தமிழில் வெளியானது வனப் பாதுகாப்புச் சட்ட திருத்த ஆவணம்

TN FOREST

ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகமானது கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இந்தியாவில் 1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் அடங்கிய  ஆவணமொன்றை வெளியிட்டது.

இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள முன்மொழிவுகள் மீதான கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் [email protected] என்கிற அஞ்சல் முகவரிக்கு 15 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த அவகாசமானது மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

கருத்துகள் தெரிவிப்பதகான கால அவகாசம் வரும் நவம்பர் 1ஆம் தேதியுடன் முடிடையும் நிலையில் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையதளத்தில் இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 15 மொழிகளில் வெளியிடப்பட்ட ஆவணமானது 28.10.2021ஆம் தேதி  காலை வரை  தமிழில் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை சுட்டிக் காட்டி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்தில் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த ஆவணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை உடனடியாக வெளியிட்டு அதன் மீது கருத்து தெரிவிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென்று கோரியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வனத்துறையின் இணையதளம் மற்றும் ஒன்றிய அரசின் இணையதளத்தில் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த ஆவணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

FC Act 1980 - Consultancy Paper in Tamil

தமிழ் ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய: https://www.forests.tn.gov.in/pages/view/forest-conservation

https://moef.gov.in/en/tamil-version-for-inviting-commentssuggestions-on-proposed-amendments-in-forest-conservation-act-1980/

வனப்பாதுகாப்புச் சட்டத்தின் முன்மொழிவுகள் மீதுள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து அறிய இக்கட்டுரையை படிக்கலாம் : https://poovulagu.org/statements/proposed-amendments-to-forest-conservation-act/

இந்தச் சட்டத் திருத்தத்தின் மீதான உங்கள் கருத்தை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க கீழ்க்கண்ட இணைப்பில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வழங்கவும்.

https://act.jhatkaa.org/campaigns/forest-conservation-act-email?utm_source=whatsapp_JSC&utm_medium=social&utm_campaign=FCAEmail.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments