2015ம் ஆண்டு காலநிலையின் நிலை

அமெரிக்க வானிலை சங்கம் “2015ம் ஆண்டு காலநிலையின் நிலை”” (State of Climate – 2015) ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக் கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள்: பச்சை இல்ல வாயுகளின் (Greenhouse gases) வெளியேற்றம் கடந்த ஆண்டுகளில் பதிவான அளவை விட மிகவும் அதிகமாக 2015ம் ஆண்டு இருந்துள்ளது. இதுவரை பதிவானவற்றில் 2015ம் ஆண்டே மிகவும் அதிக தட்பவெப்ப உள்ள ஆண்டாக பதிவாகியுள்ளது. இதற்கு “எல்-நியோ” ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறுகிறது ஆய்வறிக்கை. கடல் மட்டளவு 2015ம் ஆண்டு சுமார் 70 மிமீ அளவு 1993ம் ஆண்டு இருந்த அளவை விட உயர்ந்துள்ளது. உலகெங்கும் சூறாவளி காற்றின் தாக்கம் சுமார் 101 இடங்களில் நிகழ்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுகளைவிட அதிகமான எண்ணிக்கை. அறிக்கையை முழுமையாக படிக்க <http://www.ametsoc.net/sotc/Stateofthe Climate2015_hires.pdf>

இதையும் படிங்க.!