ஐரோப்பிய நாடுகளில் 2022ஆம் ஆண்டு நிலவிய கடும் கோடைகாலத்தில் வெப்பம் சார்ந்த நோய்களால் மட்டும் 15,700 பேர் உயிரிழந்ததாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக வானிலை அமைப்பானது 21.04.2023 அன்று உலகளாவிய அளவில் 2022ஆம் ஆண்டு நிலவிய வானிலை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது.
2015-2022 வரையிலான எட்டு ஆண்டுகள்தான் உலகின் மிக வெப்பமான 8 ஆண்டுகள்தான் எனவும் 2022ஆம் ஆண்டின் சராசரி வெப்பநிலை 1850-1900 காலத்தின் சராசரியை விட 1.15°C அதிகம் எனவும் பூமியின் வரலாற்றில் கார்பன் டையாக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றின் செறிவு 2021ஆம் ஆண்டு உச்சத்தை எட்டியுள்ளதாகவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக ஸ்பெயினில் 4,600, ஜெர்மனியில் 4,500, பிரிட்டனில் 2,800, பிரான்சில், 2,800, போர்ச்சுகலில் 1,000 என மொத்தம் 15,700 வெப்பம் சார்ந்த நோய்களால் உயிரிழந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
– செய்திப் பிரிவு
Statement_2022