மேகங்கள் புதிரானவை எம். ராஜீவன்

இந்த கிரகத்தில் 60 சதவீதத்தை மூடியிருக்கும் மேகங்களைப் புரிந்துகொள்வது, காலநிலையை புரிந்துகொள்வதற்கு அத்தியாவசியம். மழை, பனி, ஆலங்கட்டி மழை, இடி என எல்லாவற்றையும் மேகங்கள்தான் உருவாக்கு கின்றன. முதலாவது, இவை எல்லாவற்றையும் மேகங்கள் உருவாக்குவதால், அவை இந்த வளிமண்டலத்தில் சிறியளவிலான இயற்பியல் நடைமுறைகள் பலவற்றிற்கான குறிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன. இரண்டாவதாக, இந்த கிரகத்தை சூழ்ந்திருக்கும் சூரிய ஆற்றலையும், நீர்வளத்தையும் மேகங்கள் ஒழுங்குபடுத்துகின்றன. மூன்றாவதாக, சூரிய கதிர்வீச்சுடன், மேகங்களுடனான இயக்க வியலை விளக்குகின்றன. மேகங்களை புரிந்துகொள்வதன் மூலம் மேக விதைப்பு தொழில்நுட்பம் மூலம் செயற்கை மழையை ஏற்படுத்த உதவிகரமாக அமையும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோரின் இறப்புக்குக் காரணமாகும் மின்னலை கணிப்பதும், மேகங்களை புரிந்துகொண்டால் இன்னும் சிறப்பாக அமையும்.

செயற்கை மேகங்கள், ரேடார்கள், விமானங்கள் உள்ளிட்ட தொலை உணர் சாதனங்கள் மூலம் மேகங்களை நன்றாக புரிந்துகொள்ள முடியும். இதுவரை, மேகங்கள் குறித்த நம்முடைய புரிதல்கள் வெறும் அடிப்படையே. நீரின் மிகச்சிறு துளிகளின் பெருங் கூட்டமைப் புதான் மேகங்கள் என்பது நமக்கு தெரியும். (நீர்த் துளியின் ஒரு டயா மீட்டரில் ஒரு மில்லி மீட்டரின் நூற்றில் ஒரு துளி). இந்த நீர்த்துளிகள் ஒன்றோடொன்று நழுவும்போது, சில அவற்றில் பெரிதாகி மழையாக பொழிகின்றன. ஒரு டயாமீட்டரில் உள்ள மில்லிமீட்டரில் 10-ல் ஒன்றைவிட பெரிய நீர்த்துளிகளை உருவாக்கும் அளவுக்கு போதுமான அளவில் மேகங்கள் அடர்த்தியாக இருக்கும்போது, அந்த நீர்த் துளிகள் மழையாக பூமியின்மீது பொழியும். எல்லா மேகத்திரள்களுமே மழையாக பொழியாது. மழையாக பொழியும் மேகத்திரல் களுக்கிடையே அதன் திறனில் வேறுபாடுகள் உண்டு. சில மேகங்கள் தூறல்களை கொடுக்கும், மற்றவை மழையாக பொழியும். இயக்கவியல் மற்றும் வளிமண்டலத்தின் இயற்பியலை அடிப் படையாகக் கொண்டு மழையைக் கணிக்கும் எண்ணியல் முறைகள், மேகங்களையும் மழைப்பொழிவையும் புரிந்துகொள்ளப் போதுமானதாக இல்லை. மேகங்களில் உள்ள சாரல்களின் எண்ணிக்கை நமக்குத் தெரியாது. இம்மாதிரி போதாமை நிலவுவதால், மழைப்பொழிவைக் கணிப்பதில் பல தவறுகள் ஏற்படுகின்றன. வளிமண்டல சுழற்சி மற்றும் கடல் ((Oceanic Processes) இவற்றை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் காலநிலை நடைமுறைகளிலும், மழைக்காலத்தை உருவகப் படுத்த சில முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. மேக விநியோகத்தின் முப்பரிமாணம் மற்றும் இதர வளிமண்டலத்தில் ஏற்படும் கதிரியக்கத்தின் மீதான அவற்றின் உருவகங்களை அறிய இவை தேவை.

ஆற்றல் நிர்வாகிகள்:

இந்த புவியின் ஆற்றலை மேகங்கள் நிர்வகிக் கின்றன. ஏனெனில், சூரியனிடமிருந்து வரக் கூடிய சூரிய கதிரியக்கம் மற்றும் புவி யிலிருந்து உமிழப்படும் அகச்சிவப்பு கதிர் களிடமும் மேகங்கள் ஒன்றோடொன்று தொடர்புகொள்கின்றன. காலநிலை மாற்றம் குறித்த நிச்சயமற்ற தன்மைகள் மேகங் களுடன் தொடர்புகொண்டவை. மேகங்கள் பொதுவாக சூரிய கதிரியக்கத்தை சிதறடிக்கும். ஆனால், அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சும். வளிமண்டலத்தின் கீழடுக்கில் உள்ள மேகங்கள், (low clouds) அகச்சிவப்பு கதிர்களைவிட அதிகமாக சூரியக் கதிர்களை உறிஞ்சும். அதனால், குளிர்ந்த நிலை உருவாகும். இதற்கு மாறாக, வளிமண்டலத்தின் மேலடுக்கில் உள்ள மேகங்கள் அகச்சிவப்புக் கதிர்களை அதிகமாக உறிஞ்சும். இதனால், வெப்பத்தின் விளைவு அதிகமாக இருக்கும். உலக வெப்பமய மாதலின்படி, வரும் காலங்களில் நாம் அதிகமாக தாழ்நிலை மேகங்களை பெறுவோம் என சிலரும், வேறு சிலர் அதிகமாக உயர்நிலை மேகங்களை அதிகமாக பெறப்போவதாகவும் கணித்துள்ளனர். தாழ்வுநிலை மேகங்களின் விளைவை நாம் அதிகமாக பெற்றோமேயானால், உலக வெப்பமயமாதல் விளைவு குறையும் என

நாம் எதிர்பார்க்கலாம். இதிலிருந்து, காலநிலை மாற்றத்தில் மேகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. கதிரியக்க பாய்மங்கள் மீது அவற்றின் தாக்கம் போன்று நேரடியானதாகவும் அல்லது வளிமண்டல வெப்பம், அழுத்தம் மேற்பரப்பு வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் மூலம் மறைமுகமாகவோ காலநிலை மாற்றத்தில் மேகங்கள் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கால நிலை மாற்றத்தை உருவகப்படுத்துவதற்கு மேகங்களின் கதிரியக்க தொடர்பை புரிந்துகொள்வது முக்கியமாகிறது. மேகங்களின் கதிரியக்க தாக்கத்தை அளவிடுவது கொஞ்சம் சிரமமானது. உதாரணமாக, மேகங்களிலிருந்து பரப்பப்படும் மழைத் துளிகள், மேகங்கள் எந்தளவுக்கு பிரதிபலிப்புத் திறன் கொண்டது என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆனால், இந்த பரவலை அளவிடுவது சிரமம்.

மேகங்களை புரிந்துகொள்வதற்கான முயற்சி:

மேகங்களை புரிந்துகொள்ளுதல் மற்றும் வானிலை, காலநிலை வடிவங்கள் மீது மேகங்களின் பிரதிநிதித் துவத்தை மேம்படுத்துதலுக்காக, 2009-ஆம் ஆண்டு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மேகம் – வளிமக்கரைசல் ((Aerosol) தொடர்பு மற்றும் மழையை அதிகப்படுத்துதல் (The Cloud  – Aerosol Interaction and Enhancement of Precipitation) என்ற தேசியளவிலான திட்டத்தின் மூலம் மேகங்கள் மற்றும் வளிமக்கரைசல்கள் இரண்டுக்குமான தொடர்பை புரிந்துகொள்ள முடியும். இத்திட்டத்தின் மூலம், விமானம் உள்ளிட்டவை மூலம் பல முறைகள் மூலம் கூர்நோக்கப்பட்டது. அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் பல திட்டங்கள் மூலம் மழையை அதிகப் படுத்துவதற்கான (செயற்கை மழை உருவாக்கம்) ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மஹராஷ்டிராவில் உள்ள மஹாபலேஷ்வரில் உள்ள (mahabaleshwar) மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மேக கூர்நோக்கு ஆய்வு மையமானது, பூனே வெப்ப மண்டல ஆய்வுக் கழகத்தால் அமைக்கப்பட்டது. இது இந்தியாவில் வானிலை அறிவியலுக்கான மற்றொரு மைல் கல்லாக பார்க்கப் படுகிறது. இந்த ஆய்வு மையம் 1.2 கிலோமீட்டர் தொலை விலேயே அமைந்துள்ளதால், இயற்கையாக அமைந்த ஆய்வு மையமாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வகத்தில் உள்ள பல்வேறு கருவிகள் மூலம் பள்ளத்தாக்கில் கடந்துசெல்லும் மேகங்கள், இயற்பியல் குறித்த சில அவதானிப்புகளை அனுமதிக்கிறது. இம்மாதிரியான சில முன்னெடுப்புகள் மேகங்கள் குறித்த நமது புரிதல்களை அதிகப் படுத்துகிறது. ஆனால், மேகங்களின் இயக்கவியலை நாம் முழுமையாகப் புரிந்துகொண்டோம் எனக் கூறிக்கொள்ள இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

கட்டுரையாளர் : வானிலை ஆராய்ச்சியாளர், இந்திய புவி அறிவியல் அமைச்சகம் | தமிழில்: ஜீவா | நன்றி : Down to Earth

இதையும் படிங்க.!