உமிழ்வு இடைவெளி அறிக்கை-2020 – விரிவான பார்வை

 

 

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP)பதினோராம் பதிப்பான உமிழ்வு இடைவெளி அறிக்கை, நெருக்கடியான கோவிட்-19 சூழலிலும் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த கோவிட்-19 ஊரடங்கின் விளைவாக, உலகளவில் பெரும் பொருளாதார மற்றும் சமூக இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. ஆயினும், இப்பொருளாதார சீர்குலைவை ஈடுசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் அந்தந்த அரசுகள் எடுத்துக்கொண்டு வருகிறது. ஆனால், இப்பூவுலகில் மனித இனத்தின் வளர்ச்சியின் பொருட்டு ஏற்பட்டுள்ள, தீராத பிரச்சனையாக இருந்து வரும் காலநிலை மாற்றம் பெரும் சுமையாக மாறியுள்ளது. அதிகரித்து வரும் புயல்கள், காட்டுத்தீ போன்ற தீவிர காலநிலை மாற்ற நிகழ்வுகளும், இரு துருவங்களிலுள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகுதலும் அச்சுமையை மென்மேலும் கூட்டுகிறது.கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் இந்தாண்டு புது உச்சத்தை தொட்டுள்ளது எனவும், வரும் காலங்களில் இந்நிகழ்வுகள் அதிகரிக்கவே செய்யும் என கூறும் அறிக்கைகள் நம்மை அச்சம் அடையவே செய்கிறது. .முந்தைய ஆண்டுகளை போலவே, பாரிஸ் ஒப்பந்தத்தின்படி வெப்பநிலையை குறைப்பதற்காக அந்தந்த நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள், உலகளாவிய உமிழ்வுகளின் அளவுகள், வருங்காலத்தின் பசுமை இல்ல வாயுகளின் உமிழ்வு அளவுகள் போன்றவற்றை இவ்வறிக்கை மதிப்பிட்டுள்ளது. உமிழ்வு இடைவெளி என்றால் “நாம் வெளியேற்றும் உமிழ்வுற்கும்; வெளியேற்ற வேண்டிய உமிழ்விற்கும் உள்ள வேறுபாடே” உமிழ்வு இடைவெளி ஆகும்.

கோவிட்-19 தொற்றுநோயை தொடர்ந்து, உமிழ்வு இடைவெளியை குறைப்பதற்காக மிக முக்கிய இரு துறைகளை இவ்வறிக்கை ஆராய்கிறது. கப்பல் மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் இருந்து வெளியேறும் சர்வதேச உமிழ்வுகள், தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளினுள் (NDC) சேராது மற்றும் கோவிட்-19 ஊரடங்கிற்குப்பின், வாழ்க்கைமுறை மாற்றம் போன்ற பிரச்சனைகளை ஆராய்கிறது. கோவிட்-19 ஊரடங்கின் விளைவாக, 2019-ஆம் ஆண்டை விட 2020-இல் உமிழ்வின் அளவு குறைந்தபோதிலும் ஏற்கனவே வளிமண்டலத்தில் இருந்துக்கொண்டு இருக்கும் பசுமை இல்ல வாயுக்களால் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. உமிழ்வுகளை உடனடியாக குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தில் நெடுங்கால தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்பாராத கோவிட்-19 ஊரடங்கு காலத்திற்குப்பின், பொருளாதரத்தை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகிறது. அதில் குறைந்த திறன் கொண்ட கார்பனை(Low Carbon Transaction)பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது உமிழ்வு இடைவெளியை குறைக்க பேருதவியாக இருக்கும் என கருத்தப்படுகிறது.

 1. 2019-ல் அதிகரித்த பசுமை இல்ல வாயு உமிழ்வு:

உலகளவில் பசுமை இல்ல வாயு(GHG) உமிழ்வு 3 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதன் அளவு இம்முறை மிகவும் அதிகரித்து 52.4Gigaton CO2(without LUC)அளவாக உயர்ந்துள்ளது. மனித செயர்ப்பாட்டின் மூலம் வெளியேறிய உமிழ்வை சேர்த்தால் இதன் அளவு 59.1Gt CO2e(with LUC) ஆக இருக்கிறது.

மனித செயற்பாட்டில் (with LUC) வெளியேறிய உமிழ்வுகளில் சுமார் 65% உமிழ்வுகள் கரிம வாயுகள் (carbon-di-oxide)ஆகும். இவை இந்தாண்டு 38 Gt- ஐ தொட்டது. கடந்த ஆண்டை விட 1.9 Giga டன் அதிகம். மனித செயற்ப்பாடுகள் அல்லாமல் பசுமை இல்ல வாயு (GHG) சராசரியாக 1.3% விகிதத்தில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை எடுத்துக்கொண்டால் 1.1% விகிதத்தில் உயர்ந்துள்ளது.  இதுவே LUC-யினால், GHG உமிழ்வுகள் 2010-இல் இருந்து ஆண்டிற்கு சராசரியாக 1.4%விகிதத்தில் உயர்ந்து கொண்டே வந்துள்ளது. ஆனால் 2019-இல் மட்டும், பல இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 2.6% அதிகரித்துள்ளது.

2020-இல் உமிழ்வு குறைந்த போதிலும் அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுகள்:

2000களில் ஏற்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக குறைந்த உமிழ்வை ஒப்பிடும்போது, 1.2% சதவித அளவு அதிகமாகவே இந்த கோவிட்-19 காலத்தில் உமிழ்வு குறைந்துள்ளது.  தொடர்ந்து உமிழ்வின் அளவை குறைக்க வேண்டுமென்றால், கார்பன் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே புவி வெப்பமடைதலை தடுக்க முடியும்.இல்லையெனில், புவி வெப்பமயமாவது புது புது உச்சத்தை தொடுவதை நாம் பார்க்க நேரிடும் .

 

 1. 2030-இன் உமிழ்வின் இலக்கை அடைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்:

கோவிட்-19 பொது முடக்க காலகட்டத்தில், உமிழ்வு அளவு குறைந்த போதிலும், அதை குறுகிய காலத்தீர்வாகவே பார்க்க வேண்டும். 2030இன் உமிழ்வின் இலக்கை அடைய வேண்டுமானால் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்.

கோவிட்-19 சூழலின் தாக்கத்தினால் எடுக்கப்படுள்ள நடவடிக்கைகளின் விளைவாக  2030குள் 2-4Gt CO2e வரை குறையும். இதுவே கரிம பயன்ப்பாட்டை குறைப்போமானால் 1.5 Gt CO2e வரை குறைக்காலம். இதன் அளவு 2030 வரை குறைவாகவே காணப்பட்டாலும், தொடர்ந்து உமிழ்வை குறைக்கவும், பூஜ்ஜிய உமிழ்வை 205௦குள் அடைய இது உதவும்.

 1. பூஜ்ஜிய உமிழ்வு:

மொத்தம் உள்ள 126 நாடுகளில் 51% சதவித உமிழ்வுகளை  வெளியேற்றும் நாடுகள், பூஜ்ஜிய உமிழ்வுகளை பெயரளவில் செயல்படுத்தியும்/ அறிவித்தும்/ நிலுவையில் வைத்தும் இருக்கிறது. ஒரு வேளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல, பூஜ்ஜிய உமிழ்வை அடைய திட்டங்கள் வகுக்கப்படும் என அவர் அறிவித்தால் 51% சதவிதமானது 63% சதவிதமாக உயரும். பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை அடைய மிக முக்கிய நடவடிக்கைகைகள் எடுத்தாக வேண்டும். அவை அனைத்து நாடுகளும் நெடுங்க்காலத்திற்கான செயல் திட்டங்களும், புதிய அல்லது புதுப்பித்த NDC யை நடைமுறை படுத்த வேண்டும்.

 1. G-20 நாடுகளின் நிலை:

G-20 நாடுகள் மொத்தமாக 78% உலக GHG உமிழ்வுகளை வெளியேற்றுகின்றன. இந்நாடுகள் தங்களது உமிழ்வுகளை குறைக்குமானால் 2030குள் தற்போதுள்ள இடைவெளியை அடைத்துவிடலாம். இந்த கோவிட்-19 காலத்தை கணக்கில் கொள்ளாமல் ”கங்கன்”(cancun pledge) உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். கோவிட்-19ற்கு முன், நடத்தபட்ட ஆய்வில் தென் ஆப்ரிக்கா மட்டும் அவ்விலக்கை நெருங்கியது. கோவிட்-19 சுழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே அமெரிக்கா அந்த இலக்கை நெருங்குகிறது. கனடா, இந்தோனேசியா, மெக்ஸிகோ மற்றும் கொரியா போன்ற நாடுகள் கோவிட்-19ன் முழுவிளைவுகளை எடுத்தால் மட்டுமே இவை அவ்விலக்கை அடைகின்றன.

 1. 2019 உமிழ்வு இடைவெளி அறிக்கையுடன் ஒப்பிடு:

NDC-யின் கொள்கைகளை முழுவீச்சாக நடைமுறைப்படுத்தினால் 2030க்கான உமிழ்வு இடைவெளியானது குறைந்தபட்சம் 2℃/1.8℃/1.5℃என மூன்று வெப்பநிலை குறைக்க முடியும். இம்மூன்று வெப்பநிலை இடைவெளிகளை அடைய தனித்தனியான செயல்திட்டங்களை இப்போதிலிருந்து நெடுங்கால திட்டமாய் வகுக்க வேண்டும். 2019 வரை பெறப்பட்ட தகவலின்படி 2030குள் 1% சதவித உமிழ்வுகளையே குறைக்க முடியும். இந்த செயற்திட்டங்கள் தொடருமானால் 2030இல் வைக்கப்பட இலக்கினில் 3- 5Gt CO2e குறைவாகவே அடைய முடியும். அரசுகளுக்கிடையேயான காலநிலை மாற்றத்திற்கான குழு(ஐ.பி.சி.சி) புவிவெப்பமாவதலை குறைக்க எதிர்கால திட்டங்களை வகுத்துள்ளது. இந்த நிகழ்வுமுறைகள் குறைந்த செலவிலான நெடுங்கால முறைகளாகும்.  2030குள் அடைய வேண்டிய இலக்குகளை கொண்ட புதிய “NDC”யை அல்லது புதுப்பிக்கப்பட்ட NDCயை, 2020 நவம்பருக்குள் சமர்பிக்க வேண்டும். ஆனால், அதிக உமிழ்வுகளை வெளியேற்றும் எந்தவொரு நாடும் சமர்ப்பிக்கவில்லை. 2019இன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி 1% சதவித உமிழ்வை மட்டுமே குறைக்க முடியும்.

 1. குறைதிறன் கரிம பயன்பாட்டை அதிகரித்தல்:

கோவிட்-19 நிதி செலவினத்தில் அதிகமாக அதிதிறன் கார்பனில்  செலவிடப்பட்டுள்ளது. இது பொருளாதரத்தை விரைவில் மீட்டாலும், அதே வீரியத்தில் GHG உமிழ்வும் வெளியேறும். ஆதலால்,  குறைந்த திறனுள்ள கரிமங்களை பயன்படுத்துவதன் மூலம் பொருளாதரத்தை மீட்டெடுக்கலாம், உமிழ்வையும் கட்டுப்படுத்தாலம் .சில G-20 உறுப்பு நாடுகள், குறைந்த திறன் கொண்ட கரிமங்கள் மூலம்  பொருளாதரத்தை மீட்டுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில உறுப்பு நாடுகள், தங்களுடைய GDP-யில் இருந்து 3% சதவித பங்குகளை குறைதிறன் கரிம நடவடிக்கைகளுக்கு ஒதுக்கியுள்ளனர்.

 1. கப்பல் மற்றும் விமான போக்குவரத்தால் உயரும் கரிம உமிழ்வு:

இவ்விரு போக்குவரத்து துறைகள் கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டிற்கு சுமார் 2Gt CO2e உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதில் சுமார் 71% சதவித உமிழ்வுகள் சர்வதேச கப்பல் போக்குவரத்து மூலமும், 65% சதவிதம் சர்வதேச விமான போக்குவரத்து மூலமும் வெளியேறுகின்றன. இவ்வுமிழ்வுகள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கூட்டமைப்பில்,அனைத்து நாடுகள் சமர்ப்பிக்கும் உமிழ்வின் அறிக்கையில்  சேராது.

 1. உமிழ்வு இடைவெளியை குறைக்கும் திட்டங்கள்:

சர்வதேச போக்குவரத்து அமைப்பு, பெரிதும் அதிதிறன் கரிம எரிவாயுனை பெரிதும் சார்ந்துள்ளது.  எனவே, குறைதிறன் கரிம செயல்பாட்டினை உபயோகிக்க அதற்கான கால அளவை தர வேண்டும். தொழில்நுட்ப மேம்பாடு செய்து எரிபொருள் செயல் திறனை மேம்படுத்தினால் மட்டுமே CO2 உமிழ்வை கட்டுப்படுத்த முடியும். உயிரி எரிபொருள்கள், கார்பன் வாயு போன்றவை மிகவும் குறைந்த கார்பன் அளவை கொண்டவை. புதைபடிவ எரிபொருளை விட நீடித்து இருக்கக்கூடியவை. எனவே, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளில் குறைந்த கால எரிபொருள் மாற்றாக இவைகளை பயன்ப்படுதலாம். தேவைகளுக்கேற்ப விமானம் மற்றும் கப்பல்களின் வடிவங்கள் மாற்றி மின்சாரம் மற்றும் CO2 இல்லா ஹைட்ரஜனில் செயல்படக்கூடியதாக இருத்தல் வேண்டும். இந்த எரிப்பொருட்கள் விலை மதிப்புமிக்கதாக இருக்கும். விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளின் விலைகள் உயரும். அவசர தேவைக்கும்,நெடுந்தூர பயணத்துக்கும் மட்டுமே இச்சேவைகளை பயன்படுத்துவர். இதன் தேவைகள் குறைவதன் மூலம் உமிழ்வுகளை குறைக்க இயலும்.

 1. வாழ்வியல் முறையில் உமிழ்வு இடைவெளிகளை குறைத்தல்:

வாழ்க்கைமுறையில் ஏற்படக்கூடிய உமிழ்வுகள் கலாச்சார மரபுகள், கட்டமைக்கப்பட்ட நகரங்கள், நிதி மற்றும் கொள்கை கட்டமைப்புகளால் ஏற்படுகின்றன. அரசுகள் தனிப்பட்ட உமிழ்வுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்குள்ளது. பொது மக்களும் முன்வந்து அப்பெரும் மாற்றத்திற்கு கைக்கோர்க்க வேண்டும். நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய உமிழ்வுகள் பல்வேறு துறைகளுடன் சம்பந்தப்பட்டவை. அவற்றுள் முக்கியமானவை போக்குவரத்து துறையும், குடியிருப்பு பகுதிகளும் ஆகும். இவை தலா 20% சதவித பங்களிப்பை அளிக்கின்றது. இதில் முக்கியமானதாக கருதப்படுவது போக்குவரத்து துறையாகும். அருகாமை நகரங்களுக்கு செல்ல விமான போக்குவரத்தை குறைப்பதன் மூலம் ஆண்டிற்கு தலா 1.9 டன் CO2e சராசரியாக குறைக்க முடியும். வீட்டு உபயோக பொருட்களை துரிதப்படுத்துவதன் மூலம் ஆண்டிற்கு சாராசரியாக 1.5டன்  CO2e உமிழ்வை குறைக்கலாம்.

 1. வாழ்வுமுறையினால் ஏற்படும் உமிழ்வுகளின் இடைவெளிகளை வர்க்கத்தின் அடிப்படையில் சமமாக நிவர்த்தி செய்தல்:

பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கான 1.5℃-யை அடைய வேண்டுமானால், 2030குள் தனிநபர் உமிழ்வின் அளவை 2-2.5 டன் CO2e  ஆக குறைக்க வேண்டும். இதை அடைய 1% மக்கள்தொகை கொண்ட மேல்தட்டு வர்க்க மக்கள் தங்கள் உமிழ்வின் அளவினை 30% குறைத்தாக வேண்டும். அதேவேளையில், 50% உள்ள கீழ்த்தட்டு வர்க்க மக்கள் வெளியேற்றும் தனிநபர் உமிழ்வின் அளவானது அனுமதிக்கப்பட்ட அளவினை விட 3 மடங்கு குறைவாகவே உமிழ்வை வெளியேற்றுகின்றனர். இப்போது அவர்கள் வெளியேற்றும் அளவை காட்டிலும் இன்னும் மூன்று மடங்கு அதிகமாக உமிழ்வை வெளியேற்றினால் தான் மேல்தட்டு வர்க்க மக்கள் இப்போது வெளியேற்றும் உமிழ்வுகளின் அளவுகளை நெருங்க முடியும்.

 

ஊரடங்கு காலத்தில் மனரீதியிலும், வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியிலும் கடுமையான பாதிப்புக்குள்ளானோம். காலநிலை மாற்றமும் இதுபோன்ற கொடிய நோய் பரவுவதற்கு மிகமுக்கிய காரணமாக இருக்கின்றது. நாம் தற்போது சந்திக்கும் இயற்கை ரீதியான பிரச்னைகள், மழை நீரால் உருவான குட்டை நீர் போன்றதாகும். ஆனால் பெருங்கடல் போல் இருக்கும் காலநிலை மாற்றத்தை கவனிக்க தவறுகிறோம். இயற்கையை நாம் பெரிதும் சேதப்படுத்திய போதிலும் நமக்கு கடைசியாய் ஒரு வாய்ப்பினை இயற்கையே ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. அரசுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்த  போதிலும்  உமிழ்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த கோவிட்-19 அசாதாரண சுழலை மீட்டெடுக்க பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, அரசுகள் இச்சூழலை ஓர் வாய்ப்பாக பயன்படுத்தி பல்வேறு புதிய, நுட்பமான திட்டங்களை நடைமுறை படுத்திக்கொண்டு இருக்கிறது. முதற்கட்டமாக பாரிஸ் ஒப்பந்தத்தில் போடப்பட்டுள்ள தீர்மானத்தை குறிக்கோளாக வைத்து அதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. அரசுகளும் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்க தனிநபராக நமக்கான கடமைகளை நாமும் செய்ய வேண்டும். அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் உலகில் நிலைத்து வாழ முடியாது. அது இயற்கைக்கு எதிரானது. விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது. இப்பூவுலகில் இயற்கையை மிஞ்சும் ஆற்றல் எவருக்கும் இல்லை எனும் நிலையை அறிந்து இயற்கையோடு ஒன்றி வாழ பழகிக்கொள்ள  வேண்டும்.

 

 

 

 • லோகேஷ்

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments