Climate Leadership Program 2023 – Tamil Nadu / காலநிலை செயற்பாட்டாளர் பயிற்சித்திட்டம் 2023 – தமிழ்நாடு

CLP 2023 is a two month long intensive leadership training program for selected leaders of age group 20 to 35 with representation from all parts of Tamil Nadu. The main aim is to build leadership capacity to these change makers who could then work in their communities in climate adaptation, support global efforts to limit emissions, and bring about innovations to scale up technological and traditional knowledge based climate solutions.

காலநிலை செயற்பாட்டாளர் பயிற்சித்திட்டம் 2023, என்பது தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 20 முதல் 35 வயதிற்குட்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய இரண்டு மாதம் நடைபெறும் தீவிர பயிற்சி முகாம். இப்பயிற்சியின் முக்கிய நோக்கம், பங்கேற்பாளர்களிடம் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தெடுப்பதும், அவர்கள் தங்களது வசிப்பிடங்களில் உள்ளூர் அளவில் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்தவும் அதன் பாதிப்புகளுக்கு தகவமைத்துக் கொள்ளவும் பன்னாட்டு அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் முயற்சிகளுக்கு துணைநிற்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பண்பாட்டு அறிவுடன் கூடிய தொழில் நுட்பரீதியிலான அணுகுமுறைகளை உருவாக்குவதேயாகும். இந்த திட்டம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 8 வாரங்கள் நடைபெறும். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 மணி நேர அமர்வுகள் மட்டும் நடைபெறும். சென்னையில் 3 நாட்கள் நேரடியாக நடைபெறும் பயிற்சி வகுப்புடன் இது முடிவடைகிறது.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments