தமிழ்நாடு வனத்துறையில் மோப்பநாய் பிரிவு உருவாக்கம்

Sniffer dogs
Image: Akash Shrestha / WWF-Nepal

காடு மற்றும் காட்டுயிர் தொடர்பான குற்றங்களை எளிதில் கண்டறிய தமிழ்நாடு வனத்துறையில் மோப்பநாய் பிரிவை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2021-2022ஆம் ஆண்டிற்கான வனத்துறை மானியக் கோரிக்கையின் கீழ் வெளியான அறிவிப்புகளில் காட்டுப் பகுதிகளில் நடைபெறும் காட்டுயிர் வேட்டை, திருட்டு, மரவெட்டு உள்ளிட்ட சட்ட விரோதமான செயல்களை உடனுக்குடன் கண்டறியவும் குற்றப்புலனாய்வுக்கு உதவியாகவும் சிறப்பு மோப்பநாய் பிரிவு ஒன்று வனத்துறையின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஏற்படுத்தப்படும் என்கிற அறிப்பை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டிருந்தார் .

மேலும், தமிழ்நாட்டின் காலநிலைக்கு பழக்கப்பட்ட உள்ளூர் வகை நாய்களுக்கு உரிய பயிற்சிகள்அளிக்கப்பட்டு இந்த மோப்பநாய் பிரிவில் பயன்படுத்தப்படும் என்றும் காடுகள் பாதுகாப்பை வலுப்படுத்த இந்த மோப்ப நாய் பிரிவு உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக ஆறு மோப்ப நாய் பிரிவுகளை உருவாக்க 74,60,000 ரூபாயை ஒதுக்கீடு செய்து வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த 6 மோப்ப நாய் பிரிவுகளில் 2 பிரிவுகள் முற்றிலுமாக உள்ளூர் வகை நாய் இனங்களைக் கொண்டு அமைக்கப்படும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Sniffer_Dog_G.O.(D)No.178_9.12.2021

அண்மையில் காட்டுயிர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் காட்டுயிர்க் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு தொடங்குவதற்கான அரசாணை வெளியான நிலையில் தற்போது மோப்ப நாய் பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காட்டுயிர் குற்றங்களை வெகுவாகக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கைகள் உதவிகரமாக அமையும்.

-செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments