கேரளாவில் கடல்நீரைத் தடுக்கச் சுவர்கள் போதாது

கோபி வாரியர்

பருவநிலை மாற்றத்தால் வரும் புயல்கள் எல்லாம் தீவிரமானதாக மாறிக்கொண்டிருக்க, கேரளக் கடற்கரையில் போடப்பட்டிருக்கும் கற்சுவர்கள் மக்கள்தொகை அதிகம் கொண்ட அவ்விடங்களுக்கு போதுமானவை அல்ல. தென்மேற்கு பருவக்காற்று சுமந்து வரும் மேகங்கள் மழை கொட்டித் தீர்க்கும் கேரளக் கடற்கரை அதன் இயற்கையான அமைப்பை இழந்து கொண்டிருக்கிறது. தலைமுறை தலைமுறை களாக குழந்தைகள் விளையாடிய கடற்கரை மணல்வெளியில் இப்போது கிரானைட் கற்களும் கான்க்ரீட் சுவர்களும் இடப்பட்டுள்ளன. இந்த செயற்கை அமைப்பு கேரளக் கடற்கரையை ஒட்டி 301.3 கி.மீ நீளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 576.1 கி.மீ நீளம் கொண்ட அம்மாநில கடற்கரையில் பாதிக்கு மேல். அவ்வப்போது நடக்கும் கடல் அரிப்புகளையும் உள்ளடக்கிப் பார்த்தால் இந்த செயற்கை அமைப்பு 370.9 கி.மீ நீளத்திற்குப் போடப்பட்டுள்ளது. இது மொத்த கடற்கரை நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு. மேலும், கேரளக் கடற்கரை நம் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்று என்பது சிக்கலை இன்னும் பெரிதாக்குகிறது. சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் நிலையான கடற்கரை மேலண்மைக்கான தேசிய மையம் (ழிசிஷிசிவி) தயாரித்த `ஷிலீஷீக்ஷீமீறீவீஸீமீ சிலீணீஸீரீமீ ணீssமீssனீமீஸீt ஸிமீஜீஷீக்ஷீt`, கேரளாவின் சராசரி மக்கள்தொகை நெருக்கம் ஒரு சதுர கி.மீ-க்கு 2,022 எனத் தெரிவித்துள்ளது (2001 கணக்கெடுப்பு). இது, ஒரு சதுர கிமீ-க்கு 859 மக்கள் என்கிற கேரளாவின் மொத்த சராசரியைக் காட்டிலும் அதிகம். பதிலாக இந்த சராசரி, ஒரு சதுர கி.மீ-க்கு 382 மக்கள் என்கிற நம் தேசிய சராசரி விட அதிகம் (2011 கணக்கெடுப்பு). அதிக கடற்கரை அரிப்பு மற்றும் அதிக மக்கள்தொகை நெருக்கம் ஆகியவற்றினால், இந்த செயற்கை கல் அமைப்புகள் உயிர் மற்றும் உடைமை பாதுகாப்பு என்ற நோக்கத்தின் பெயரில் தொடர்ந்து கட்டப்பட்டு வருகிறது. ழிசிஷிசிவி மையத்தின் புள்ளிவிவரப்படி இந்தியாவிலேயே குஜராத் தான் அதிகம் கடல் அரிப்புக்கு உள்ளாகும் மாநிலம் என்றாலும் (மொத்தமுள்ள 2,021.3 கி.மீ-யில் 928.4 கி.மீ அரிப்பு), அங்கே கூட 6.9 கி.மீ நீளத்திற்கு மட்டுமே செயற்கை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. 78.5% கடல் அரிப்பு நிகழும் மேற்கு வங்க மாநிலத்திலும் 12.1 கி.மீ-க்கு மட்டுமே செயற்கை அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன.

திறன் போதாமை:

எனினும், பருவ நிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும் திறன் இந்த செயற்கை அமைப்புகளுக்கு மிகக் குறைவே. இயற்கையான அலையாத்திக் காடுகள் மற்றும் மணல் மேடுகள் இவ்வேலையை இன்னும் சிறப்பாகச் செய்யக் கூடியது. மேலும் இந்தச் செயற்கை அமைப்புகள் இவை போன்ற இயற்கை அரண்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. தேசிய கடலியல் நிறுவனத்தின் கணக்குபடி கேரளக் கடற்கரையில் ஒரு வருடத்திற்கு 1.75னீனீ என்கிற அளவில் கடல்நீர் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் கடல்நீர் உள்புகும் முகத்துவாரங்கள் பல கொண்ட கேரளக் கடற்கரையில் (உதாரணம் –  கொச்சி) இந்தக் கடல்நீர் மட்ட ஏற்றம் ஏற்படுத்துக்கூடிய பாதிப்பு அதிகமாகவே இருக்கும். கடல் முகத்துவாரப் பகுதிகளிலும் கடல் அரிப்பு அதிகமாக உள்ளது. கொல்லம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் அதிக நீளத்திற்கு செயற்கை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன (முறையே 79.92% மற்றும் 79.74% நீளம்). இந்த மாவட்டங்களில்தான் கடற்காயல்கள் (வேம்பநாடு, அஷ்டமுடி) அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. “கடல்மட்ட உயர்வைவிட, புயல் உருவாக்கும் அலைகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொள்வதே மிக முக்கியம்” என்கிறார்  NCSCM-ன் இயக்குநர் R.ரமேஷ்.  “இயற்கையான கரையோ அல்லது செயற்கை அமைப்போ, எதுவாயினும் அலைகள் அடிப்பது நிகழத்தான் போகிறது. கடல்சுவர்கள் இதற்கு ஆற்றல்மிக்க நிரந்தரத் தீர்வை வழங்காது. அவை உடனடி பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே. மேலும் பல இடங்களில் அதன் கட்டுமானம் அறிவியல்பூர்வமாக செய்யப்பட்டதல்ல. விளைவாக சில நேரங்களில் கற்பாறைகளும் சேர்ந்தே அரித்துக் கொண்டு போய்விடுகின்றன.” என்கிறார் அவர். (indiaclimatedialogue.net தளத்தில் உள்ள பேட்டி).

இயற்கை அரண்களை அதிகப்படுத்துதல்

அலையாத்திக் காடுகள், மணல் திட்டுகள், சேற்று நிலங்கள், கடற்புல் படுகைகள், பவளப் பாறைகள் போன்ற இயற்கை அரண் களைப் பாதுகாப்பதே சரியானத் தீர்வாக இருக்குமென்கிறார் R. ரமேஷ்.  NCSCM வி கடற்கரை நெடுகிலுமுள்ள சூழலியல் ரீதியில் முக்கியத் துவம் வாய்ந்த இடங்களுக்கான வரைவை  (Mapping)  உருவாகியிருக்கிறது. அந்தத் தகவல்களை தேசிய மற்றும் மாநில அரசுகளுக்கு அளித்து அவற்றைக் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டங்களுக்குள் சேர்க்க சமர்ப்பித்திருக்கிறது. “1999ல் ஒடிஷாவில் வந்த பெரும்புயலின் போதும் 2004ல் வந்த சுனாமியிலும், அலையாத்திக் காடுகளே நம்மைப் பாதுகாத்தது” என்கிறார் கடற்கரை சூழலியலாளரும்  M.S. Swaminathan Research Foundation (MSSRF)  அமைப்பின் நிர்வாக இயக்குநருமான க்ஷி. செல்வம். “சூறாவளியின் போது, காற்றின் வேகம் மணி நேரத்திற்கு 250 கி.மீ மேல் வீசியது. அலையாத்திக் காடுகள் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்பு, அலையாத்திக் காடுகள் இல்லாத கிராமங்களில் ஏற்பட்டதை விட மிகக் குறைவு” என்கிறார் அவர்.

Science பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றில் செல்வமும் மற்ற சர்வதேச ஆய் வாளர்களும் எப்படி அலையாத்தி காடுகளும் மற்ற கடற்கரை தாவர அரண்களும் உள்ள கிராமங்கள் எல்லாம் மற்ற கிராமங்களைவிட 2004 சுனாமியின்போது சிறப்பாகத் தாக்குப்பிடித்தன என்று விளக்குகிறார்கள். மேலும், அலையாத்தி காடுகள் கடல்மட்ட உயர்வையும் தடுக்க வல்லன. காரணம், அலையாத்தி மரங்களுக்கு அடியிலுள்ள மண் படுகை தொடர்ந்து உயரும் தன்மை கொண்டது. அம்மரங்களிலிருந்து உதிரும் இலைகள் மண்படுகைகளோடு சேர்ந்து, ஒரு மொத்த தளமாக உயர்ந்துகொண்டே வரும். இது வளர்ந்துவரும் கடல்மட்டத்துக்கு ஈடு கொடுத்து, வெள்ள அபாயங்களைத் தடுக்கும்.

வளர்ந்து வரும் புரிதல்:

எனினும், பருவநிலை மாற்றம் எவ்வாறு இந்தயக் கடற்கரையைப் பாதிக்கும் என்கிற விரிவான புரிதல் இப்போதுதான் வளர்ந்து வருகிறது.  NCSCM  சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்காக, பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ள கடற்கரை மற்றும் அதிக அலையெழுச்சி கொண்ட இடங்களை அடையாளம் காணும் பணியைச் சமீபத்தில்தான் மேற்கொண்டது. இந்தப் பணி இந்தியக் கணக்கெடுப்பு மையத்தின் துணையோடு செய்து முடிக்கப்பட்டது. “கடல்நீர் ஊடுருவலுக்கும் புயல் பாதிப்புக்கும் அதிக வாய்ப்புள்ள இடங்களை எதுவென்று நாங்கள் கண்டறிய வேண்டும். அதனைக் கண்டறிவதற்கு ஒரு வழிமுறையை வகுத்தோம். தண்ணீர் அளவு உயர்வதற்கு புயலோ அல்லது கடல்மட்ட அதிகரிப்போ காரணமாக இருக்கும். அரசாங்கம் தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை எதிர்காலத்தில் எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான செயல் திட்டத்தை உருவாக்குவது இன்றியமையாத தேவையாகும்” என்கிறார் ரமேஷ். கடற்கரையட்டி ஒரு அபாயக் கோடு வரைவது ஒரு யோசனை. இதன் அங்கமாக இரண்டு திட்டங்கள் இருந்தன. ஒன்று – வெள்ளப் பாதிப்பின்போது எவ்வளவு தூரம் கடல்தண்ணீர் உள்ளே வரும் என்பதை வகுப்பது, இரண்டாவது – கரையில் கடல் அரிப்பின் அளவைப் புரிந்து கொள்வது. இரண்டுக்குமே கடற்கரையின் உயர விவரங்கள் குறித்த துல்லியமான தகவல்கள் தேவை. இதற்கென தாழ்நிலை வான்வழி புகைப்படக் கருவிகள் மூலம் கடல் அரிப்புக்கான வரைவு உருவாக்கப்பட்டது.

கடல்கரை அரிப்பும் மீள் உருவாக்கமும்:

நாடு தழுவிய கடலரிப்புக்கான வரை படங்களில்  NCSCM அரிப்பின் தீவிரத் தன்மையைப் பொருத்து வண்ணக் குறியீடுகளைப் பயன்படுத்தியது. திட்டம் இயற்றுபவர்கள் தகுந்த முடிவை எடுக்க அவை எளிமையாக உதவும் என்பதற்காக செய்யப்பட்டது இது. செயற்கைக் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்ட இடங் களையும் இவ்வரைபடங்கள் கண்டறிகிறது. “அரித்துச் செல்வதும் பின் மணல்கரை உருவாவதும் ஒரே இடத்தில் நடைபெறுவதற்கான இயங்கு திறன் கடற்கரைகளுக்கு உண்டு” என்கிறார் ரமேஷ். வெயில் காலங்களில் கரையில் மணல் சேரும். ஏனெனில் அப்போதிருக்கும் ஆற்றல் குறைவான அலைகள் வண்டல்களை கரையில் சேர்க்கும். பருவமழைக் காலங்களில் புயல் அலைகள் இந்த வண்டல்களை மீண்டும் அரித்துச் செல்லும். கற்சுவர், பாறைகள் போன்ற செயற்கை அமைப்புகள் அரிப்பை கீழ் இழுவை அலைகள் கொண்ட பகுதிகளுக்கு நகர்த்திவிடும். வரைபடம் தயாரிக்கும்போது, உயர் அலைகளின்போது அதிகரிக்கும் கடல்மட்டத்தின் கரை எல்லையும் வரையப்பட்டது. எதிர்காலத்தில் கடற்கரைகுறித்த செயல்திட்டங்களுக்கும் நிர்வாகத்துக்கும் அது உதவும். இவ்வரைபடங்கள் சரிபார்க்கப்பட்டு முறையான அறிவிப்பாக வெளிவர வேண்டி அவை தேசிய மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வரைபடங்களில் சீர்திருத்தம் செய்து வட்டாரத் தகவல்களைச் சேர்த்து உருவாக்க, கேரள அரசு திருவனந்தபுரத்திலுள்ள தேசிய புவிசார் அறிவியல் ஆய்வு மையத்தைப் பணித்தது. உள்ளூர் வாசிகளின் தகவல்கள் கரைகளைப் பற்றி புரிந்துகொள்ள திறன்மிக்க வழியாக இருக்குமென அரசாங்கம் நம்புகிறது.

உள்ளூர் நிலவரம்:

உள்ளூர் அளவில், கடற்சுவர்கள் ஒரு வரம்,  அதே நேரம் சாபம். சான்றாக, திருச்சூர் மாவட்டத்திலுள்ள செட்டுவா கிராமத்தைச் சொல்லலாம். அங்கே கடலை ஒட்டி நீண்ட சுவர் உள்ளது. கடப்புரம் பஞ்சாயத்தின் உறுப்பினரான பி.கே.பஷீர், அவர் சிறியவனாக இருந்தபோது கடல் இப்போதிருப்பதைவிட இன்னும் தள்ளி இருந்ததை நினைவு கொள்கிறார். கடல் உள்ளே வருவதைக் சுவர் ஓரளவுக்குத் தடுத்தாலும், அடிக்கடி உள்ளே ஊடுருவுவதும் நிகழ்கிறது. நிரந்தரத் தீர்வை அது வழங்கவில்லை. மேலும், அலை நீரோட்டம் கடற்கரையில் மணலை அரித்து செட்டுவா நதியின் முகத்துவாரத்தில் சேர்த்து விடுகிறது. துறைக்கு வரும் மீன் பிடி படகுகள் இதனால் பாதிப்படைகின்றன. ரவி பனகல்  எனும்  சூழலியல் செயற் பாட்டாளர், கடற்சுவர்கள் கடலாமைகளைப் பேணவும் ஒரு தடையாக இருக்குமென்கிறார். “கடற் சுவர் எழுப்ப பொதுப் பணத்தை இத்தனை செலவு செய்தும் கடல்நீர் ஊடுருவலிலிருந்து அவை பாதுக்காக்கவில்லை, ஆங்காங்கே பாறைகளும் உடைந்து விடுகின்றன”என்கிறார் indiaclimatedialogue.net  தளத்திற்கு அளித்த பேட்டியில். செட்டுவா நதியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலுள்ள அலையாத்திக் காடுகளை அத்துமீறல்களிலிருந்து பாதுகாக்கும் பணியில் அவரது குழு ஈடுபட்டுள்ளது. சாக்கவாட்டில் வசிக்கும் உள்ளூர் பத்திரிகையாளரான
ரி. வேணு கடற்சுவர்கள் அவசரகதியில் கட்டப்படுவதாலும் தவறான வடிவமைப்பு மற்றும் கட்டுவதற்குரிய சரியான இடங்கள் கண்டறியப்படாதது ஆகிய காரணங்களாலும் விழுந்துவிகின்றன என்கிறார். NCSCM அமைப்பின் ரமேஷ், கடற்கரையின் அரிப்பு – மீள் உருவாக்க இயங்குமுறையைப் புரிந்துகொள்ள ‘வண்டல் கல அணுகுமுறை’ ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென்கிறார். கடலுக்குள் ஊடுருவும் இரு நிலத்திட்டுகளுக்கு இடையே உள்ள பகுதியே வண்டல் கலங்களாகும். ஆக, இயங்குமுறையின் தன்மையைப் புரிந்து கொண்டோமென்றால் செயற்கை அமைப்புகள், அவசியம் தேவை என்ற நிலையில், அவற்றை உருவாக்குவதற்கு ஒரு அறிவியல் பார்வை நமக்குக் கிடைக்கும். “மொத்த இந்தியக் கடற்கரைப் பரப்பில் 27 அடிப்படை வண்டல் கலங்களும் 54 துணைக் கலங்களும் கண்டறிந்துள்ளோம்” என்று சொல்லும் ரமேஷ், “ஒன்றிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்திற்கான (Integrated Coastal Zone Management – ICZM – plans)  எல்லையாக அவற்றைப் பயன்படுத்த உள்ளோம்” என்கிறார். கேரளாவில் ஏற்கெனவே கட்டி முடிக்கப் பட்ட கடற்சுவர்களை இனி ஒன்றும் செய்யவியலாது. ஆனால், முழுமையான மற்றும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையால், இனிமேலும் கடற்சுவர்களைக் கட்டுவதைத் தடுக்கலாம். இந்த அணுகுமுறை மூலம் பருவநிலை மாற்றத்திலிருந்தும் கடல் அரிப் பிலிருந்தும் தானே இயற்கையாக தற்காத்துக் கொள்வதற்கான திறனை கேரளக் கடற்கரை கண்டறிய முடியும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments