மீண்டும் மாடுகள் குதிரைகளாகும்:

0 Comments

காங்கிரஸ் தோற்க வேண்டும், பாஜக வர வேண்டும் என்று நிறைய பேர் பல்வேறு காரணங்களைக் கூறினார்கள். மக்களைப் பிரித்து வைத்துக்கொல்லும் அதே பார்ப்­பனத் தந்திரங்களே மீண்டும் கையாளப்படும். அணு உலை, ஈழ இனப்படுகொலை, எழுவர் விடுதலை போன்ற கூரிய கவனக்குவிப்பு மிக்கப் பிரிச்சனைகளில் காங்கிரஸைவிட மோசமான நிலைப்பாட்டைத்தான் பாஜக எடுக்கும். இதை ஒரு பெரிய வெற்றியாகப் பார்த்தோமானால் இன்னும் இருபத்தைந்து வருடங்­களுக்கு இந்துத்துவ விஷத்தை நிதானமாகப் பரப்புவதற்கு இந்த ஐந்து வருடங்களை எடுத்துக்­கொள்வார்கள். அடிப்படைக் கல்வியிலும் வரலாற்றிலும் […]

காட்டுயிர் புகைப்படம் – கலையா? கொலையா?

0 Comments

ஆயிரம் பக்கம் எழுதினாலும் புரியவைக்க முடியாத செய்தியினை ஒரே ஒரு புகைப்படம் ஆயிரம் அர்த்தங்களைப் புரிய வைத்துவிடும். அதிலும் காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களின் பணி சவாலானது. இயற்கையான வெளிச்சத்தில் எடுக்க வேண்டும். மனிதர்களைப்போல் விலங்குகளை ‘போஸ்’ கொடுக்கச் சொல்லி எடுக்க முடியாது. உணவு, தண்ணீர் இல்லா மல் நீண்ட நேரம் பொறுமையுடன் இருக்கவேண்டும். நாலாபுறமும் பார்வையைச் செலுத்தியபடி இருக்க வேண்டும். இன்னும் பற்பல சவால்கள். டிஜிட்டல் கேமராவின் வரவும் நேசனல் ஜியாக்கிரபி, டிஸ்கவரி, அனிமல் பிளானெட் சேனல்களும், […]

காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் – சு.பாரதிதாசன்

0 Comments

காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்   காட்டுக் கோழியைத் துரத்தி வந்த பூனை திகைக்க வழித்தடம் மறிபட்டு யானை ஒதுங்க வலசை கிளம்பிய கதிர்க்குருவி தடுமாற காட்டின் நெஞ்சைக் கீறிக்கீறி எழுகிறது ஒரு தார்ச்சாலை… –  அவை நாயகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலக்காடு ரயில் மார்க்கத்தில் யானைக் கூட்டம் ஒன்று அடிபட்டு தலை வேறு, முண்டம் வேறு, கால் வேறு எனக் கிடந்ததையும், கர்ப்பிணி யானையின் வயிற்றுக்குள் இருந்த குட்டியும் தூக்கி வீசப்பட்டு […]

காட்டுயிர் மீதான மதத்தின் வன்முறை: கோவில் யானைகள்

0 Comments

யானைகளை கோவிலில் வைத்துப் பராமரிப்பதும் ஆண்டுக்கொரு முறை புத்துணர்வு முகாம்களுக்கு அனுப்பவதும் பண்டிகைகளில் ஊர்வலமாக அழைத்துவரப்படுவது குறித்தான விமர்சனங்களும் விவாதங்களும் பெருமளவில் இந்திய தமிழ்ச்சமூகத்தில் முன்னெடுக்கப்படவில்லை. காரணம், இந்திய தமிழ்ச்சமூகத்தின் பெரும்பாண்மையான இயற்கை/காட்டுயிர் ஆர்வலர்கள் இந்து மதத்தின் புனிதக்குறியீடான பசுமாட்டை காப்பதே தங்களது ஆகச்சிறந்த செயல்பாடாக கருதுவதாலும் கோவிலில் யானைகளை வளர்ப்பது கோவிலுக்கு பெருமை சேர்க்கும் குறியீடாக (அவர்களுக்கு) தெரிவதாலும் இப்பேருயிரின் இன்னல்கள் இச்சனாதன வைதீக இயற்கையார்வளர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. […]

வனவழிகாட்டியுடனான ஒரு நேர்காணல்

0 Comments

சரணாலயங்களில் வழிகாட்டியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை செய்வதென்பது சுலபமானது அல்ல. பெரும்பாலான சுற்றுலாபயணிகள் வழிக்காட்டிகளை மிக சாதாரணமாக, மரியாதை குறைவுடன் நடத்துவர். ஆனால், சிலர் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தங்கள் பணியினை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் 39 வயதாகும் ராமராவ் நெகர். மகாராஷ்டிர மாநிலத்தின் டடோபா கிராமத்தில் உள்ள அம்ரேட் – கர்ஹன்ட்லா சரணாலயத்தில் வழிகாட்டியாக இருக்கும் ராமராவ் நெகரை பிட்டு சேஹல் நேர்காணலுக்காக சந்தித்து உரையாடினார். ராம்ராவின் அறிவும், சமநிலையும் அவரை ஒரு இயற்கையிலாளராக வெளிப்படுத்துகிறது. இந்தியாவில், வனசுற்றுலாவை […]

கை தவறிப் போன வண்ணத்துப் பூச்சி…!

0 Comments

‘வரியுடல் சூழக் குடம்பைநூறு எற்றில் போக்குவழி அடையாதுள்ளுயிர் விடுத்தலின் அறிவுபுறம் போய வுலண்டது போல’ கல்லாடம் 25-28. புழு தனது உடலை சுற்றி நூலினால் கூட்டை ஏற்படுத்திக் கொண்டு வெளிச்செல்ல வழியின்றி உயிர் விடுதலைப் பற்றி மேற்கண்ட பழம் பாடல் வரிகள் குறிப்பிடுகிறது. வண்ணத்துப் பூச்சியின் கூட்டுப்புழு பருவம் என்று இதனை, இன்றைய அறிவியல் கண்டறிந்து கூறுகிறது. முட்டையில் இருந்து புழு, கூட்டுப் புழு, வண்ணத்தி என அதன் முழுமையான வாழ்வியல் செயல்பாட்டை நேரில் பார்த்து இரசிக்கும் […]