ ஒரு ரூபாயோ மட்டுமல்ல. அதே மரத்வாடாவின் ஒளரங்காபாதில் 24 பியர் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் 4 பைசாவுக்கு கிடைக்கிறது. 5, 10 வருடங்களுக்கு முன்பு வரையில் ஒரு பைசாவுக்கு ஒரு லிட்டர் கிடைத்தது. அதிகாரவர்க்கத்துக்கு பியர் தொழிற்சாலை அதிபர்களுடன் கூட்டு இருந்தது. நீதிமன்றத்துக்குப் போனாலும் அங்கு வழக்கு 10, 20 வருடங்களுக்கு அப்படியே இருக்கும். 20 வருடங்கள் கழித்து அது 4 பைசா ஆனது. அந்த ஏழைப் பெண் குறைந்தபட்சம் 45 பைசா தருகிறார் என்று வைத்துக்கொண்டாலும் பியர் தொழிற்சாலை அதிபர்கள் அதை விட நான்கு மடங்கு குறைவாகத் தருகிறார்கள். இதுதான் சமத்துவமின்மை. சென்னையைப் பற்றி நீங்கள் தகவல்கள் சேகரித்தால் வட சென்னைக்கு எவ்வளவு நீர் போகிறது, தென் சென்னைக்கு எவ்வளவு கிடைக்கிறது என்பது தெரியும். மைலாப்பூர், கீழ்ப்பாக்கம் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 250, 300 லிட்டர் நீர் கிடைக்கலாம். குடிசைப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு 25, 30, 40 லிட்டர் கிடைக்கலாம். இதில் சாதி மற்றும் வர்க்கப் பிரச்னைகள் இருக்கின்றன. இந்திய கிராமங்களில், தமிழகக் கிராமங்களில் கூட, பொதுக் கிணறுகளில் நீர் எடுக்க தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. தண்ணீர் பிரச்னை என்பது வெறும் தண்ணீர் பிரச்னை மட்டுமல்ல, அது சமத்துவமின்மை, சாதி, மற்றும் வர்க்கப் பிரச்னையும்கூட.
தண்ணீரை எப்படிப் பயன்படுத்துகிறோம்?
மும்பையில் அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கு அனுமதி தருகிறார்கள். 40 மாடிகளைக் கொண்டது. பல அடுக்குகளைக் கொண்டது. அதாவது ஒரு காம்ப்ளெக்ஸில் 140 தளங்கள் இருக்கும். அவர்களுக்கு ஒவ்வொரு தளத்திற்கும் நீச்சல் குளம் அமைக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. இப்போது பல சர்ச்சைகளுக்குப் பின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அது விரைவில் வந்துவிடும் என்பதை நான் அறிவேன்.
தண்ணீர் நமக்கு வாழ்வாதாரம். அது வணிகப் பொருளா அல்லது அடிப்படை உரிமையா என்பதை நாம் முடிவு செய்யவேண்டும். தமிழ்நாட்டிலேயே பெப்சி, கோக் பிரச்னைகளுக்காக எவ்வளவு பெரிய போராட்டங்கள் நடந்திருக்கின்றன? இந்த நிறுவனங்கள் அவர்களது நாடுகளில் இதைச் செய்ய முடியாது. அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
நீச்சல்குளங்களுடன் கூடிய பால்கனிகள். நான் அங்கு பணி புரிந்த கட்டட தொழிலாளர்களைப் பேட்டி எடுத்தேன். இப்போது அந்த கட்டட பணி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பெரிய வறட்சி வந்தவுடன் அரசு பயந்துவிட்டது. ஆனால் அவர்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் யார் என்று அந்தக் கட்டட தொழிலாளர்களிடம் கேட்டேன். அவர்கள் விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலாளர்கள் என்றார்கள். பிறகு ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டேன். விவசாயம் செய்ய தண்ணீர் எங்கே இருக்கிறது என்று அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். தண்ணீர் இல்லாமல் அவர்களது விவசாயம் பொய்த்துவிட்டது. அவர்கள் மும்பைக்கு வந்து நீச்சல் குளங்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் நமக்கு வாழ்வாதாரம். அது வணிகப் பொருளா அல்லது அடிப்படை உரிமையா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டிலேயே பெப்சி, கோக் பிரச்னைகளுக்காக எவ்வளவு பெரிய போராட்டங்கள் நடந்திருக்கின்றன? இந்த நிறுவனங்கள் அவர்களது நாடுகளில் இதைச் செய்ய முடியாது. அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதனால் அவர்கள் இங்கு வந்து சுரண்டுகிறார்கள். தானேவில் லிட்டர் 3 பைசாவுக்கு கோக் நிறுவனத்துக்கு தண்ணீர் கிடைத்தது. இப்படித்தான் பிளாச்சிமாடாவில் அவர்கள் முழுமையாக விவசாயத்தை அழித்துவிட்டார்கள்.நமது தண்ணீர்ப் பிரச்னையைப் பொறுத்த வரையில் மழை மட்டும் காரணமில்லை. இன்று நமது தண்ணீரில் 60 சதவிகிதத்துக்கும் குறைவாகவே விவசாயத்துக்கு செலவிடப்படுகிறது. அதிலும் எந்த மாதிரியான பயிருக்குத் தண்ணீர் செலவாகிறது என்கிற கேள்வியும் இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மழையை மட்டுமே நம்பியிருப்பவர்கள். குடிநீர் என்பது அடிப்படை மனித உரிமை
என்பதுதான் எனது நம்பிக்கை. பாசன நீர், விவசாயியின் உரிமை. ஆனாலும் நாம் சில கற்பனைகளிலிருந்து வெளியேற வேண்டும். ஒவ்வொரு ஏக்கர் நிலத்திற்கும் பாசன வசதி செய்து தருவதாக அரசு சொல்கிறது. அது சாத்தியமில்லை. அந்த அளவுக்கு உலகிலேயே தண்ணீர் இல்லை. இனி நாம் செய்ய வேண்டியது புன்செய் விவசாயிகளுக்காக சில முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு விவசாய நிலத்திலும் குளம் அல்லது குட்டை அமைப்பது ஒரு தீர்வாக இருக்கலாம். அந்த நிலத்தின் நீர்த் தேவைகள் அதிலேயே பூர்த்தியாகிவிடும். நீரை அடிப்படை உரிமை என்று அறிவிக்க முடியுமா? முடியும். 80களில் உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் (International Monetary Fund) அறிவுறுத்தலின்படி எல்லா லத்தீன் அமெரிக்க நாடுகளும் நீரைத் தனியார்மயமாக்கின. பல அரசுகள் இதனால் கவிழ்ந்தன. இதன்பிறகு, இடதுசாரி அரசுகள் லத்தின் அமெரிக்க நாடுகளில் ஆட்சிக்கு வந்தன. தென்னாப்பிரிக்காவின் ஜொஹனஸ்பர்க்கில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது . அதன் பிறகு அது கைவிடப்பட்டது. உருகுவே ஒரு சிறு நாடு. 2003ல் அந்த நாடு நடத்திய பொது வாக்கெடுப்பில் 70-80 சதவிகிதம் மக்கள் தண்ணீர் தனியார்மயமாக்கப்படக் கூடாது என்று வாக்களித்தார்கள். இதிலிருந்தெல்லாம் நாம் பாடம் கற்க வேண்டும். நாம் எல்லா இடங்களிலும் தண்ணீரை தனியார்மயமாக்கி வருகிறோம். பிறகு நதி நீர் இணைப்பு, நதிகளை தேசியமயமாக்குதல் என்றும் பேசுகிறோம். நதிகளைத் தேசியமயமாக்கி நீரைத் தனியார் மயப்படுத்தும் ஒரே நாடாக நாம்தான் இருப்போம். 37 நதிகளை இணைப்பதென்பது தற் கொலைக்குச் சமமானது. நம் எல்லோரையும் விட சிறந்த பொறியியல் நிபுணர் இயற்கைதான். இந்த நதிகள் அதன் பாதைகளைக் கண்டடைய பல்லாயிரம், பல லட்சம் வருடங்கள் ஆயின. இங்கு இமய மலைப் பிரதேசங்கள் இருக்கின்றன, அமிலத்தன்மை கொண்ட பகுதிகள் இருக்கின்றன, காரமண் கொண்ட பகுதிகள் இருக்கின்றன. கடலோரப் பகுதிகள் இருக்கின்றன. அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப தனக்கான தன்மைகளை நதிகள் பெறுகின்றன. இதற்கு பல லட்சம் வருடங்கள் ஆகின்றன. நதிகளை ஒன்றிணைப்பதால் எல்லாப் பிரச்னைகளும் முடிவுக்கு வருமா? எங்கிருந்து நதி நீர் வருகிறதோ அங்கும் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள், சும்மா நீரை எடுத்துக்கொள்ளுங்கள் என்றா சொல்லப்போகிறார்கள்? ஒரு காவிரிப் பிரச்னைக்குப் பதில் 50,000 காவிரிப் பிரச்னைகள் உருவாகும். நீரைப் பற்றி, அதன் பயன்பாட்டைப் பற்றி அதன் பரிமாற்றங்கள் பற்றிய நமது சிந்தனை முறையை மாற்றி அமைக்க வேண்டும். இந்தப் பிரச்னைகள் இல்லை என்று நாம் கண்ணை மூடிக்கொண்டுவிடலாம். ஆனால் இதெல்லாம் நம்மை அழித்துவிடும். இன்றைய விவசாயப் பிரச்னை என்பது 1990களில் தொடங்குகிறது. தில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் உட்சா பட்னாயக் இப்படியரு பிரச்னை வரப்போகிறது என்பதை சொல்லிக்கொண்டிருந்தார். காரணம், அவர் அரசுகளின் புதிய தாராளமயமாக்கக் கொள்கைகளை தீவிரமாக கவனித்து வந்தார். அரசுகள் விவசாயத்திற்கு என்ன செய்கிறது என்பதைப் பார்த்து விவசாயிகள் கொத்துக் கொத்தாக இறக்கப்போகிறார்கள் என்றார். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
சந்தை விலை, உள்ளீட்டுச் செலவு, கடன் போன்றவை இந்த கொள்கைகளுக்குள் அடக்கம். 1963லிருந்து 1993 வரையிலான காலகட்டத்தில்
இந்தியாவின் மிகப்பெரிய சாதனை என்று கிராமப்புற வங்கிகளை சொல்லலாம். இந்தியா சுதந்திரம் பெற்றபோது கிராமப்புறங்களில் வங்கிச் சேவை இல்லை. வங்கிகள் தேசியமய மானதாலேயே கிராமப்புறங்களுக்கு வங்கிச் சேவை சென்றது. 1969ல் 16 சதவிகித வங்கி கிளைகளே கிராமப்புறப் பகுதிகளில் இருந்தன. வங்கிகள் தேசியமயமான பிறகு அது 60 சதவிகிதமானது. தாராளமயமாக்க கொள்கைகள் கிராமப்புற வங்கிகளை அழிக்கத் தொடங்கி விட்டன. 4,000 வங்கி கிளைகள் மூடப்பட்டிருக்கின்றன. 1992, 93லிருந்து இம்மாதிரி வங்கிக் கிளைகளை மூடும் பணிகள் துவங்கின. அடுத்தடுத்த வருடங்களில் விவசாயக் கடன் அதிகரித்தது. கிராமப்புறங்களிலிருந்து வங்கிகள் வெளியேறிய பிறகு மக்கள் திரும்பவும் உள்ளூரில் வட்டிக்காரர்களிடம் போகத் தொடங்கினார்கள். பயிரிடுவதற்கான செலவு அதிகரித்தது. ஆனால் விவசாயியின் வருமானம் அதிகரிக்கவில்லை. பயிரிடுவதற்கான செலவு எப்படி அதிகரிக்கிறது? விதைகள். 2000ஆவது ஆண்டு வரையில்கூட உள்ளூர் விதைகளை கிலோ 9 ரூபாய்க்கு வாங்க முடிந்தது. பின்னர் கலப்பின விதைகள் 300 ரூபாய்க்குக் கிடைத்தன. இப்போது மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் வந்துவிட்டன. அவற்றின் விலை 3000 முதல் 4000 வரை. இது போல எல்லா செலவுகளும் அதிகரித்திருக்கின்றன. இதில் விவசாயிகள் வரி கட்டவில்லை என்று வேறு
சொல்கிறார்கள். ஆனால் விளைபொருளின் விலை நிர்ணயிக்கப்படும்போது அது விவசாயிகள் செலுத்தும் வரியாகிறது. விவசாயிகள் அவர்களது கௌரவத்தை இழந்து நிற்கிறார்கள். மிக மோசமாக நட்த்தப் படுகிறார்கள். வங்கி அவர்களுக்கு உதவ முன்வருவதில்லை. 1991ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப் போடு ஒப்பிடும்போது 2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் 15 மில்லியன் விவசாயிகள் குறைவாக இருந்தார்கள். ஆனால் விவசாயத் தொழிலாளர்கள் 25 மில்லியன் அளவுக்கு அதிகரித்திருந்தார்கள். அப்படிஎன்றால் நமது விவசாயிகள் கூலிகளாகியிருக்கிறார்கள். நேற்று விவசாயிகளாக இருந்தவர்கள் எல்லோரும் இன்று தொழிலாளர்கள். இந்த நிலையில் எப்படி விவசாயிகளால் கடன்களை திரும்பக் கொடுக்க முடியும்? அவர்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டால் மோசமான பொருளாதாரம் என்று கதறுகிறோம். கொஞ்சம் உங்களது பட்ஜெடை எடுத்துப் படித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் நாம் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்துகொண்டே இருக்கிறோம். விவசாயக் குடும்பத்தில் பள்ளிக் கட்டணம் கட்ட முடியாமல் ஒரு குழந்தை தற்கொலை செய்துகொண்டால் அதை மாணவர் தற்கொலை என்கிறோம். உண்மையில் அது விவசாயியின் தற்கொலை.
இதற்கான தீர்வுகள் என்ன? உடனடித் தீர்வுகள் சில இருக்கின்றன. இடைக் காலத் தீர்வுகள் இருக்கின்றன. நீண்ட காலத் தீர்வுகள் இருக்கின்றன. உடனடித் தீர்வு: விவசாயப் பிரச்னைக்காக மட்டும் 10 நாள் நாடாளுமன்றத் தொடர். குறைந்தபட்சம் 10 நாட்கள். இதை நான் பல நாட்களாக வலியுறுத்தி வந்திருக்கிறேன். நிபுணர்களிடம் இல்லை, விவசாயிகளை வரவழைத்து அவர்களது குரல்களைக் கேளுங்கள். அவர்களது விவசாயத்துக்கு என்ன நிகழ்கிறது என்று கேளுங்கள். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை விவாதியுங்கள். தண்ணீர்ப் பிரச்னைக்காக இரண்டு நாட்களை ஒதுக்குங்கள். விவசாயிகள் தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் நாட்டுக்காகத் தருகிறார்கள். இந்த நாடு குறைந்தபட்சம் பத்து நாட்களை அவர்களுக்காக ஒதுக்க வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின் முதல் ஐந்து ஆறு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 2. இடைக்காலத் தீர்வு: விவசாயத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை விலக்கிவைக்க வேண்டும். இது எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. இது கார்ப்பரேட்டுகளிடம் இருக்கக் கூடாது. 3. நீண்டகாலத் தீர்வு: 30 வருடங்கள் கழித்து நாம் எந்த மாதிரியான விவசாயத்தை எதிர்நோக்கப் போகிறோம்? இப்போது பருவ நிலை மாற்றம் தொடர்பான பிரச்னை இருக்கிறது. கடந்த ஐம்பது வருடங்களில் கேரளா அந்த மண்ணிற்கே உரிய 100 காய்கறிகளை இழந்துவிட்ட்து. நாம் விரைவில் மெக்டொனொல்ட் உணவுகளை மட்டுமே உண்ணும் நிலை வரும். இது நீண்டகாலப் பிரச்னை. என்ன மாதிரியான விவசாயம் நமக்குத் தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகளை, ஸ்டெராயிடுகளை சுற்றிய விவசாயத்தையா நாம் மேற்கொள்ளப் போகிறோம்? நிலம் என்பது உயிருடன் இருக்கும் ஒரு அம்சம். அதில் நாம் விஷம் செலுத்தினால் அது மண்ணைக் கொல்லும். இந்தியாவில் நிலத்தின் வளமை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதை நாம் சரிசெய்ய வேண்டும். அதுவே முழுமையான தீர்வு.
சுப. உதயகுமாரன்
பூமியைவிட்டு வெளியேச் சென்று நமது உலகின் நிலைமையை அலசி ஆராய்ந்தார்கள் சில அறிஞர்கள். ஹென்றி ஜார்ஜ் என்கிற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் தனது 1879-ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் “பூமி அனைத்துத் தேவைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு விண்வெளிக் கலம்” என்று குறிப்பிட்டார். அந்த உருவகத்தை ஜார்ஜ் ஆர்வெல் என்கிற புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் 1937-ல் வெளியிடப்பட்ட தன்வரலாற்று நூல் ஒன்றில் எடுத்தாண்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு தோற்றுப்போய் பின்னர் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராகப் பணியாற்றிய அட்லாய் ஸ்டீவன்சன் நமது பூமியை விண்கலம் என்றழைத்து, “அதன் மீது பயணம் செய்யும் பயணிகள் பாதி பேர் பாக்கியவான்களாகவும், பாதி பேர் தரித்திரர்களாகவும், பாதி பேர் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், பாதி பேர் பரிதவிப்பவர்களாகவும், பாதி பேர் அடிமைகளாகவும், பாதி பேர் சுதந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள். இம்மாதிரியான பெருத்த வேறுபாடுகளோடு எந்தக் கலமும், எந்தப் பயணிகளும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாது. இந்த வேறு