இந்தியாவில் 8 அனல்மின் நிலையங்களில் மட்டுமே சல்பர் டை ஆக்சைடு கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

NLC

நிலக்கரி அனல்மின் நிலையங்கள் தான் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கும் அதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கும் முக்கியக் காரணம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சல்பர் டை ஆக்சைடு வாயு உமிழ்வு குறித்து கேள்வி ஒன்றிற்கு மக்களவையில் ஒன்றிய இணையமைச்சர் அஸ்வினி குமார் சோபே பதிலளித்திருந்தார்.

So2 emmission

அதில், இந்தியாவில் உள்ள அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் சல்பர் டை ஆக்சைடை கட்டுப்படுத்த Wet Scrubbing மற்றும் Dry Sorbent Injection எனும் இரண்டு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் IL&FS நிறுவனத்தால் இயக்கப்படும் 2 அனல்மின் நிலைய அலகுகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 20 அனல்மின் நிலைய அலகுகளில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் அளித்த பதிலில் கூறப்பட்டிருந்தது

– செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments