வறட்சியின் பிடியில் 25.1% இந்தியா; ஆகஸ்ட்-செப்டம்பர் மழைப்பொழிவு குறையும் அபாயம்

தென்னிந்தியப் பகுதிகளில் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் இயல்ல்பை விட குறைவான மழைப்பொழிவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலத்தின் இரண்டாம் பாதிக்கான மழைப்பொழிவு முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வுத்துறை 31.07.2023 அன்று வெளியிட்டது.

இதன்படி நாடு முழுவதும் ஆகஸ்ட், செப்டம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை ஒட்டி இருக்கும் அல்லது இயல்புக்கு சற்றே குறைவாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. இமயமலை, கிழக்கு மத்திய இந்தியா மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளை ஒட்டியுள்ள உட்பிரிவுகளின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு முதல் இயல்பை விட அதிகமான மழை பெய்யக்கூடும். தமிழ் நாடு உட்பட தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் இயல்பை விட குறைவான மழைப்பொழிவு இருக்கும் வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்தவரை, இமயமலை, கிழக்கு மத்திய இந்தியா மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளை ஒட்டிய உட்கோட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழை பெய்யக்கூடும். தமிழ் நாடு உட்பட தென் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் மேற்குப் பகுதிகளின் பல பகுதிகளிலும் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப நிலையைப் பொறுத்தவரை, ஆகஸ்ட், 2023 இல், தெற்கு தீபகற்பம், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளின் பல பகுதிகளிலும் இயல்பை விட மாதாந்திர வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். வட தீபகற்ப இந்தியா, கிழக்கு மத்திய இந்தியா மற்றும் இமயமலையின் சமவெளிப் பகுதிகளில் இயல்பு முதல் இயல்பை விட குறைவான வெப்பநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் அதி தீவிர மழைப்பொழிவு ஏற்பட்டும்கூட இந்திய நிலப்பரப்பில் குறைந்தது 25.1% பகுதிகள் வறட்சி போன்ற நிலைமைகளை எதிர்கொள்வதாகவும் வரம் வாரங்களில் கணிக்கப்பட்டுள்ள பலவீனமான பருவமழை சில பகுதிகளில் இந்த வறட்சி நிலைமை மோசமடையச் செய்யும் என Downtoearthல் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

ஐ.ஐ.டி-காந்திநகரால் நடத்தப்படும் இந்தியாவின் முதல் நிகழ்நேர வறட்சி கண்காணிப்பு தளமான வறட்சி முன் எச்சரிக்கை அமைப்பின் (DEWS) தரவுகளின்படி ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரபிரதேசம், வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம், லடாக் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் பாலைவனப் பகுதிகளின் சில பகுதிகள் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தரவுகளின்படி, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை முறையே 48%, 46% மற்றும் 22% மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலத்தில் (01.06.2023 – 31.07.2023) தமிழ்நாட்டில் மட்டும் 18 மாவட்டங்களில் மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாடு மற்றும் புதுவையில் மொத்தமாக 1% மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

dailyweekly
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments