மஞ்சளால் உங்கள் ஆரோக்கியத்தை உண்மையிலே அதிகரிக்க முடியுமா ?

பல துணிகரமான கூற்றுகள் மஞ்சளின் ஆற்றலைப் பறைசாற்றியுள்ளன. இதில் ஏதேனும் உண்டாவென வினவுகிறார் மைகேல் மோஸ்லே (வியாழக்கிழமைகளில் இரவு எட்டு மணிக்கு (20.00 BST) BBC யில் ஒளிபரப்பாகும் “நம்புங்கள், நான் ஒரு மருத்துவர்” (Trust me, I’m a doctor) நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களுள் ஒருவர்) மூல வடிவத்தில் இஞ்சியின் வேரைப் போன்று காட்சியளித்தாலும் அரைக்கப்பட்டால் தெற்காசிய சமையல்களில் பிரபலமாய் பயன் படுத்தப்படும் தனித்துவமான பொடியாக மாறும் மஞ்சளானது ஒரு நறுமணப் பொருள். சமீப காலங்களில் மஞ்சளைப் பெரும்பாலும் காணும் இடமாக பிரிட்டனின் மிக பிரபலமான உணவுகளில் ஒன்றான சிக்கன் டிக்கா மசாலா உள்ளது.

ஒவ்வாமை முதல் மன அழுத்தம்வரை அனைத்தையும் இது மேம்படுத்தும் போன்ற கோரிக்கைகளால், சமைக்கவும், உணவுகளின் மேல் தூவவும் மட்டுமின்றி தேநீர் போன்ற பானங்களில் சேர்க்கப்படுவது இந்நாட்களின் நம்பமுடியாத நவநாகரிகமாகி வருகிறது. அப்பானத்தைக் குடிப்போர் யாரேனும் உள்ளீர்களா?

வழக்கமாக இதுபோன்ற உரிமைக் கோரிக்கை களை இழிவாக பார்க்கும் நான் தற்போது இதில் ஏதேனும் இருக்கலாம் என்று எண்ணுகிறேன். குறைந்தது 200 வித்யாசமான கலவைகள் மஞ் சளில் இருந்தாலும் அதில் ஒன்றில் தான் அறிவியல் ஆய்வர்கள் குறிப்பிடத்தக்க ஆர்வங்காட்டி வருகின்றனர். குர்குமின் என்றழைக்கப்படும் இதுவே இந்த நறுமணப் பொருளுக்கு இதன் நிறத்தைத் தருகிறது.

மஞ்சள் மற்றும் குர்குமினை ஆய்வகங்களில் ஆராய்ந்து ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள், அவற்றுள் சில நம்பிக்கை தரும் முடிவுகள் கொண்டவையாக வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் யதார்த்தமற்ற அதிக அளவு மருந்துகளைக் கொடுத்து இந்த ஆய்வுகளனைத்தும் சுண்டெலிகளில் நடத்தப்பட்டுள்ளன. நிஜ உலகில் மனிதர்களின்மேல் மிகவும் சில ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனை பற்றி

மேலும் அறிய:

சரியாக இதுபோன்ற சந்தர்ப்பத்தில் தான் என்னை நம்புங்கள் (Trust Me) நிகழ்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். அதனால் நாடு முழுவதிலும் இருக்கும் முன்னணி ஆய் வாளர்களின் உதவியுடன் ஒரு நூதனமான சோதனைக்காக வடகிழக்கில் இருந்து 100 தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களில் சிலர் மஞ்சள் கலந்த உணவுகளை வழக்கமான முறையில் தொடர்ந்து உண்டனர்.

பின் அவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தோம். ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சளை உணவில் கலந்து ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு உண்ணுமாறு ஒரு குழுவினரைக் கேட்டுக் கொண்டோம். அதே அளவு மஞ்சளைப் பிற்சேர்க்கையாக கொண்ட மாத்திரை ஒன்றை விழுங்குமாறு மற்றொரு குழுவினரைக் கேட்டுக்கொண்டதோடு முன்றாவது குழுவிற்குப் போலி மாத்திரையைக் கொடுத்தோம். நாள் ஒன்றிற்கு ஒரு தேக்கரண்டி வீதம் மஞ் சளை உட்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட தன்னார்வலர்கள் எந்த உணவில் அதை சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதில் கூர்மதியோடு இருந்து அதை சூடான பாலில் அல்லது தயிரில் கலந்துகொண்டனர். அதன் சுவைக்கு அனைவரும் ஆர்வங்காட்டவில்லை, “மிக மோசமான” முதல் “மிகவும் வலுவான மற்றும் நீடித்த” போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

ஆனால் மஞ்சளை உண்டதில் என்ன விளைவு அவர்களிடம் ஏற்பட்டது? லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் மார்ட்டின் விட்ஸ்வென்டர் (Prof Martin Widschwendter) மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்ட நூதனமான சோதனையைப் பயன்படுத்தி அதை அறிய முடிவெடுத்தோம். பேராசிரியர் விட்ஸ்வென்டர் மஞ்சளில் குறிப்பாக ஆர்வமில்லாதவராயினும் புற்று நோய்கள் எவ்வாறு துவங்குகிறது என்பதில் ஆர்வமுள்ளவர். மார்பகப் புற்றுநோய் உள்ள மற்றும் இல்லாத பெண்களிடமிருந்து திசு மாதிரிகளை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்ததில் அந்த திசுக்கள் புற்றுநோயாக மாறுவதற்கு முன் அதன் அணுக்களில் இருக்கும் தாயனையில் மாற்றம் ஏற்பட்டத்தை அவரது குழுவினர் கண்டுபிடித்தனர். மரபணுக்களின் தொகுப்பின் போது அந்த மாற்றம் இருக்கிறது. அதன் பெயர் டி.என்.ஏ. மிதைலேஷன். டைமர் பொத்தானைப் போன்று செயல்படும் இது, ஒரு மரபணு செயல்படுவதைத் தூண்டவோ நிறுத்தவோ முடியும். அந்த மாற்றத்தைச் சரியான நேரத்தில் கண்டறிந்தால் அணுக்கள் புற்றுநோயாக மாறு வதற்கு முன் அதை தடுத்து திருப்ப முடிவது சாத்தியம் என்பதே இதில் மயிர்க்கூச்செடுப்பது. புகைபிடிப்பதைக்கை விட்டதும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் வியத்தகு வகையில் குறைகிறது என்ற உதாரணமே டி.என்.ஏ. மிதை லேஷன் என்பதை விளக்கும். புகை பிடிப்பதால் மரபணுவில் ஆரோக்கியமற்ற முறையில் மிதைலேஷன் ஏற்படுவது புகையினை நிறுத்தியதும் தடுக்கப்படலாம் அல்லது திருப்பப்படலாம். அதனால் நமது சோதனையின் தொடக் கத்திலும் முடிவிலும் தன்னார்வலர்களின் ரத்த அணுக்களில் டி.என்.ஏ. மிதைலேஷன் ஏற்படும் முறையைப் பரிசோதிப்பதால் புற்றுநோய் மற்றும் ஒவ்வாமை போன்ற பிற நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால் தெரியப்படுத்த முடியுமா என பேராசிரியர் விட்ஸ்வென்டரிடம் கேட்டோம். இதுவரை செய்யப்பட்டிராத ஒன்றிது.

மஞ்சள்:

•கிழக்காசியாவைச் சார்ந்த வற்றாத மருந்துச்செடி

•செடியின் வேரிலிருந்து நறுமணப் பொருள் பெறப்படுகிறது

•இந்திய உணவுகளில் பயன்படுத்தப் படுவதோடு பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் இது சாயப்பொருளாகவும் இருக்கிறது

நல்ல காலமாக அவர் மிகவும் ஆர்வங் காட்டினார். “இந்த ஆய்வில் சம்பந்தப் பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கருத்து, ஏனென்றால் குறிப்பாகப் புற்றுநோய்க்கு எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பதை கணிக்க உண்மையில் வாய்ப்பளித்து புதிய சாளரங்களைத் திறந்து விட்ட ஒரு அடிப்படை ஆய்விற்கான ஆதாரமாக இது அமையும் “ என அவர் கூறினார்.

அதனால் என்ன, இப்போது ஏதேனும் நடந்ததா? அவரிடம் இதை நான் கேட்டதும் அவரது மடிக்கணினியை வெளியில் எடுத்து மெதுவாக பேச ஆரம்பித்தார்.

“போலி மருந்தை எடுத்துக் கொண்ட குழுவினரிடம் நாங்கள் எந்த மாற்றத்தையும் காணவில்லை” அவர் என்னிடம் கூறினார். அது ஒரு ஆச்சரியம் இல்லை.

“மஞ்சளை மாத்திரை வடிவில் எடுத்துக் கொண்ட குழுவும் எந்த மாற்றத்தையும் காண்பிக்கவில்லை “ அவர் கூறிக்கொண்டே போனார்.

அது ஆச்சரியமாகவும் சற்று ஏமாற்றமாகவும் இருந்தது. அவர் தொடர்ந்து சொன்னார் “ஆனால் உணவில் மஞ்சள் பொடியைக் கலந்து கொண்ட குழுவினரிடம் மிகவும் கணிசமான மாற்றத்தினை நாங்கள் கண்டோம். மிகப்பெரிய மாற்றத்தினைக் காண்பித்த ஒரு குறிப்பிட்ட மரபணுவை நாங்கள் கண்டறிந்தோம். இதில் ஆர்வமூட்டியாது என்னவென்றால் அந்த மரபணு மூன்று குறிப்பிட்ட நோய்களான மன அழுத்தம், ஒவ்வாமை மற்றும் சிரங்கு, மற்றும் புற்றுநோய் ஆகியவற்றோடு தொடர்புடையது என்பதை நாங்கள் அறிவோம். இது உண்மையில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு.” நிச்சயமாக. ஆனால் ஏன் ஒரே அளவு மஞ் சளை மாத்திரை வடிவில் எடுத்தவர்களிடம் இல்லாமல் உணவில் பயன்படுத்தியவர்களிடம் மட்டுமே மாற்றத்தைக் காணமுடிந்தது? மஞ்சளை உட்கொண்ட விதத்தோடு ஏதேனும் ஒரு வகையில் இது சம்பந்தப் பட்டிருக்கலாமென நியூகேஸில் பல்கலைக்கழக (Newcastle University) மூத்த விரிவுரையாளரும் இந்த பரிசோதனையை நிகழ்த்தியதற்கு உதவியவருமான மருத்துவர் க்ரிஸ்டென் ப்ரான்ட் (Dr Kirsten Brandt) எண்ணுகிறார்.

“அதனோடு சேர்க்கப்பட்ட கொழுப்பாலோ அல்லது வெப்பத்தாலோ மஞ்சளின் ஆக்கக் கூறுகள் அதிகம் கரையக்கூடியதாகி நமது உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டிருக்கலாம். மேலும் ஆராய்ந்து சரியாக என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய நிச்சயமாக இது ஏதோ ஒன்று கொடுக்கிறது” என அவர் கூறினார். நமது தன்னார்வலர்கள் அனைவரும் மஞ் சளை வெவ்வேறு வகையில் உட்கொண்டதால் இந்த மாற்றங்கள் நிச்சயமாக மஞ்சளால் தான் நிகழ்ந்திருக்குமே அன்றி சிக்கன் டிக்கா மசாலா போன்ற வேறு ஏதோவொரு கலவையின் கூறுகளால் நிகழ்ந்திருக்காது என்ற நம்பிக்கையில் அவர் இவ்வாறு என்னிடம் கூறினார். இதே சோதனையை மீண்டும் செய்து இந்தக் கண்டுபிடிப்புகள் உறுதி செய்யப்படுகின்றனவா உள்ளிட்ட இன்னும் நிறைய ஆய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த கண்டுபிடிப்புகளின் ஒளியில் இதனை அதிகமாக உட்கொள்ளப் போகிறேனா? அநேகமாக. இதன் சுவையை நான் விரும்புவ தோடு முட்டை ஊற்றப்பத்தில் மிளகாய்ப் பொடியோடு இதனையும் சேர்த்துக் கொள்ளும் பரிசோதனையை ஏற்கனவே துவங்கி விட்டேன்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments