பட்டியல்

1. மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய அரசியல் சூழலியல்

மு. வெற்றிச்செல்வன்

128 பக்கங்கள்

விலை: 120/-

மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய தத்துவ பின்புலங்களில் இருந்து எப்படி அரசியல் சூழலியலை வளர்த்தெடுப்பது என்னும் விவாதத்தை முன்வைக்கிறது இப்புத்தகம்.

 

2. நதி நீர் இணைப்பு ஒரு சூழலியல் வன்முறை

பூவுலகின் நண்பர்கள்

45 பக்கங்கள்

விலை: 30/-

நதிநீர் இணைப்பு திட்டம் எவ்விதத்திலும் பொருளாதார ரீதியிலோ, அரசியல் ரீதியிலோ, புவியியல் ரீதியிலோ சாத்தியமற்றது என்பதையும் தாண்டி, இத்திட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதையும் விவரிக்கிறது இப்புத்தகம்.

 

3. கடலில் கலந்த கச்சா எண்ணெய்

பூவுலகின் நண்பர்கள்

24 பக்கங்கள்

விலை: 30/-

கடுமையான நச்சுத்தன்மை கொண்ட நீண்டகால பாதிப்பை ஏற்படத்தக் கூடிய எண்ணெய் கழிவுகளை முறையாக கையாளதது மட்டுமின்றி எந்த எச்சரிக்கை உணர்வுமின்றி பொதுமக்களையும் அதில் ஈடுபடுத்தியது குறித்தும் எண்ணெய்க்கசிவின் பாதிப்புகள் குறித்தும் விவரிக்கிற இப்புத்தகம். சென்னை எண்ணூரில் நடந்த எண்ணெய்க் கசிவை மையப்படுத்தியது.

 

4. சுற்றுச்சூழல் சட்டம் – தேவை ஒரு புதிய பார்வை

வழக்கறிஞர். பி. சுந்தரராஜன்

40 பக்கங்கள்

விலை: 30/-

வளர்ச்சிக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சமரசம் செய்வதென்பது தவிர்க்க இயலாததாக அரசுத்துறைகளும், ஊடகங்களும், நீதித்துறை சார்ந்த பெரும்பாலானவர்களும் நம்புகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குரல்களை வளர்ச்சிக்கு எதிராகவே பார்க்கும் இச்சமூகத்தில் சுற்றுச்சூழல் சட்டம் என்ன குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைகள்.

 

5. நெகிழி

பூவுலகின் நண்பர்கள்

40 பக்கங்கள்

விலை: 40/-

 

6. தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம்- 2010

பூவுலகின் நண்பர்கள்

56 பக்கங்கள்

விலை: 90/-

2010 முதல் நடைமுறைக்கு வந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் குறித்து விரிவாக பேசுகிறது இப்புத்தகம்.

 

7. மாற்றத்திற்கான பெண் வாங்காரி மாத்தாய்

பூவுலகின் நண்பர்கள்

64 பக்கங்கள்

விலை: 90/-

சுற்றுச்சூழல் போரட்டங்களில் தன்னையே விதைத்து பெரும் மரமாக வளர்ந்து காடாகிய வங்காரி மாத்தாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஏழு கட்டுரைகளைக் கொண்ட இப்புத்தகம் வங்காரி மாத்தாயை புரிந்து கொள்ள உதவும்.

 

8.எங்களுக்கு என்ன வேண்டும்?

பூவுலகின் நண்பர்கள்

64 பக்கங்கள்

விலை: 80/-

 

9.கூடங்குளம் பூவுலகின் நண்பர்களின் சட்ட போராட்டம்

மு. வெற்றிச்செல்வன்

80 பக்கங்கள்

விலை: 60/-

எந்த ஒரு ‘வளர்ச்சி’ திட்டமும் மக்களின் வாழ்வுரிமைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாதவகையில் கொண்டுவரப்பட வேண்டும். அணுசக்தி தொடர்பான வளர்ச்சித்திட்டங்கள் இந்த வரையறையைப் பின்பற்றிதான் கொண்டுவரப் படுகிறதா என்பதை விவரிக்கிறது இப்புத்தகம்.

 

10. காலநிலை மாற்றத்தின் புதிய குழந்தை கொரோனா

பூவுலகின் நண்பர்கள்

88 பக்கங்கள்

விலை: 80/-

கொரோனாவிற்கு ஏராளமான உடன்பிறப்புகள் இருப்பதாக வைரஸ் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது நம் கைகளில்தான் இருக்கிறதென நாவல் கொரோனா வைரஸை மையப்படுத்திய பதினைந்து கட்டுரைகளை கொண்டது இப்புத்தகம்.

 

11.தலைநகரின் தணியாத தாகம்

கப்பிகுளம் ஜெ. பிரபாகர்

80 பக்கங்கள்

விலை: 80/-

 

 

12. கதவை திறங்கள் அவை உள்ளே வரட்டும்

ஜீயோ டாமின்

56 பக்கங்கள்

விலை: 75/-

சூழலுக்கு மனித வாழ்வுக்குமான தொடர்புகுறித்து அறிய உதவும் கட்டுரைகளின் தொகுப்பு.

 

13. ரொம்ப கெத்தான ஆளா நீங்க?

ஜீயோ டாமின்

288 பக்கங்கள்

விலை: 250/-

சந்தைப் பொருளாதாரத்தாலும் நுகர்வுவெறியாலும் சூறையாடப்படும் புவியின் சூழலைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. திடக்கழிவு மேலாண்மை, நெகிழி குறித்த கட்டுரைகளும், சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் இவற்றில் அடங்கும்.

 

14. ப்ளா..ப்ளா…ப்ளா… மறைக்கப்படும் காலநிலை மாற்றம்

ராஜசங்கீதன்

119 பக்கங்கள்

விலை: 120/-

காலநிலை மாற்றத்திற்கெதிரான நடவடிக்கைகளில் உலகத் தலைவர்களின் வெற்று வாய்ச் சவடால்களைத் கிழித்தெறிய, சின்னஞ்சிறு சூழல் போராளியான கிரேட்டா தன்பர்க் பயன்படுத்திய ‘ப்ளா… ப்ளா… ப்ளா…’ வார்த்தகளைத் தலைப்பாகவும் முதல் கட்டுரையாகவும் கொண்டு தொடங்கும் காத்திரமான சூழல் அறிவியல்/அரசியல் கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம்.

 

15. உயிர் கொள்ளும் சுதந்திர காற்று

பிரபாகரன் வீரஅரசு

87 பக்கங்கள்

விலை: 90/-

காலநிலை மாற்றமும் –  காற்று மாசுபாடும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லலாம். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடைய, ஒன்றாக அனுகப்பட வேண்டிய பிரச்சனைகள் ஆகும் என்பதை விவரிக்கிறது இப்புத்தகம்.

 

16. பூமியின் நாட்குறிப்பு

லோகேஷ் பார்த்திபன்

55 பக்கங்கள்

விலை: 90/-

தன் வாழ்நாளில் நடந்த நிகழ்வுகளை மனிதன் ஏதோவொரு வகையில் பதிவு செய்து வைத்துள்ளானோ, இயற்கையும் பல நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. இப்புவியின் பல்வேறு பிரச்சனைகளை குறித்து பேசி வரு நாம், இவ்வாறான அதன் இயக்கத்தை புரிந்து கொள்வது அவசியமாகிறது. இதை சாத்தியப்படுத்துகிறது இப்புத்தகம்.

 

17. இது ஒரு குப்பை கதை

ஜீயோ டாமின்

56 பக்கங்கள்

விலை: 90/-

குப்பைகள் பிரச்சினை குறித்த மாணவர்களுக்கான நூல்

 

18. இன்னும் மீதம் இருக்கிறது நம்பிக்கை

பூவுலகின் நண்பர்கள்

48 பக்கங்கள்

விலை: 60/-

அனைத்து உயிரினங்களுக்கும் பூமிதான் ஆதாரம் என்பதை அவர்கள் மறக்கவில்லை. அவர்களுக்கு சாவு பற்றிய பயமோ பசி பற்றிய கவலையோ இல்லாமல் இருந்தது. அவர்கள் வயல் முயல்கள் போல கடல் மீன்கள் போல சுதந்திரமாய் வாழ்ந்து வந்தனர். காலநிலை மாற்றம் குறித்த நீள்கவிதை இப்புத்தகம்.

 

19. எல்லை மீறும் மனித இனம்

பூவுலகின் நண்பர்கள்

48 பக்கங்கள்

விலை: 60/-

இயற்கை வளங்களைப் பணமாக்கத் துடிக்கும் மனிதனின் பேராசையும் வனவுயிர்களின் சூழல் முக்கியத்துவம் குறித்த சரியான புரிதலின்மையும் இப்பூவுலகின் பேருயிர்கள் முதல் சிற்றுயிர்கள் வரையில் அனைத்துக்கும் அச்சுருத்தலாகி இருப்பதைக் குறித்த கட்டுரை தொகுதி இப்புத்தம்.

 

20.பச்சையாக சொல்வதென்றால்

சுப. உதயகுமாரன்

160 பக்கங்கள்

விலை: 125/-

கூடங்குளம் போரட்டம் தொடங்கி இன்று தமிழகத்தில் எதிராகவும் தொடர்ந்து முழுங்கிக் கொண்டிருக்கும் சுப. உதயகுமார் அவர்கள் நம் மண்ணின் பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்தும் அவற்றின் பின்னுள்ள அரசியல் குறித்தும் இப்புத்தகத்தில் பச்சையாகவே அலசியிருக்கிறார்.

 

21. என் பெயர் இயற்கை

கப்பிகுளம் ஜெ. பிரபாகர்

58 பக்கங்கள்

விலை: 50/-

கண்ணுக்குத் தெரிந்த தாவரங்கள், விலங்குகள், நிலவியல் அமைப்புகள் என்று பரவலாக அறிமுகம் செய்யும் இந்நூல் கடல் ஆமை, கான மயில் என ஆரம்பித்து தாவரங்களின் இலை, பவளப்பாறைகள்,  பழங்குடி மக்களின் வாழ்வியல் என்று விரிகிறது.

 

22. ஹைட்ரோகார்பன்- ஆழத்தில் புதைந்து இருக்கும் பேராபத்து

பூவுலகின் நண்பர்கள்

48 பக்கங்கள்

விலை: 45/-

தமிழகத்தில் தொடர்ந்து பேரச்சமாக நிலைக் கொண்டிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் குறித்ஹ்ட அறிவியலாளர்கள் மற்றும் சூழலியலாளர்களின் கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம்.

 

23. வெள்ளம் தந்த பாடங்கள்

பூவுலகின் நண்பர்கள்

40 பக்கங்கள்

விலை: 30/-

சென்னை வெள்ளத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிடமுடியாது. ஆனால் அந்த பெரும் இன்னலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பது பெரிய கேள்விக்குறியாக்கியிருக்கிறது இப்புத்தகம்.

 

24. நம்மாழ்வார் ஆயிரங்காலத்து பயிர்

பூவுலகின் நண்பர்கள்

64 பக்கங்கள்

விலை: 90/-

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் இவரது கால்கள் பயணப்பட்டுள்ளன. சின்னஞ்சிறு சிற்றூர் முதல் பல பெரிய நகரங்கள் வரை இவரது குரல் முழங்கியதுண்டு. ஏதாவது பேருந்தின் கடைசி இருக்கையில் இருந்து கொண்டு பயணம் செய்து கொண்டே இருப்பார். ஏதாவது ஒர் ஊரில் இயற்கை வேளாண்மை பற்றிய ஓர் உரை நடந்துகொண்டே இருக்கும். -பாமயன்.

 

25. பூமிக்கான பிரார்த்தனை

தமிழில் வெ. ஜீவானந்தம்

112 பக்கங்கள்

விலை: 100/-

போப் பிரான்சிஸ் மடலின் சுருக்கும்.

 

26. பிளாஸ்டிக் எனும் அணுகுண்டு

க.சே. ரமணி பிரபாதேவி

80 பக்கங்கள்

விலை: 85/-

 

27. இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில் தான்

தொகுப்பு. சதீஷ் லட்சமணன்

104 பக்கங்கள்

விலை: 110/-

காலநிலை மாற்றத்தின் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் அதன் அரசியல் குறித்தும் ‘பூவுலகு’ சுற்றுச்சூழல் மாத இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம்.

 

28. மூன்றாம் உலக போர் தண்ணீருக்காக

தமிழில் பூவுலகின் நண்பர்கள்

96 பக்கங்கள்

விலை: 100/-

இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நிலவளத்திலும் –  நீர்வளத்திலும் பாதிக்கும் சற்று அதிகமே தமிழ் மக்களுக்குக் கிடைக்கின்றது. எனவே, தமிழர்களாகிய நாம் மற்றவர்களை விட நிலம் மற்றும் நீரை மிகவும் நல்ல முறையில் -சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் நாம் உள்ளதை உணர்த்துகிறது இப்புத்தக்கம்.

 

29. இனி யாரும் இங்கு அழ வேண்டாம்

ஜீயோ டாமின்

50 பக்கங்கள்

விலை: 40/-

புவியின் பரிணாமம், புவியில் நிகழ்ந்த போர்கள், மானுட அமைதி குறித்த மாணவர்களுக்கான சிறு புனைவு நூல்

 

30. பூமியின் குட்டி விண்மீன்கள்

ஜீயோ டாமின்

80 பக்கங்கள்

விலை: 80/-

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கேற்ற சிறுசிறு சூழல் சார் கட்டுரைகள்

 

31. நில வாழ் பறவைகள்

அமர பாரதி, மேகா சதீஷ்

102 பக்கங்கள்

விலை: 200/-

பறவைகள் நம்மைச் சுற்றியுள்ள சூழல் வலைப் பின்னலில் மிக முக்கியக் கன்னிகளாகும். சூழல் அங்கங்களைப் புரிந்து கொள்ள எளிமையான தொடக்கம் பறவைகள். நிலத்தில் வாழும் பறவைகளைப் பற்றியும் அதன் சூழல் பிணைப்புகளையும் புரிந்துகொள்ள இந்த புத்தகம் நல்ல தொடக்கமாக அமையும்.

 

32. இந்த பூவுலகும் பெண்களும்

பூவுலகின் நண்பர்கள்

44 பக்கங்கள்

விலை: 45/-

தம் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் களமாடும் இப்பூவுலகின் பெண்களைப் பற்றிப் பேசுகிற இப்புத்தகத்தில் நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தையின் நோபல் உரையின் மொழிபெயர்ப்பும் இடம் பெற்றிருக்கிறது.

 

33. பூமியில் தனிமைக்கென்று ஓர் இடமில்லை

தமிழில். யூமா வாசுகி

32 பக்கங்கள்

விலை: 40/-

 

34. மறக்கப்பட்ட தீர்க்கதரிசி ஜெ.சி குமரப்பா

வெ. ஜீவானந்தம்

32 பக்கங்கள்

விலை: 40/-

இயற்கை வளங்களின் கண்கொண்டு இவ்வுலகத்தின் பொருளாதாரச் சிந்தனைகளை வளப்படுத்தினார் ஜே. சி. குமரப்பா. வருங்காலங்களில் இந்தியாவைக் காப்பாற்ற அவரது சிந்தனைகளே மாபெரும் கருவியாக இருக்கக்கூடும்.

 

35. மரங்களை நட்டவன்

தமிழில். ரா. கிருஷ்ணமூர்த்தி

34 பக்கங்கள்

விலை: 40/-

 

36. மாபெரும் விதைக்கொள்ளை

தமிழில். கிழார்

48 பக்கங்கள்

விலை: 60/-

எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் பலர் செய்த விதைக்கொள்ளைகளை விரிவாக ஆராய்ந்து, திட்டமிட்ட இந்த சதிக்கு பின்னே இருப்பவர்களை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

 

36. ஸ்டெர்லைட் வாழ்க மக்கள் ஒழிக

பூவுலகின் நண்பர்கள்

32 பக்கங்கள்

விலை: 25/-

 

37. ஏம்மா கொதிக்குது உன்னோட ஒடம்பு

ஜீயோ டாமின்

40 பக்கங்கள்

விலை: 80/-

சிறுவர்களுக்கான காலநிலை மாற்றம் பற்றிய அறிமுக நூல்

 

38. அன்றே கொல்லும் அரசு

பொறியாளர். சுந்தர்ராஜன்

160 பக்கங்கள்

விலை: 125/-

 

39. காலநிலை மாற்றம்

பூவுலகின் நண்பர்கள்

32 பக்கங்கள்

விலை: 25/-

காலநிலை மாற்றம் குறித்த அடிப்படையான கேள்விகளைக் கேட்டு, அதற்கு பதிலளிக்கிறது இப்புத்தகம்.

 

40. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்ட தீர்வு

பி. சுந்தரராஜன்

93 பக்கங்கள்

விலை: 70/-

 

41. ஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபு ஃபுகோகா

தமிழில் பூவுலகின் நண்பர்கள்

199 பக்கங்கள்

விலை: 200/-

 

 

42. IPCC ஆறாவது அறிக்கை

தொகுப்பு: பூவுலகின் நண்பர்கள்

63 பக்கங்கள்

விலை: 40/-

IPCC ஆறாவது அறிக்கையை சுருக்கமாக விளக்குகிறது இப்புத்தகம்.

 

43. காலநிலை மாற்றம் : வாழ்வதற்கான இறுதி வாய்ப்பு

பூவுலகின் நண்பர்கள்

49 பக்கங்கள்

விலை: 60/-

 

44. விதைகள்

பூவுலகின் நண்பர்கள்

112 பக்கங்கள்

விலை: 120/-

 

45. புல்லினும் சிறீயது

எஸ் . ராமகிருஷ்ணன்

46 பக்கங்கள்

விலை: 50/-

 

46. பழந்தமிழர் வேளாண்மை

பாமயன்

32 பக்கங்கள்

விலை: 40/-

 

47. இயற்கை வேளாண்மை – செய்முறை விளக்கம்

நீ .ராஜகோபால்

32 பக்கங்கள்

விலை: 25/-

 

48. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் – உணவு தட்டிற்கு வரும் பேராபத்து

பூவுலகின் நண்பர்கள்

80 பக்கங்கள்

விலை: 75/-

 

49. உயிர்வலை –1

ஜீயோ டாமின்

72 பக்கங்கள்

விலை: 150/-

இவ்வுலகின் உயிரினங்களோடு, இப்புவியின் காலநிலைக்கும், சூழலுக்கும், சூழலில் மற்ற உயிரினங்களுக்குமுள்ள நுட்பமான வலைப்பின்னல்போன்ற பிணைப்பை இப்புத்தகம் விவரிக்கிறது.

 

50. நாமும் நம் உறவினர்களும்-2

ஜீயோ டாமின்

77 பக்கங்கள்

விலை: 150/-

உலகில், ஆதி முதல் உயிரியின் தோற்றம் முதல் இன்றைய உயிரினங்கள் வரையிலான நீண்ட பரிணாம வரலாற்றையும் அதன் பின்னிருக்கும் பரிணாம அறிவியலையும் இப்புத்தகம் விளக்குகிறது.

 

51. ஏற்ற தாழ்வுகளின் கதை-3

ஜீயோ டாமின்

47 பக்கங்கள்

விலை: 50/-

சூழல் செயல்பாட்டின் முக்கிய பகுதியான, சூழல் நீதியைப் புரிந்துகொள்ள மனிதர்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளின் வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம். அந்தப் புரிதலுக்கான அறிமுகத்தை இப்புத்தகம் வழங்குகிறது.

 

52. பற்றி எரியும் பூமி –4

ஜீயோ டாமின்

46 பக்கங்கள்

விலை: 50/-

உலகம் வெப்பமாதல் குறித்தும், இன்றைய தீவிர காலநிலை நெருக்கடியின் பின்னிருக்கும் அறிவியலையும் அது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் விவரிக்கிறது இப்புத்தகம். குறிப்பாக தமிழகத்தில் காலநிலை மாற்றம் என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் புத்தகம் சுருக்கமாகப் பேசுகிறது.

 

53. பூமிக்கு நெருப்பு வைத்தவர்கள் –5

ஜீயோ டாமின்

48 பக்கங்கள்

விலை: 50/-

புவியை வெப்பமடையச் செய்பவர் யார்? அவர்களின் சித்தாந்தம் என்ன? ஏன் காலநிலை மாற்றம் உலகமுழுதும் பேசுபொருளாக இருந்தாலும் நம்மால் சரி செய்ய முடியாததாக இருக்கிறது? இந்த கேள்விகளுக்கு விடையாக அமைகிறது இப்புத்தகம்.

 

54. பச்சை வியாபாரம் –6

ஜீயோ டாமின்

76 பக்கங்கள்

விலை: 75/-

வளர்ச்சியும் உமிழ்வும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருக்க ‘வளங்குன்றா வளர்ச்சி’ சாத்தியமா? உற்பத்தியை பசுமையாக்க முடியுமா? எல்லா உற்பத்தியையும் பசுமையாகிவிட்டால் நாம் பிழைத்துக்கொள்வோமா? இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்புத்தகம்.

 

55. எந்திரன் –7

ஜீயோ டாமின்64 பக்கங்கள்

விலை: 65/-

வாழ்வதற்காக வேலை செய்த மனிதர்களை, வேலை செய்வதற்காக வாழ்பவர்களாக வடிவமைத்திருக்கிறது சந்தைப் பொருளாதாரம். நமது எந்திரத்தனமான வாழ்வையும் வேலைகளையும் மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுக்கிறது இப்புத்தகம்.

 

56. விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள் –8

ஜீயோ டாமின்

79 பக்கங்கள்

விலை: 75/-

இலாப வேட்கைகொண்ட சந்தைப் பொருளாதாரம் எப்படி நம்மை நுகரும் எந்திரங்களாக வடிவமைத்திருக்கிறது என்றும், நம் சமூகத்தையும் வாழ்வையும் எப்படி பெருநுகர்வு சிதைத்திருக்கிறது என்பதையும், நுகர்வு வேட்கையின் பின்னிருக்கும் அறிவியல் குறித்தும் இப்புத்தகம் பேசுகிறது.

 

57. குறைவே நிறைவு –9

ஜீயோ டாமின்

48 பக்கங்கள்

விலை: 50/-

தனிநபர்களாகவும் சமூகமாகவும் சூழல் நலனுக்குப் பங்களிக்க நம்மால் செய்யக்கூடிய சின்னச் சின்ன விஷயங்களைப் பட்டியலிடுகிறது இப்புத்தகம்.

 

58. தேவை மட்டுறு வளர்ச்சி – 10

ஜீயோ டாமின்

96 பக்கங்கள்

விலை: 80/-

நம்மை ‘பிழைத்தலிலிருந்து வாழ்தலுக்கு’ அழைத்துச் செல்லக்கூடிய ‘மட்டுறு வளர்ச்சி’ என்ற மிகமுக்கிய கருத்தாக்கத்தை தமிழுக்கு அறிமுகம் செய்கிறது இப்புத்தகம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான அரசியல் பொருளாதார மாற்றங்களை இந்நூல் பேசுகிறது.

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments