பெட்ரோலிய கெமிக்கல் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் வழக்கு

தமிழகத்தில் அமையவுள்ள பெட்ரோலிய கெமிக்கல் சிறப்புப் பொருளாதர மண்டலத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. பூவுலகின் நண்பர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வழக்காடினார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விவரம்: 1. இந்தியாவை முதலீட்டு ரீதியில் ஏற்புடைய நாடாக மாற்ற மத்திய அரசு பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்களை அமைக்க கொள்கை ரீதியில் தீர்மானங்களை வகுத்துள்ளது. அதன்படி, ஆந்திர பிரதேசம், (விசாகப்பட்டினம், காக்கிநாடா), குஜராத் (தாஹேஜ்), ஒடிஷா (பாராதீப்), தமிழ்நாடு (கடலூர், நாகப்பட்டினம்) ஆகிய நான்கு மாநிலங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெட்ரோலிய
முதலீட்டு மண்டலங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களை கொண்டவை. ஆனால், இந்திய அரசு வெளிக்கட்டமைப்பு திட்டங்களான ரயில், சாலை, துறைமுகம், விமான நிலையம், தொலைத்தொடர்பு உள்ளிட்டவைக்கு மட்டுமே துணைபுரியும். தமிழகத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் ரூ.1,146 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.1,500 கோடி நிதி மத்திய அரசு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இதுவரை எந்தவித நிதியும் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலங்களுக்கும் வழங்கப்படவில்லை. 2. பெட்ரோலிய மண்டலங்களை அமைப்பதில் தமிழக அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. பெட்ரோலிய மண்டலங்களை அமைப்பதற்கான இடங்கள், அவற்றில் நிறைவேற்றப்பட வேண்டிய

திட்டங்களுக்கான அனுமதி ஆகியவற்றிற்கு தமிழக அரசின் ஆதரவு தேவை. இதற்காக, தமிழக அரசானது தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தமிழ்நாடு ஊரமைப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஆகியவற்றில் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, 45 கிராமங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக மாற்ற 18:12:2015 அன்றுஅரசாணை வெளியிட்டது. அதில், இதற்கு அந்த கிராமத்தில் உள்ள மக்கள் மறுப்பு அல்லது பரிந்துரைகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டது. அவை 13:03:2016க்குள் தமிழக அரசை சென்றடைய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி 45 கிராமங்களை உள்ளூர் திட்ட குழுமத்தின் எல்லைக்குள் கொண்டுவந்துள்ளது. இது, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் 20:06:2017 வெளியிடப்பட்ட அரசாணைக்கு எதிரானது. (a) தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்படி உள்ளூர் திட்ட
குழுமத்தின் எல்லைக்குள் ஒரு பகுதியைக் கொண்டு வருவதற்கு, தமிழக அரசு அப்பகுதியின் பரப்பளவு, அப்பகுதியில் தொழில் மற்று வர்த்தக ரீதியிலான வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இவையெல்லாவற்றையும் கருத்தில் கொள்ளாமல், அப்பகுதிகளை உள்ளூர் திட்ட குழுமத்தின் கீழ் கொண்டுவந்து, பரிந்துரைகள்/மறுப்புகளை வரவேற்பது முறையாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல. அதனால், 18:12:2015 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அரசாணையானது, அத்திட்டத்தின் பிரிவு 10 (1) (தீ)- மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14-க்கும் எதிரானது. (b) 18:12:2015 அன்று வெளியிடப்பட்ட அரசாணையானது, 13:01:2016 அன்று தமிழ்நாடு அரசிதழில் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப் பட்டது. ஆனால், இத்திட்டத்திற்கான மறுப்பு / பரிந்துரைகள் வரவேற்கப்படுவது கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலிருந்து. இந்நிலையில், அரசிதழில் தமிழ் மொழியில் வெளியிடப்படாததால், அந்த கிராம மக்களால் தங்கள் கருத்துகளை திறம்பட எடுத்துரைக்க முடியாது. அதனால், இந்த அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது. ( c) 18:12:2015 அன்று வெளியிட்ட அரசாணையை 45 கிராமங்களில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அறிவிப்பு பலகையில் வெளியிட்டிருக்க வேண்டும். மேலும், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெரும்பாலான மக்களால் படிக்கப்படும் தினசரி தமிழ் நாளிதழ்களில் அதனை வெளியிட்டிருக்க வேண்டும். இவற்றை செய்யாமல், இந்த அறிவிப்பு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர்களிடமிருந்து கருத்துகளை வரவேற்பது சட்டத்திற்கு புறம்பானது. (பீ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் பிரிவு 10 (4)-ன் படி, உள்ளூர் மக்களிடம் அத்திட்டத்திற்கான மறுப்பு/பரிந்துரை களை கேட்டறிந்த பின்னரே அந்த பகுதிகளை உள்ளூர் திட்ட குழுமத்தின் எல்லைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அவற்றை செய்யாமல் 45 கிராமங்களையும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக மாற்றுவதாக 20:06:2017 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனால், இந்த அறிவிப்பு தமிழக அரசால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவாகும். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14-க்கு புறம்பானது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments