சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பங்களைப் பரிசீலிக்க இரண்டு குழுக்கள் அமைப்பு.

சுற்றுச்சூழல்

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படும் திட்டங்களுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடையவுள்ள நிலையில் ஆணையத்தை மறுசீரமைப்பு செய்து மார்ச் 6 அன்று ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் வனத்துறைத் தலைவர் சையது முசாமில் அப்பாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆணையத்தின் உறுப்பினராக டாக்டர் என்.வாசுதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்,

ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி P.W.C. டேவிடார் தலைமையில் ஒரு மாநில சுற்றுச்சூழல் வல்லுநர் குழுவும் (SEAC), டாக்டர் வி. பழனிக்குமார், இ.ஆ.ப., (ஓய்வு) தலைமையில் கூடுதலாக ஒரு SEAC குழுவிற்கும் ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது.

வளர்ந்து வரும் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விரைவான அனுமதி வழங்க ஏதுவாக கூடுதலாக ஒரு SEAC குழுவை அமைக்குமாறு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மாதம் ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவை 12.02.2025 அன்று நேரில் சந்தித்துக் கோரியிருந்ததன் அடிப்டையில் கூடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

சுற்றுச்சூழல்

 

மாநில வல்லுநர் மதிப்பீட்டு குழு – 1ன் உறுப்பினர்களாக திரு. எம்.கந்தன், திரு. எஸ்.ரகுபதி திரு. கே.அசோக், பேராசிரியர் டாக்டர் கே.பழனிவேலு, டாக்டர் ஆர்.வெங்கடேசன், திரு. கே.ராம்மோகன், இ.வ.ப., (ஓய்வு), திரு. பி.ராமசாமி மற்றும் உறுப்பினர் செயலர் திரு. ஆர்.கோபகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில வல்லுநர் மதிப்பீட்டு குழு – 2ன் உறுப்பினர்களாக திரு. டி.முருகானந்தம், டாக்டர் ஆர்.ராஜமாணிக்கம், திரு. எஸ்.சிவலிங்கம், டாக்டர் அருண் செந்தில் ராம், திரு. ஜெயபாலன், இ.வ.ப., (ஓய்வு) திரு. ஆர்.சூரியமூர்த்தி, டாக்டர் சுரேஷ் காந்தி மற்றும் உறுப்பினர் செயலர் திரு. ஆர். சேது குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட அனைவரும் 13.03.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

 

EF&CC

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments