காலநிலை மாற்றம் குறித்து களப்பணியாற்றும் வகையில் தமிழ்நாட்டில் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலைமைப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு Sustera Foundation என்கிற அமைப்புடன் இணைந்து தொடங்கவுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த IPCCயின் அண்மைக்கால ஆய்வறிக்கைகளின் முடிவுகள் மிகவும் அச்சுறுத்தக்கூடியவையாக உள்ளன. இதனால் உலக நாடுகள் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியசிற்குள் தக்கவைப்பதற்காக உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க பெரும் அழுத்தத்திற்குள்ளாகி உள்ளன. சர்வதேச அளவில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் காலநிலை மாற்றம் உள்ளூர் அளவில் நம்மை நேரடியாக பாதிக்கக்கூடிய பிரச்சனையாக இருக்கிறது. பெரும்பாலான இந்திய மாநிலங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும் அவற்றை எதிர்கொள்வதற்கான தங்களுக்கான தனி வழிமுறைகளையும் வகுக்கத் தொடங்கிவிட்டன.
காலநிலை மாற்றத்தால் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க விளைவுகளை எதிர்கொள்ளும் என்று அன்மையில் வெளியான பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடல்மட்ட உயர்வு, வெப்பநிலை அதிகரிப்பு, மழைப் பொழிவில் மாற்றம், பருவகால மாற்றம், உணவு உற்பத்தியில் தட்டுப்பாடு, புயல், வறட்சி போன்ற அதீத இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. இத்தகைய சூழலில் மாநிலத்தின் பொருளாதார அமைப்புகள், மின் உற்பத்தி. உணவு உற்பத்தி முதலிய துறைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது மிக அவசியமானது.
இந்த இலக்கை அடைவதற்கு IPCCயின் வழிகாட்டுதலின் படி தேவையான கொள்கைகளும் திட்டங்களும் வடிவமைக்கப்பட வேண்டும். இதில் அரசின் பங்கு மிக அவசியமானது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பொதுச் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
“காலநிலை செயற்பாட்டாளர் பயிற்சித் திட்டத்தின் வாயிலாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இளைஞர்கள் மத்தியில் தலைமைப் பண்புகளை வளர்த்தெடுப்பதே பூவுலகின் நண்பர்களின் நோக்கம்.
காலநிலை செயற்பாட்டாளர் பயிற்சித்திட்டம் என்பது தமிழகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 20 முதல் 35 வயதிற்குட்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய இரண்டு மாதம் நடைபெறும் தீவிர பயிற்சி முகாம். இப்பயிற்சியின் பிரதான நோக்கம் இந்த பங்களிப்பாளர்களிடம் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தெடுப்பதும். அவர்கள் தங்களது வசிப்பிடங்களில் உள்ளூர் அளவில் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்தவும் அதன் பாதிப்புகளுக்கு தகவமைத்துக் கொள்ளவும் சர்வதேச அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் முயற்சிகளுக்குத் துணை நிற்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பண்பாட்டு அறிவுடன் கூடிய தொழில் நுட்பரீதியிலான அணுகுமுறைகளை உருவாக்குவதேயாகும்.
தகுதி
20 முதல் 35 வயதிற்குட்பட்ட காலநிலை செயற்பாடுகளில் ஆர்வமுடைய நபர்கள் இப்பயிற்சித் திட்டத்திற்கு தகுதியுடையவர்களாவர். அவரவரின் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் முந்தைய காலநிலை செயல்பாட்டு அனுபவங்களைக் கருத்தில் கொண்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
காலநிலை செயற்பாட்டாளர் பயிற்சித் திட்டம் நேர்முகமாகவும், இணையதளம், குழுச் செயல்பாடு, சமூக வலைதள பிரச்சாரம், மற்றும் செயல்திட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக வகுக்கப்பட்டுள்ளது.
அனைத்து இணையதள வகுப்புகளும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் (முழு நேர பணி/ வகுப்புகளில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்)
இணையதள வகுப்புகள் முடிவடைந்த பின்னர் நடைபெறும் நேர்முக பயிற்சி வகுப்புகளுக்கு பங்கேற்பாளர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நேரில் வருவதும் அவசியம்.
இப்பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க: https://bit.ly/CLP2022TN
கடைசி நாள் 20.06.2022
சந்தேகங்களுக்குத் தொடர்பு கொள்ள: 7395891230, 8124124395.
Love to be a volunteer for nature conservation
சுற்றுச்சூழல் காப்போம் தூய காற்றைப்பெறுவோம்