மீண்டும் மாடுகள் குதிரைகளாகும்:

காங்கிரஸ் தோற்க வேண்டும், பாஜக வர வேண்டும் என்று நிறைய பேர் பல்வேறு காரணங்களைக் கூறினார்கள். மக்களைப் பிரித்து வைத்துக்கொல்லும் அதே பார்ப்­பனத் தந்திரங்களே மீண்டும் கையாளப்படும். அணு உலை, ஈழ இனப்படுகொலை, எழுவர் விடுதலை போன்ற கூரிய கவனக்குவிப்பு மிக்கப் பிரிச்சனைகளில் காங்கிரஸைவிட மோசமான நிலைப்பாட்டைத்தான் பாஜக எடுக்கும். இதை ஒரு பெரிய வெற்றியாகப் பார்த்தோமானால் இன்னும் இருபத்தைந்து வருடங்­களுக்கு இந்துத்துவ விஷத்தை நிதானமாகப் பரப்புவதற்கு இந்த ஐந்து வருடங்களை எடுத்துக்­கொள்வார்கள். அடிப்படைக் கல்வியிலும் வரலாற்றிலும் தொல்லியல் துறையிலும் அடிப்படை மாற்றங்களைச் செய்யத் தொடங் குவார்கள். குறிப்பாக, ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதுதான். சமஸ்கிருதத்திலிருந்தே எல்லா மொழியும் தோன்றியது என் பார்கள். மாடுகள் குதிரைகளாகும்.

பள்ளிப் பாடங்களில் எல்லா மாற்றமும் தொடங்கும். அணு உலை, மரபணு மாற்றுப் பயிர்கள் இவையெல்லாமே நாட்டு நலனுக்கு அவசியமென்று பள்ளிக்குழந்தைகள் மனப்பாடம் செய்வார்கள். மதங் களை வைத்துப் பிரித்து பிற மதத்தை இழிவாக்கி அவர்களைக் கொல்வது சரி என்று திரைப்படங்கள் கூட வரக் கூடும். இந்திய நதிகளை இணைத்து கப்பல் விடலாம் என்று நம்முடைய தலைவர்களின் காமெடியும் இடை யிடையே இருக்கும். ஆனால் இவையனைத்தையும் முறியடிக்கும் விதைகள் அயோத்திதாசராலும் பெரியாராலும் அம்பேத்கராலும் விதைக்கப்பட்டுள்ளன. இன்று விதைகளை ஆயுதமாகப் பயன் படுத்த வேண்டியது நம் கடமையும் இயல்பும்.

வாண்டுமாமா என்னும் இயற்கையின் அற்புதம்:
கார்ட்டூனிஸ்ட் மாலியால் வாண்டுமாமா’ என்று பெயர் சூட்டப்பட்டவர் கிருஷ்ணமூர்த்தி. தமிழில் ஓர் எழுத்தாளர் குழந்தை இலக்கியத்திற்காகவே அர்ப்பணித்து நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியிருப்பது ஏழு கடல், ஏழு மலை தாண்டி… போன்ற அதிசயச் செயல்தான்.மேலும் நூற்றுக்கணக்கானபுத்தகங்களை எழுதியதால்அவை படைப்புத்திறன் குறந்தும் இல்லை .கற்பனையின் விரிவான வாசித்தல் அடர்த்தியாக உள்ளது.பல்வேறு புத்தகங்களை அவர் எழுத்தியிருந்தாலும் கங்கைபுத்தக நிலையம் 2008இல் வெளியிட்ட இயற்கை அற்புதங்கள் புத்தகம் நம்மை வியப்படையச் செய்கிறது. பூச்சிகளின் உலகை விரிவாக அறிவியல் பூர்வமாகவும் கற்பனைத் திறனுடனும் குழந்தைகளுக்காக எளிய தமிழில் எழுதியுள்ளார் வாண்டுமாமா. இதைப் பூச்சிகளின் புத்தகமென்றே சொல்லலாம். இப்புத்தகத்திலுள்ள 201 தலைப்புகளுக்கும் படங்களுடன், அறிவியல் விளக்கங்களுடன் அரிய தகவல்களைப் பொறுமையுடன் திரட்டி எழுதப்பட்டுள்ளது. பரவசமூட்டும் பறவைகள் என்ற புத்தகத்தையும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இயற்கை அற்புதங்கள் எவ்வளவு தொலை நோக்குடனும் பன்முகத்தன்மையுடனும் எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு அவர் முன்னுரையில் குறிப்பிடும் இவ்வரிகளைப் பாருங்கள்:

இந்த உலகை ஆள்வது நாம் தான் எ ன் று ம னி த ன்எண்ணிக் கொண்டிருக்கிறான். இன்றைய யுகம் பாலூட்டிகளின்யுகமா? மனிதனின் யுகமா? அல்லது அணு சக்தி யுகமா? பூச்சிகளின்யுகமாக? என்பதை சரித்திரம்இன்னும் முடிவு செய்யவில்லை.

வாண்டுமாமாவின் இழப்பு குழந்தைகளின் உலகத்திலிருந்து ஒரு மலர் உதிர்வதுபோலத்தான், உதிர்ந்த நட்சத்திரம்!

பூவுலகு மே 2014 இதழில் வெளியான கட்டுரை

  • ஆர்.ஆர்.சீனிவாசன்

இதையும் படிங்க.!