மாசற்ற ஆற்றலுக்கு மாறும் ஜெர்மனி – அணுவுலைகளை மூடுகிறது

கடந்த 2011 ஆம் ஆண்டு புகுஷிமா அணுவுலையில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய விபத்திற்கு பிறகு பல்வேறு நாடுகளும் அணுவுலைகளை சார்ந்த மின்னுற்பத்தியை குறைக்கும்/கைவிடும் திட்டத்தை அறிவித்தன. அதிலும் குறிப்பாக ஜெர்மனி, 2022 ஆம் ஆண்டிற்குள் அணு மின்னுற்பத்தியற்ற ஜெர்மனியை உருவாக்குவோம் என அறிவித்தது.

இந்த அறிவிப்பு அந்நாட்டில் உள்ள சிலரின் எதிர்ப்பை பெற்றது. ஆனாலும் அறிவித்ததை காப்பாற்றுவது என முடிவெடுத்தது அந்நாட்டு அரசு. கடந்த ஆண்டின் இறுதி நாளில் மூன்று அணுவுலைகளில் மின்னுற்பத்தியை நிறுத்தி அந்த உலைகளை செயலிழக்க செய்வதற்கான பணிகளைத் துவக்கியுள்ளது ஜெர்மனி.

இப்போது மூடப்பட்டுள்ள மூன்று உலைகளும் 1980களில் மின்னுற்பத்தியை துவக்கி கோடிக்கணக்கான யூனிட்டுகளை உற்பத்தி செய்து லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரத்தை கடந்த 40 ஆண்டுகளாக வழங்கியவை.

ஹாம்பர்கின் வடமேற்கு பகுதியில் எல்பே நதிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த ப்ரொட்கோர்ப் அணு மின் நிலையத்திற்கு எதிராக, செர்னோபில் விபத்திற்கு பிறகு மக்கள் போராடி வந்தார்கள், இப்போது மூடப்பட்டுள்ளதில் இதுவும் ஒன்று. மற்ற இரு உலைகள், ஹான்னோவுருக்கு அருகில் கிரோஹண்டேவிலும், முனிச் அருகில் கிருறேம்மிங்கெனிலும் உள்ளன. இன்னும் மீதமுள்ள மூன்று உலைகளும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டிற்குள் அனல் மின் நிலையமற்ற ஜெர்மனியாகவும் உருவாக்கி அந்நாட்டின் எரிசக்தி உத்தரவாதத்தை எந்த வகையிலும் சிதைந்து போகாத வகையில் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் பயன்பாடு முழுமையாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் ஜெர்மன் நாட்டின் காலநிலை துறை அமைச்சர் ராபர்ட் ஹபெக். ஆனால் தமிழ்நாட்டில் புதிதாக 4 அணுவுலைகள் கூடங்குளத்திலும், உடன்குடி, எண்ணூர் போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments