தமிழ் நாட்டில் அக்டோபர் மாத மழைப்பொழிவு 43% குறைவு

தமிழ் நாட்டில்  அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 43% குறைவாகப் பதிவாகியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் பனிமூட்டமாக உள்ளதற்கு காற்றின் வேகம் குறைவும், காற்றின் ஈரப்பதத்தில் மாசு கலந்து விடுவதால் பனிமூட்டம் போன்று காட்சியளிப்பதுமே காரணம் எனக் கூறினார்.

வடகிழக்குப் பருவமழை காலத்தின் அக்டோபர் மாத இயல்பான மழைப்பொழிவு 171 மி.மீ ஆனால், நடப்பாண்டில் பதிவான மழையளவு 98 மி.மீ  மட்டுமே. இது இயல்பை விட 43% குறைவு. கடந்த 123 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் குறைவாக பதிவானத்தில் இது 9 வது அதிகபட்சமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை 65% குறைவாக பதிவாகியது இதுவரை குறைவான மழைப்பொழிவாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அக்டோபர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது. 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் 16 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும், 17 மாவட்டங்களில் இயல்பைவிட மிக குறைவாகவும் பதிவாகியுள்ளது.

dailyweekly

வடகிழக்கு பருவமழை வலுவாக இல்லை. வலுப்படுத்தும் காரணிகளும் இல்லை என்பதால் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட குறைவாக மழை பதிவாகியதாகக் கூறிய பாலச்சந்திரன், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் புயல்கள் உருவானதன் காரணமாக காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு காற்றில் ஈரப்பதம் மற்றும் வேகம் குறைவாக உள்ளதால் மழைப்பொழிவு குறைந்ததாகத் தெரிவித்தார்.

– செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments