NSG இல் இந்தியா: என்ன நடக்கிறது?

கடும் முயற்சிகளுக்குப் பின்னும் கடந்த ஜூன் 23-24 அன்று நடந்து முடிந்த அணு சக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா உறுப்பினராக இடம் பெற முடியவில்லை. அணு சக்தி நாடுகள் குழுவில் உறுப்பினராவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது இந்தியா. கடந்த சில மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களில் பெரும்பாலான பயணங்களின் நோக்கம் அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா உறுப்பினராக வேண்டி ஆதரவு திரட்டுவதுதான். அமெரிக்கா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தாலும் சீனா அதை எதிர்த்ததாலேயே இந்தியாவால் குழுவில் இடம் பெறவில்லை. இந்தியா-பாகிஸ்தானிடையிலுள்ள பதற்றம் காரணமாக, இந்தியாவை அந்த குழுவில் உறுப்பினராக்கினால் பதற்றம் கூடலாம் என்று பலர் நினைக்கிறார்கள் . (இந்தியாவுக்கு பிறகு பாகிஸ்தானும் உறுப்பினராக கோரியிருக்கிறது). அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் உறுப்பினராக இந்தியா ஏன் இத்தனை ஆர்வமும் பதற்றமும் காட்ட வேண்டும்? உண்மையில் அதனால் என்ன பலன்கள்? பலன்கள் ஏதும் இருக்கிறதா? இந்த விவகாரத்தில் இந்திய அணுசக்தி நிபுணர்களே கருத்து ரீதியாக பிளவுபட்டிருக்கிறார்கள் என்பதுதான் சுவாரஸ்யமான உண்மை. அவற்றைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு சில அடிப்படையான விஷயங்களைப் பார்ப்போம். அணுசக்தி வினியோக நாடுகள் குழு என்பது என்ன? எதற்காக அது உருவானது? இந்தியா அதில் ஏன் உறுப்பினராக இடம் பெற முயற்சிக்கிறது என்று பல கேள்விகள் நம் எல்லோருடைய மனதிலும் இருக்கும். இதெல்லாம் சாதாரண கேள்விகள். அதிகார வர்க்கங்களிலும், வெகுஜன ஊடகங் களிலும் எழுப்பப்படாத, பதில் பெற முடியாத வேறு சில கேள்விகளும் இருக்கின்றன. நாம் அவற்றை நினைவில் கொள்வதுதான் முக்கியம். 1)இந்தியா உறுப்பினராவதில் அமெரிக்காவிற்கு என்ன லாபம்? 2. இந்த குழுவில் இந்தியா உறுப்பின ராவதன் மூலம் பயன் ஏதும் இருக்கிறதா? 48 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அணு சக்தி வினியோக நாடுகள் குழுவில் பல வருடங் களாகவே உறுப்பினராக முயற்சித்து வருகிறது இந்தியா. அணு ஆயுத பரவல் தடுப்புதான் இந்த குழுவின் நோக்கம் என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் எதேச்சதிகாரம்தான் இந்த குழுவின் அடிப்படை. அதாவது இந்த நாடுகள் தங்களுக்குள் மட்டுமே அணு சக்தி வர்த்தகத்தை செய்து கொள்ளும். (2008ல் இதிலிருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கப்பட்டது) 1974ல் இந்தியாவின் அணு ஆயுத சோதனை களுக்கு எதிராக இந்த குழு தொடங்கப்பட்ட என்பதுதான் உண்மை. இப்படி இந்தியாவுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஒரு குழுவில் உறுப் பினராக வேண்டும் என்று இன்று இந்தியா துடிப்பது ஒரு கொடும் நகை முரண். நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யா உறுப்பினராக முயற்சிப்பது எவ்வளவு கேலிக்குரியதோ அது போன்றதே இந்தியாவின் இந்த முயற்சியும்.

மேலும் அணு ஆயுத பரவலாக்க தடுப்பு ஒப்பந்தம் (Nonproliferation Treaty) மற்றும் அணுகுண்டு சோதனை தடை உடன்படிக்கை (Comprehensive Test ban Treaty CTBT) ஆகிய இரண்டுக்கும் இன்னும் இந்தியா ஒப்புதல் வழங்காத நிலையில் அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் உறுப்பினராவது மிகவும் கடினமானது. தவிர, இந்த குழுவில் புதிய உறுப்பினரை சேர்ப்பதென்பது வாக்கெடுப்பு அடிப்படையிலோ பெரும்பான்மை அடிப்படையிலோ நடப்பதில்லை. கருத்தொற்றுமை அடிப்படையிலேயே (consensus) அது நிகழ்கிறது. எனவேதான் சீனா போன்ற நாடுகளின் ஆதரவும் முக்கியமாகிறது. இதனாலேயே சமீபத்தில் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி சீனாவுக்கு சென்று வந்திருக் கிறார் வெளியுறவுத்துறை செயலர் ஜெயசங்கர். இதில் அடிப்படையான விஷயம், இந்தியாவின் அணுசக்தி திட்டத்தை ஒடுக்க இந்தக் குழுவை தொடங்கிய அமெரிக்கா இன்று இந்த குழுவின் அனுமதியை பெற்றுதான் இந்தியாவிற்கு சிறப்பு விலக்கு அளித்தது “மின்சார தயாரிப்புக்கான அணு தொழில்நுட்பம் வழங்குவது தொடர்பாக”. 2008ல் அளிக்கப்பட்ட விலக்கு என்பது இந்தியாஅமெரிக்க ஒப்பந்தத்திற்கு மட்டும் பொருந்தாது, அணுசக்தி வினியோக குழுவில் உள்ள எந்த நாடும் இந்தியாவிற்கு தொழில்நுட்பம் வழங்கலாம், அது அந்த அந்த நாடு சம்மந்தப்பட்டது. இந்தியாவிலிருந்து அணுசக்தி தொழில்நுட்பத்தை வாங்குவது தொடர்பாக உறுப்பு நாடுகளுக்கு உடனடியாக எந்த திட்டமும் இல்லாத நிலையில், இந்த குழுவில் உறுப்பினராவதில் இந்தியாவிற்கு எந்த பலனும் இல்லை என்று நிபுணர்கள் சொல் கிறார்கள். அணு ஆயுத விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீநிவாசன், பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் சத்தியபிரத் பால் போன்றோர் இந்த நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. 2008ல் இந்தியாவிற்கு அளிக்கப்பட்ட விலக்கின் அடிப்படையில் இந்தியாவை யுரேனியம் வாங்க அனுமதித்தாலும் இன்னமும் நமது நாட்டின் மின் உற்பத்தியில் மொத்தம் அணு சக்தியின் பங்கு 1சதவிகிதத்திற்கும் குறைவாகதான் இருக்கிறது. அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் உறுப்பினராலும் அது செறிவூட்ட மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை (Enrichment & re -processing ENR ) பெற மட்டுமே இந்தியாவுக்கு உதவும். ஆனால் இந்தியாவின் கன நீர் அணுவுலைகள் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை பயன்படுத்தவில்லை அதனால் இந்த ENR தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாது. அணுவுலைகள் இறக்குமதி செய்யப்படும் போது எரிபொருள் பற்றிய ஒப்பந்தமும் கையெழுத்தாவதால் இந்த தொழில்நுட்பத்தால் இந்தியாவிற்கு எந்த பெரிய லாபமும் இல்லை. சொல்லப் போனால் அணுசக்தி வினியோக நாடுகள் குழுவுடனான இந்தியாவின் தொடர்புக்கும் இந்தியாவின் எரிசக்தி பிரச்னைகளுக்கு துளியும் தொடர்பு இருக்கப்போவதில்லை என்பதே உண்மை.

ஆனால், இந்தியா உறுப்பினரானால் அமெரிக்காவுக்கு இதில் பல பலன்கள் உண்டு. ஒன்று அமெரிக்காவில் கழித்துக்கட்டப்பட்ட அணுவுலைகளை இந்தியாவிற்கு விற்க முடியும். அதற்கான ஆயத்த வேலைகளில் இரு நாடுகளுமே இருக்கின்றன. (இது பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்). தவிர ஆசியாவில், சீனாவின் ஆதிக்கத்தை இந்தியாவை உறுப்பு நாடு ஆக்குவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கிறது அமெரிக்கா. இதற்கு இந்தியா துணை போவது எந்த விதத்தில் இந்திய மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும் என்றுதான் தெரிய வில்லை.
சமீபத்தில் மோடி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் அமெரிக் காவைச் சேர்ந்த வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனம் மூலமாக ஆறு ஏபி 1000வகை அணுவுலைகள் அமைக்கப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு. இந்த ஆறு அணுவுலைகளை அமைப் பதற்கான செலவு 4லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந் தத்தின் ஒரு அம்சம், வழக்கம் போல விபத்திற்கு வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனம் பொறுப்பேற்காது என்கிற ஏமாற்று வேலைதான். தவிர, இது பொருளாதார ரீதி யாகவும் ஏற்புடையதில்லை என்று கருது கிறார்கள் நிபுணர்கள். ஏபி1000 வகை அணுவுலைகளுக்கு அமெரிக்காவிற் குள்ளேயே பெரிய வரவேற்பு இல்லை என்பதுதான் உண்மை. கடந்த வருடம் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனம் எதிர்பார்த்த 12 ஆர்டர்களில் நான்கு மட்டுமே அதற்கு கிடைத்தது. கடந்த மாதம் புளோரிடாவிற்கு மின் வினியோகம் செய்யும் ஒரு நிறுவனம் 2 ஏபி 1000 அணுவுலைகளை வாங்கும் திட்டத்தை நான்கு வருடங்களுக்கு தள்ளிப் போட்டிருக்கிறது. அதேபோல இன்னொரு அமெரிக்க அரசு நிறுவனம் 2 ஏபி 1000அணுவுலைகளை வாங்கும் திட்டத்தை பொருளாதார காரணங்களைச் சொல்லி கைவிட்டிருக்கிறது. இந்தியாவில் நிறுவப்படும் அணுவுலைகள்கூட இதை விட குறைந்தபட்சம் ஏழு மடங்கு விலை குறைவாக இருக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இப்படி அமெரிக்காவிலேயே போணியாகாத அணுவுலைகளை இந்தியாவிற்கு விற்க ஏற்பாடு செய்திருக்கிறது அந்த நாடு. இந்திய அரசுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை இருந்தால் அது இந்த ஒப்பந்தத்தை கை விடுவதே சரியாக இருக்கும். ஆனால் அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் உறுப்பினராவதற்காக இந்த சுமையை ஏற்கிறது இந்தியா.

கொஞ்சம் விரிவாக பார்த்தால், இந்த அணுவுலைகளிலிருந்து வரக்கூடிய மின் சாரத்தின் விலை ஒரு யூனிட்டுக்கு 25 ரூபாயாக இருக்கும். ஆனால் சூரியசக்தி மூலம் ஒரு யூனிட் ஐந்து ரூபாய்க்கு வழங்க முடியும் என்று சமீபத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கட்டுமானத்தில் 25-30 சதவிகிதம் சேமிக்க முடியும் என்று இந்திய அரசு சொன்னாலும் அப்போதும் ஏபி 1000 அணுவுலை மிக செலவு பிடிக்கும் அணு வுலையாகவே இருக்கும். மேலும் விபத்து நடந்தால் அதற்கு அமெரிக்காவிலிருந்து இயங்கும் வெஸ்டிங் ஹவுஸை பொறுப்பாக முடியாது என்பது இன்னொரு பின்னடைவு. போபால் விஷ வாயு கசிவில் டௌ கெமிக்கல் நிறுவனத்தை தப்பிக்கச் செய்த கையாலாகாதத் தனம் தான் இந்திய நீதித்துறைக்கு மேலும் ஒரு முறை வாய்க்கும். ஆக, லட்சம் கோடிகள் என்று மக்கள் பணத்தை செலவு செய்து அமெரிக்காவில் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து அணுவுலைகளை வாங்கி, அதன் சொந்த மக்களை மின் சாரத்துக்கு அதிக அளவில் பணம் தர வைப்பதுதான் இந்திய அரசின் திட்டம். மேலும் விபத்து நேர்ந்தாலும் அந்த நிறுவனத்தை இந்திய அரசு ஒன்றும் செய்துவிட முடியாது.
அணுசக்தி வினியோக நாடுகள் குழுவின் உறுப்பினராவதன் மூலம் அதி காரத்தை கைப்பற்றலாம் என்று இந்தியா நினைப்பது, மூட நம்பிக்கையை தவிர வேறில்லை. அந்த மூடநம்பிக்கையை மக்கள் மீது திணித்து அவர்களையும் அதற்கு பலியாக்குவதுதான் வேதனை.

கோ.சுந்தர்ராஜன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments